Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
லால் – Touring Talkies https://touringtalkies.co Mon, 20 Dec 2021 05:35:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png லால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 மலையாள நடிகர் சங்கத்தில் மோகன்லாலுக்கு ஏற்பட்ட தோல்வி https://touringtalkies.co/amma-association-election-2021-result-news/ Mon, 20 Dec 2021 05:34:56 +0000 https://touringtalkies.co/?p=19916 மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் ஆதரவு பெற்றவர்கள் தோல்வியடைந்தது மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதன்படி 2018-ம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதேபோல் பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக […]

The post மலையாள நடிகர் சங்கத்தில் மோகன்லாலுக்கு ஏற்பட்ட தோல்வி appeared first on Touring Talkies.

]]>
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் ஆதரவு பெற்றவர்கள் தோல்வியடைந்தது மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதன்படி 2018-ம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதேபோல் பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக ஜெயசூர்யாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் போட்டி ஏற்பட்டுவிட்டது.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கும் இந்த முறை பெண்களே வரட்டும் என்று மோகன்லால் விரும்பினார். ஆனால் மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரான மணியம் பிள்ளை ராஜூ இந்தப் பதவிக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மேலும் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் இதே பதவிக்குப் போட்டியிட்டனர். மணியம் பிள்ளை ராஜூவை வாபஸ் வாங்க வைக்க மோகன்லால் பெரும் முயற்சி செய்தும் அவர் மறுத்துவிட்டதால் தேர்தல் உறுதியானது.

இதேபோல் 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 14 பேர் போட்டியிட்டனர். இதிலும் சிலரை வாபஸ் வாங்க வைக்க மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இது முடியாமல் போக வேறு வழியில்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சங்கம் ஆரம்பித்து 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் முதல் முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் திடீரென்று மோகன்லாலின் சார்பில் 2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆஷா சரத்தும், ஸ்வேதா மேனனும் வெற்றி பெற வேண்டும் என்றும், 11 செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் லால், நாசர் லத்தீப், விஜய் பாபு ஆகிய 3 பேரைத் தவிர மற்றவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதாம்.

இதைப் பார்த்த துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மணியம்பிள்ளை ராஜூ கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். ஏனெனில் அவர் மோகன்லாலில் பால்ய கால நண்பர். இருவரும் பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகப் படித்து சினிமாவிலும் ஒன்றாகவே நடிக்கத் துவங்கியவர்கள். ஆரம்பக் கால மோகன்லாலின் படங்களில் இவரும், ஜெகதீஷும்தான் மோகன்லாலின் நண்பர்களாக வருவார்கள்.

“இது எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. மோகன்லால் எனது மிக நெருங்கிய நண்பர். அப்படியிருந்தும் அவர் இப்படி செய்திருப்பது வருத்தத்திற்குரியது..” என்று குறிப்பிட்டார் மணியம்பிள்ளை ராஜூ.

மூத்த நடிகரும், சங்கத்தின் பொருளாளருமான சித்திக் தனது முகநூல் பக்கத்தில் மணியம்பிள்ளை ராஜூவைக் கண்டித்து எழுத.. திடீரென்று மலையாள நடிகர், நடிகைகளிடையே இந்தப் பிரச்சினை பரபரப்பானது.

“அம்மா சங்கத்தின் அஸ்திவாரத்தை அசைக்க முயல்பவர்கள் சங்கத்தின் பொறுப்பிற்கு வரக் கூடாது. அவர்களுக்கு நாம் ஆதரவு தரக் கூடாது..” என்று குறிப்பிட்டிருந்தார் சித்திக்.

அதே சமயம் மணியம் பிள்ளை ராஜூவோ, “தேர்தல் என்பது சங்கங்களில் நடைபெறும் ஜனநாயகமான வழிமுறைகளில் ஒன்று. அதனைத்தான் நான் பின்பற்றுகிறேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பரபரப்பான சூழலில் ‘அம்மா’ அமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் இன்று காலை கொச்சியில் கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. 

இதுவரையிலும் எந்தவொரு பொதுக் குழுவுக்கும் வந்திராத நடிகை மஞ்சு வாரியர் இந்தப் பொதுக் குழுவுக்கு வந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில்தான் இந்தத் தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள உறுப்பினர்களில் இன்றைக்கு 376 பேர் வந்திருந்து வாக்களித்தனர்.

இதில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட மணியம்பிள்ளை ராஜூ 224 வாக்குகளையும், ஸ்வேதா மேனன் 176 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆஷா சரத் 153 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

செயற்குழு உறுப்பினர்களாக டொவினோ தாமஸ், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மோகன்லாலின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லால் 212 வாக்குகளையும், விஜய் பாபு 228 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

மோகன்லால் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர்களில் நிவின் பாலி, ஹனிரோஸ் இருவரும் தோல்வியடைந்தனர்.

இதற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் புதிய தலைவரான மோகன்லால் பேசும்போது, “சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் ஒற்றுமையை நிலைநாட்டி, மலையாளத் திரையுலகத்தை சீரிய வழியில் நடத்திடவும் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்..” என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணியம் பிள்ளை ராஜூ பேசும்போது, “எங்களுடைய இந்த ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தல், எங்களுடைய சங்கத்தை மேலும் வலுவாக்கியிருக்கிறது. ஜனநாயகப் பாதையில் சங்கம் செயல்படுவதைச் சுட்டிக் காட்டுகிறது…” என்றார்.

செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லால் பேசுகையில், “மலையாளத் திரையுலகத்திற்கு என்னால் ஆன உதவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதவியின் மூலம் செய்வேன்..” என்று குறிப்பிட்டார்.

எப்படியிருந்தாலும் இதுவரையிலும் தன்னுடைய சுண்டு விரலின் அசைவில்தான் மலையாளத் திரையுலகம் இருப்பதாக நினைத்து வந்த நடிகர் மோகன்லாலுக்கு, இந்தத் தேர்தலில் கிடைத்த தோல்வி நிச்சயமாக அதிர்ச்சியைத்தான் தந்திருக்கிறது.

The post மலையாள நடிகர் சங்கத்தில் மோகன்லாலுக்கு ஏற்பட்ட தோல்வி appeared first on Touring Talkies.

]]>
‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/taanakkaaran-movie-teaser/ Sat, 17 Jul 2021 07:09:45 +0000 https://touringtalkies.co/?p=16274 Presenting the teaser of Vikram Prabhu starrer #Taanakkaran, directed by Tamizh. #VikramPrabhu | #AnjaliNair | #Ghibran | #MadheshManickam | #PhilominRaj | #Tamizh | #SRPrabhu | #PotentialStudios Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P Gobinath, […]

The post ‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
Presenting the teaser of Vikram Prabhu starrer #Taanakkaran, directed by Tamizh. #VikramPrabhu | #AnjaliNair | #Ghibran | #MadheshManickam | #PhilominRaj | #Tamizh | #SRPrabhu | #PotentialStudios Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P Gobinath, Thanga Prabaharan R DOP: Madhesh Manickam Music: Ghibran Editor: Philomin Raj Art Director: Thiruman S Ragavan Stunts: ‘ Stunner’ Sam Production Executive: Raja Ram, TP Sasi Kumar Costumes: P Selvam Lyrics: Chandru Publicity Designs: Tuney John (24am) Sound Design: Oli Sound labs Marketing & Promotions: Krishna PRO: Johnson

The post ‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>