Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வசந்தபாலன் – Touring Talkies https://touringtalkies.co Sun, 12 Dec 2021 09:45:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வசந்தபாலன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெயில் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/jail-movie-review/ Sun, 12 Dec 2021 09:45:00 +0000 https://touringtalkies.co/?p=19800 இயக்குநர் வசந்தபாலன் படம் என்றாலே நல்லசினிமாவை எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்படியான தனித்துவமான படைப்புகளை வழங்கியவர் வசந்தபாலன். அவரது இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’, ‘வெயில்’ இரண்டுமே உலக சினிமாக்களுக்கு சவால்விடும் படங்கள். இடையில் ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ என இரண்டு சறுக்கல்கள். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ‘ஜெயில்’ மூலமாக வந்திருக்கிறார். ‘ஜெயில்’ ரசிகர்களை உள்ளிழுத்ததா? படம் துவங்கும்போதே படத்தின் மையக் கருவை வசந்தபாலனின் குரல் பதிவு செய்கிறது. அந்தப் […]

The post ஜெயில் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வசந்தபாலன் படம் என்றாலே நல்லசினிமாவை எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்படியான தனித்துவமான படைப்புகளை வழங்கியவர் வசந்தபாலன்.

அவரது இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு’, ‘வெயில்’ இரண்டும உலக சினிமாக்களுக்கு சவால்விடும் படங்கள். இடையில் அரவான்’, ‘காவியத் தலைவன்’ என இரண்டு சறுக்கல்கள். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ‘ஜெயில்’ மூலமாக வந்திருக்கிறார். ‘ஜெயில்’ ரசிகர்களை உள்ளிழுத்ததா?

படம் துவங்கும்போதே படத்தின் மையக் கருவை வசந்தபாலனின் குரல் பதிவு செய்கிறது. அந்தப் பதிவின்படி பார்த்தால் இக்கதை அடித்தட்டு மக்களுக்கு நிலம் மறுக்கப்படுவதால் அவர்கள் வாழும் காலனிகளே அவர்களுக்கு ஜெயிலாக மாறுகிறது என்பதே.

மேலும் நிலம் விட்டு நிலம் விட்டு தொடர்ந்து அடித்தட்டு மக்களை விரட்டும்போது அவர்களின் உளவியலும் மாறுபாட்டுக்குள்ளாகி சிலரை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது. அப்படிச் செல்லும் சிலரை அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாக வசந்தபாலன் குரல் வழிக் கதை சொல்கிறது.

ஆனால் படத்தின் பயணமோ வேறோர் கோணத்தில் பயணிக்கிறது. படத்தின் துவக்கத்தில் ஹீரோ ஒரு திருடன் என காட்டப்படுகிறது. ஒரு ஐ போனை மிரட்டி திருடுவதில் ஆரம்பிக்கும் அவர் தொடர்ந்து திருட்டு வேலைகளைச் செய்கிறார்.

அவருக்கு ராமு என்ற போதைப் பொருள் விற்கும் நண்பனும் உண்டு. இன்னொரு நண்பரான பசங்க பாண்டி இவர்களோடு நட்பில் இருந்தாலும் தொழில் விசயத்தில் இவர்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். இந்த மூவரின் நட்பை ஒட்டி படம் பயணிக்கும்போது இவர்களின் எதிர்கேங் மூலமாக சில பிரச்சனைகள் வருகிறது.

அந்தப் பிரச்சனையை காவல் துறையும், அரசியல்வாதிகளும் ஊக்கவிக்கிறார்கள். அப்படி பெரிதாக வெடிக்கும் ஒரு பிரச்சனையில் ஜீவியின் நண்பர் ராமு இறந்துவிடுகிறார். அவரின் இறப்பிற்குப் பின்னால் இருக்கும் சதி வேலைகளை ஜீவி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு திரில்லர் படம் போன்ற திரைக்கதையாக்கத்தால் படத்தை எதார்த்த சினிமாவாக பார்க்க முடியவில்லை.

படத்தில் ஜீவி பிரகாஷ் வடசென்னை வாலிபனாக நன்றாக நடித்துள்ளார். அவருக்கான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக இருக்கிறது. நிச்சயம் அவை ரசிகர்களை ஈர்க்கும். நாயகியும் வடசென்னைப் பெண்ணாக மாறி ஆச்சர்யம் காட்டுகிறார்.

அவர் ஜீவி பிரகாஷை காதலித்ததுக்கு சொல்லும் காரணம் ரசனை. ராதிகா ஜீவியின் அம்மாவாக வருகிறார். அவரின் அனுபவம் அவரது நடிப்பில் வெளிப்படுகிறது. அவரது கேரக்டரை இயக்குநர் இன்னும் வலிமைப்படுத்தி இருக்கலாம்.

