Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வேஸ்ட் பேப்பர் யுடியூப் சேனல் – Touring Talkies https://touringtalkies.co Thu, 26 Nov 2020 08:40:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வேஸ்ட் பேப்பர் யுடியூப் சேனல் – Touring Talkies https://touringtalkies.co 32 32 நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! https://touringtalkies.co/ponnu-pidichirukku-producer-leaves-a-director-in-hotel/ Thu, 26 Nov 2020 08:39:42 +0000 https://touringtalkies.co/?p=10392 இப்படியெல்லாம் ஒரு இயக்குநரை அவமானப்படுத்த முடியுமா என்பதுபோல தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானத்தைச் சந்தித்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா. இது பற்றி அவருடைய யு டியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “இது நடந்தது 1983-ம் வருஷம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த திரைப்படம் ‘பொண்ணு புடிச்சிருக்கு’. இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தது நான்தான். மொத்த யூனிட்டும் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருந்தோம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ‘தேஜாஸ்ரீ’ என்ற […]

The post நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.

]]>
இப்படியெல்லாம் ஒரு இயக்குநரை அவமானப்படுத்த முடியுமா என்பதுபோல தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானத்தைச் சந்தித்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.

இது பற்றி அவருடைய யு டியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “இது நடந்தது 1983-ம் வருஷம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த திரைப்படம் ‘பொண்ணு புடிச்சிருக்கு’. இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தது நான்தான். மொத்த யூனிட்டும் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருந்தோம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ‘தேஜாஸ்ரீ’ என்ற பெண்ணை ஆந்திராவில் இருந்து நான் அழைத்து வந்திருந்தேன். அந்தப் பெண்ணிற்கு சரியாக நடிப்பு வரவில்லை. கூச்சம், வெட்கம் இதெல்லாம் சுத்தமாக வரவில்லை. இதை ஒரு நாள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பின்பு, அடுத்த நாள் ஷூட்டிங்கை தொடரலாம் என்று சொல்லியிருந்தேன்.

அன்றிரவு ஹோட்டலில் தூங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்தபோது என்னையும், கேமிராமேனையும் தவிர மொத்த யூனிட்டும் காணவில்லை. அனைவரையும் அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார்.

நாங்கள் காரணம் புரியாமல் கீழே வந்து பார்த்தபோது ரிசப்ஷனில் எங்கள் இருவருக்கும் சேர்த்து 600 ரூபாயைக் கொடுத்து வைத்திருக்கிறார் தயாரிப்பாளர். “அவங்களை மெட்ராஸுக்குக் கிளம்பிப் போகச் சொல்லுங்க” என்று சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். எனக்கு டைரக்சன் சரியா வரலைன்னு தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொன்னாராம்.

எனக்கு மிகப் பெரிய அவமானமாக இருந்தது. அந்த அவமானத்துடனேயே பஸ்ஸில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். அன்றைக்கே நினைத்தேன். நான் ஒரு நல்ல இயக்குநராக வந்து காட்ட வேண்டும் என்று உறுதியெடுத்தேன்.

அடுத்து 8 மாதங்கள் எந்தப் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் ஒதுங்கியிருந்தேன். கதைகளை எழுதினேன். வாய்ப்பு தேடி அலைந்தேன். கடைசியாக ‘பிள்ளை நிலா’ படத்தை இயக்கும் வாய்ப்பு என் குருநாதர்களில் ஒருவரான கலைமணி மூலமாக எனக்குக் கிடைத்தது.

அதன் பின் வரிசையாக பல படங்களை இயக்கினேன். நானும் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவனாக வளர்ந்த பின்பு.. ஒரு நாள் பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் “டைரக்டரே…” என்று அழைத்தார். யார் அழைத்தது என்று தேடி அவரருகில் போய் பார்த்தேன்.

அது தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. “என்னங்க ஸார்…?” என்றேன். “நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்களேன்…” என்றார். இந்த ஒரு நாளுக்காகத்தான் இத்தனை ஆண்டுகளாக நான் காத்திருந்தேன் போலும். “ஸார்.. உங்க பார்வையில நான் இயக்குநரே இல்லை. உங்களுக்கு இயக்குநரா இங்க பல பேர் இருக்காங்க.. அவங்களை வைச்சே நீங்க படம் பண்ணுங்க.. நான் உங்களுக்குப் படம் பண்ண மாட்டேன்..” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் என்னால் மறக்க முடியாத ஒரு அவமானச் சம்பவம் இதுதான்..” என்றார் இயக்குநர் மனோபாலா.

The post நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.

