Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
லாகின் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 17 Aug 2022 15:14:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png லாகின் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “திட்டமிட்டு தயாரித்தால் சின்ன படங்களும் ஜெயிக்கும்” – தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு https://touringtalkies.co/if-you-plan-and-produce-small-films-will-win-producer-t-siva-talks/ Wed, 17 Aug 2022 15:14:03 +0000 https://touringtalkies.co/?p=23892 தமிழ் திரையுலகில் ‘சசிகலா புரொடக்சன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து வசதிளையும் கொண்ட இந்நிறுவனம் தற்போது ஏவி.எம். அரங்கினுள் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’ மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘லாகின்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மூன்று படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்க விழாவும் நேற்று மதியம் […]

The post “திட்டமிட்டு தயாரித்தால் சின்ன படங்களும் ஜெயிக்கும்” – தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் ‘சசிகலா புரொடக்சன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து வசதிளையும் கொண்ட இந்நிறுவனம் தற்போது ஏவி.எம். அரங்கினுள் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’ மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘லாகின்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த மூன்று படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்க விழாவும் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா பேசும்போது, “திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள். “மூன்று சின்ன படங்களை ஒருவர் வாங்குகிறார்” என்றார்கள். அதைக் கேட்டவுடனேயே “கண்டிப்பாக வருகிறேன்” என்றேன்.

இப்போதுதான் சின்ன படங்கள் என்று பலவற்றை ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்றுதான் போய்க் கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப் படங்கள் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும்.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப் பெரும் வெற்றி. ஆனால், அவர் ஏன் தொடர்ந்து ஜெயிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்களையும் செய்தார். வரும் காலங்களில் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார்.

சின்னப் படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு இந்த நேரத்தில், இந்த மேடையில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியை தருமென வாழ்த்துகிறேன்.

தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் தமிழ் சினிமாவுலகம் இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்தப் படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன்..” என்றார்.

The post “திட்டமிட்டு தயாரித்தால் சின்ன படங்களும் ஜெயிக்கும்” – தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தெரியாத தளங்களில் லாகின் செய்தால் என்னாகும் என்பதை சொல்லும் ‘லாகின்’ திரைப்படம்..! https://touringtalkies.co/login-movie-preview-news/ Mon, 24 May 2021 10:55:40 +0000 https://touringtalkies.co/?p=15246 ஜே.எப்.எல். புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஜே.கே. தயாரித்துள்ள திரைப்படம் ‘லாகின்’. இப்படத்தில் நாயகர்களாக ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீனும், ‘அந்தகாரம்’ படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக பல்வேறு தளங்களில் இணைந்து நமது தகவல்களைச் சொல்லி இணைகிறோம். லாகின், பாஸ்வேர்டை உருவாக்கி […]

The post தெரியாத தளங்களில் லாகின் செய்தால் என்னாகும் என்பதை சொல்லும் ‘லாகின்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
ஜே.எப்.எல். புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஜே.கே. தயாரித்துள்ள திரைப்படம் ‘லாகின்’.

இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீனும், ‘அந்தகாரம்’ படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார்.

ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக பல்வேறு தளங்களில் இணைந்து நமது தகவல்களைச் சொல்லி இணைகிறோம். லாகின், பாஸ்வேர்டை உருவாக்கி அதில் நுழைகிறோம். அப்படி உள்ளே செல்லும்போது நமக்குத் தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசும்படம்தான் இந்த லாகின்’.

சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில் நுட்பம் அவர்களது வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

The post தெரியாத தளங்களில் லாகின் செய்தால் என்னாகும் என்பதை சொல்லும் ‘லாகின்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>