Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
விஜயகாந்த் – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 Mar 2023 08:46:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png விஜயகாந்த் – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! https://touringtalkies.co/actor-vijayakanth-helped-a-lot-for-actors/ Mon, 13 Mar 2023 08:43:10 +0000 https://touringtalkies.co/?p=30604 தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அடுத்தவருக்கு உதவி செய்வது என்றால் ஓடோடி வருவார். அப்படியோர் நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகர் மீசை ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார். “மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட […]

The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அடுத்தவருக்கு உதவி செய்வது என்றால் ஓடோடி வருவார். அப்படியோர் நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகர் மீசை ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.

“மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட முக்கியமாக, இந்த விசயம், யாருக்கும் தெரியக்கூடாது என்றார். இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது நெகிழ்ச்சியில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்த் கொள்கையை மாற்றிய இயக்குநர்! https://touringtalkies.co/vijayakanth-is-the-director-who-changed-the-policy/ Thu, 27 Oct 2022 11:36:42 +0000 https://touringtalkies.co/?p=26103 தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக முத்திரை பதித்தவர் விஜயகாந்த். திரைப்படமாக இருந்தாலும்  சில கொள்கைகளை வைத்திருந்தார் அவர். குறிப்பாக, தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்கக்கூடாது.. நாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்பவைதான் அவை. அதோடு இன்னொரு கொள்கையையும் வைத்திருந்தார். தனது படத்தில் கிளைமாக்ஸ் சோகமாக இருக்கக்கூடாது என்பதுதான். இந்த நிலையில்தான் இயக்குநர் ஏ.ஆர். முருதாஸ், விஜயகாந்திடம் ஒரு கதையைச் சொல்லி கால்ஷீட் பெற நினைத்தார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் சோகமாகத்தான் இருக்கும். படத்துக்கு […]

The post விஜயகாந்த் கொள்கையை மாற்றிய இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக முத்திரை பதித்தவர் விஜயகாந்த். திரைப்படமாக இருந்தாலும்  சில கொள்கைகளை வைத்திருந்தார் அவர். குறிப்பாக, தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்கக்கூடாது.. நாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்பவைதான் அவை.

அதோடு இன்னொரு கொள்கையையும் வைத்திருந்தார். தனது படத்தில் கிளைமாக்ஸ் சோகமாக இருக்கக்கூடாது என்பதுதான்.

இந்த நிலையில்தான் இயக்குநர் ஏ.ஆர். முருதாஸ், விஜயகாந்திடம் ஒரு கதையைச் சொல்லி கால்ஷீட் பெற நினைத்தார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் சோகமாகத்தான் இருக்கும். படத்துக்கு அதுதான் சரியாக இருக்கும் என நினைத்தார்.  ஆகவே எப்படியாவது விஜயகாந்தை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் கதை சொல்ல சென்றார்.

கதையை முருகதாஸ் விவரிக்க.. ரசித்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் விஜயகாந்த. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க முருகதாஸூக்கு உள்ளுக்குள் ஒருவித பயம் இருந்தது.. எங்கே நடிக்க மறுத்துவிடுவாரோ என்று.

ஆனால் கிளமைக்ஸை சொன்னவுடன் சில விநாடி யோசித்த விஜயகாந்த், “சரி, இந்தப் படத்துக்கு இந்த கிளைமாக்ஸ்தான் சரியாக வரும்” என ஒப்புக்கொண்டார்.

அந்தப் படம்தான் ரமணா. பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் நடித்த படங்களிலேயே வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட மிகச் சில படங்களில் நெகடிவ் கிளைமாக்ஸ் இருந்தது உண்டு. ஆனால் அவர் பெரிய ஹீரோ ஆன பிறகு ரமணா மட்டும்தான் சோகமான முடிவு இருந்த திரைப்படம்.

The post விஜயகாந்த் கொள்கையை மாற்றிய இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>