]]>
“எனது முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அனுபவப் பேச்சு..! https://touringtalkies.co/producer-ravindhar-chandrasekar-interview-about-his-first-movie/ Sat, 21 Nov 2020 05:06:23 +0000 https://touringtalkies.co/?p=10255 தனது முதல் படத்திலேயே தன்னை படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஏமாற்றியதாக சிரித்தபடியே சொல்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் அவர் தயாரித்த முதல் படமான ‘நளனும், நந்தினியும்’ படத் தயாரிப்பின்போது தான் பட்ட அவஸ்தைகளை சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, “நான் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கே நடந்த ஒரு கலாச்சார விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து சில கலைஞர்களை அழைத்து […]

The post “எனது முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அனுபவப் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
தனது முதல் படத்திலேயே தன்னை படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஏமாற்றியதாக சிரித்தபடியே சொல்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.

சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் அவர் தயாரித்த முதல் படமான ‘நளனும், நந்தினியும்’ படத் தயாரிப்பின்போது தான் பட்ட அவஸ்தைகளை சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நான் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கே நடந்த ஒரு கலாச்சார விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து சில கலைஞர்களை அழைத்து வரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.

அது குறித்து நான் சென்னையில் இருந்த ஒரு முகநூல் நண்பர் மைக்கேல் என்பவரிடம் பேசும்போது அவரோ எனக்குள் சினிமா ஆசையை ஆழமாக ஊன்றிவிட்டார். சினிமா தயாரிப்பு என்பது மிகச் சுலபமான வேலை என்று அவர் சொல்லி என் மனதை மாற்றிவிட்டார்.

எனக்கும் சின்ன வயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் மிக ஆர்வம் இருந்தது. ஆனால் சினிமா துறைக்குள் கால் வைப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. சரி.. நாம எடுத்துக் காட்டுவோமே என்று அலட்சியமாக நினைத்துதான் படத் தயாரிப்பில் இறங்கினேன்.

என்னுடைய முதல் படம் ‘நளனும் நந்தினியும்’. எனக்குள் சினிமா ஆசையைத் தூண்டி அந்த மைக்கேல்தான் படத்தில் நாயகனாக நடித்தார். படத்தில் இயக்குநரைத் தவிர மற்ற அனைவருமே நன்கு தெரிந்த முகங்கள்தான். ஆனால், எனக்கு எந்த அளவுக்குத் தண்ணி காட்ட வேண்டுமோ அத்தனையும் காட்டிவிட்டார்கள்.

மொத்த பட்ஜெட்டே இரண்டரை கோடியில் இருந்து மூன்றரை கோடிவரையிலும்தான் என்று முதலில் பேசினோம். பின்பு இரண்டரை கோடிதான் பட்ஜெட் என்று தீர்மானமாகப் பேசி முடித்திருந்தோம்.

ஆனால் படம் துவங்கி 10 நாட்களில் 90 லட்சம் காலி. மொத்தம் 40 நாட்கள் ஷூட்டிங் என்று பிக்ஸ் செய்திருந்தோம். இப்பவே இப்படின்னா மீதமுள்ள நாட்களுக்கும் சேர்த்தால் எவ்வளவு செலவாகும் என்று யோசித்தேன்.

ஆனால் எப்போதும்போல 90 லட்சம் போட்டாச்சு.. அதை எடுக்கணும்ன்னா மீதத்தையும் போட்டுத்தான் ஆகணும்ன்னு சுத்தியிருந்த எல்லாரும் சொல்லிச் சொல்லி திரும்பவும் அதில் இறங்க வைத்தார்கள். கடைசியில் படம் 2 மடங்கு செலவைத் தொட்டுவிட்டது.

அந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பு நிர்வாகி சுத்த பிராடு. அனைத்திலும் கமிஷன் அடித்திருக்கிறார். இதுவே எனக்குத் தெரியாது. பல நடிகர், நடிகைகளுக்கு அதிகச் சம்பளத்தை பிக்ஸ் செய்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் அப்போது வெறும் 2 லட்சம் ரூபாய்தான் ஒரு படத்துக்கு வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் என் படத்தில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.

இது பற்றி பின்னர் அவரிடத்தில் நான் பேசியபோது நான் எடுத்து எடுத்த படங்களில் தனது சம்பளத்தை குறைத்து எனக்கு உதவி செய்தார். கலை இயக்குநராக நான் அறிமுகப்படுத்திய நபரோ 11 வீடுகளுக்கு பெயிண்ட் அடித்ததாகச் சொல்லி ஒரு வீட்டுக்கு 1 லட்சம் என்று பில் எழுதி வாங்கிச் சென்றுவிட்டார். இப்படி ஆளாளுக்கு அடித்துக் கொண்டு போனதால் என் கண் முன்பாகவே எனது பணம் தண்ணீராக செலவானது.

இதோடு கூடவே தேவையில்லாமல் ‘சுட்ட கதை’ என்ற பெயரில் அடுத்தப் படத்தையும் துவக்கி அதையும் கடன் வாங்கி முடித்துவிட்டேன். இந்த இரண்டு படத்தையும் தயாரித்து கையில் வைத்துக் கொண்டு அதை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடுபட்டுவிட்டேன்..” என்று நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார்  ரவீந்தர் சந்திரசேகரன்.

The post “எனது முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அனுபவப் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>