வில்லனாக வரும் ரவிமரியா பல இடங்களில் மிரட்டுகிறார். சில இடங்களில் அவரேதான் வில்லனா? காமெடியனா? என மிரள்கிறார். அவரது கேரக்டர்கள் போலவே நிறைய இன்ஸ்பெக்டர்கள் நிஜத்தில் இருப்பதால் அக்கேரக்டர் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஜீவி போலவே ராமு (இசை அமைப்பாளர் சிற்பியின் மகன்) ராக்கி என்ற கேரக்டரில் வாழ்ந்துள்ளார். பசங்க’ பாண்டியும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் ஜெயிலில் இருந்து வந்து தன் அம்மாவைச் சந்திக்கும் இடம் உருக்கம். அவரது காதலியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பும் அருமை. நல்லவேளை படத்தில் இந்தக் காதலர்களை வசந்தபாலன் பிரிக்கவில்லை.

படத்தில் நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும் முத்திரைப் பதிக்கிறது. நடிகர்களை நடிக்க வைப்பதில் தானொரு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்து இருக்கிறார் வசந்தபாலன்.

படத்தின் பாடல்கள் படம் வெளியாகும் முன்பே பெரிய வெற்றி பெற்றிருப்பதால் பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் உற்சாகம் பிறக்கிறது. பின்னணி இசையிலும் ஜீவி பிரகாஷ் அசத்தியிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவைப் பற்றி தனிப்பதிவே எழுதலாம். சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தனித்த ஆளுமை செலுத்தியுள்ளார். குறிப்பாக  ரு கொலைக் காட்சியில் ஒளிப்பதிவு மிரட்டல்.

மிகவும் ஸ்ட்ராங்கான மையக் கதை இருந்தும் படத்தை ஒரு திரில்லர் பேட்டர்னில் கொண்டு போயிருப்பதுதான் சின்ன நெருடல். ஏன் என்றால் வசந்தபாலன் குரல் வழியாக சொன்ன கருத்து கதையில் பெரிதாக இல்லை. ஆனாலும் வசந்தபாலனின் ட்ரேட்மார்க் முத்திரைகள் படத்தின் இருக்கின்றன.

பெரிய எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றால் இந்த ‘ஜெயில்‘ படம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

RATINGS : 3.5 / 5

The post ஜெயில் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“தமிழ் சினிமா மூச்சுத் திணறுகிறது” – இயக்குநர் வசந்த பாலனின் ஆதங்கம்..! https://touringtalkies.co/tamil-cinema-is-suffocating-director-vasantha-balans-comments/ Tue, 31 Aug 2021 10:52:17 +0000 https://touringtalkies.co/?p=17507 “தமிழ்ச் சினிமாவுலகம் உண்மையாகவே மூச்சுத் திணறுகிறது” என்று பிரபல திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் கருத்துத் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் இயக்குநர் ரோஜின் தாமஸின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹோம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட விமர்சகர்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு மொழியைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக் குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். இந்த ‘ஹோம்’ பார்த்துவிட்டு இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் […]

The post “தமிழ் சினிமா மூச்சுத் திணறுகிறது” – இயக்குநர் வசந்த பாலனின் ஆதங்கம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவுலகம் உண்மையாகவே மூச்சுத் திணறுகிறது” என்று பிரபல திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் இயக்குநர் ரோஜின் தாமஸின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹோம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட விமர்சகர்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு மொழியைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக் குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.

இந்த ‘ஹோம்’ பார்த்துவிட்டு இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் இது குறித்து எழுதியிருப்பது இதுதான் :

“கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்… வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ‘ஹோம்’ திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.

மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்…” என்று வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

The post “தமிழ் சினிமா மூச்சுத் திணறுகிறது” – இயக்குநர் வசந்த பாலனின் ஆதங்கம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது https://touringtalkies.co/director-vasanthabalans-new-movie-starts-with-poojai/ Thu, 18 Feb 2021 06:52:15 +0000 https://touringtalkies.co/?p=13149 இயக்குநர் ஷங்கரிடம் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ‘ஆல்பம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியுள்ளார். தற்போது வசந்தபாலன் தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ‘ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பள்ளிக் காலத்தில் தன்னுடன் படித்த மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்னும் திரைப்பட […]

The post இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கரிடம் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ‘ஆல்பம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியுள்ளார்.

தற்போது வசந்தபாலன் தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

பள்ளிக் காலத்தில் தன்னுடன் படித்த மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகத் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்புதான் இன்று காலை சென்னையில் துவங்கியது. இந்தப் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

வெயில்’, ‘ஜெயில்’ ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசைக்காக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம்.ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார். நிர்வாக தயாரிப்பாளர்காக பிரபாகரும், லைன் புரொட்யூசராக நாகராஜ் ராக்கெப்பனும் பணியாற்றுகிறார்கள்.

“தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும்…” என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

The post இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது appeared first on Touring Talkies.

]]>