Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வாடகை தாய் – Touring Talkies https://touringtalkies.co Wed, 26 Oct 2022 15:43:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வாடகை தாய் – Touring Talkies https://touringtalkies.co 32 32 வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! https://touringtalkies.co/surrogate-mother-case-nayanthara-vignesh-shivan-is-not-guilty-investigation-committee-announcement/ Wed, 26 Oct 2022 15:41:39 +0000 https://touringtalkies.co/?p=26022 திருமணமான நான்கே மாதங்களில் திடீரென நயன்தாராவும் விக்னேஷ்வனும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த பல கேள்விகளும் எழுந்தன. வாடகை தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு பல விதிமுறைகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது என்றும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தே தாம் வாடகைச் தாய் மூலம் […]

The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
திருமணமான நான்கே மாதங்களில் திடீரென நயன்தாராவும் விக்னேஷ்வனும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த பல கேள்விகளும் எழுந்தன.

வாடகை தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு பல விதிமுறைகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.

ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது என்றும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தே தாம் வாடகைச் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து தகவல்களும் வெளியாகியிருந்தது.

இவர்களின் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை  தனிக் குழுவையே அமைத்தது. இப்போது இந்த விவகாரம் குறித்து அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் முறையான ஆதரங்களை சமர்ப்பித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுத்தவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சரியான நெறிமுறைகளை தம்பதிகள் இருவரும் பின்பற்றியதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டே பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் அது தொடர்பான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தம்பதியினரில் யாாராவது ஒருவருக்கு குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் தம்பதியினர் இருவருமே கடந்த 2020-ம் ஆண்டே இதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் சொல்கிறது.

ஆனால் இவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சரியான ஆவணங்களை மருத்துவ நிர்வாகம் முன் வைக்க தவறியதாகவும் இதனால் அந்தத் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவாரணைக் குழு புகார் அளித்துள்ளது.

அதில் இவர்களுக்கு மருத்துவராக இருந்தவர் சரியான சிகிச்சைகளை பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளை தனியார் மருத்துவமனை ஒழுங்காக பராமரிக்கவில்லை. இதனால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.


The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>