Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ருத்ர தாண்டவம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 25 Sep 2021 07:55:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ருத்ர தாண்டவம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஏதாவது பேசுனீங்க.. அவ்ளோதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..! https://touringtalkies.co/say-something-directors-public-threat/ Sat, 25 Sep 2021 07:53:17 +0000 https://touringtalkies.co/?p=18254 தமிழ்த் திரைப்படத் துறை தற்போது அரசியல் களமாகிவிட்டது. ஆள், ஆளுக்கு அவரவர் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக தங்களது திரைப்பட பணியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் லேட்டஸ்ட் இயக்குநர் ஜி.மோகன். இவர் இயக்கி வெளியான ‘திரெளபதி’ திரைப்படம் பொய்யான காதலைச் சொல்லி சிலர் பணம் பறிக்கிறார்கள் என்ற கருவின் அடிப்படையில் உருவானது. ஆனால் அது கடைசியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆண்கள் செய்யும் மொத்தக் காதல்களுமே இப்படித்தான் என்பதுபோல் இதே இயக்குநராலேயே திரிக்கப்பட்டது. தற்போது அதே இயக்குநர் […]

The post “ஏதாவது பேசுனீங்க.. அவ்ளோதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்படத் துறை தற்போது அரசியல் களமாகிவிட்டது. ஆள், ஆளுக்கு அவரவர் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக தங்களது திரைப்பட பணியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதில் லேட்டஸ்ட் இயக்குநர் ஜி.மோகன். இவர் இயக்கி வெளியான ‘திரெளபதி’ திரைப்படம் பொய்யான காதலைச் சொல்லி சிலர் பணம் பறிக்கிறார்கள் என்ற கருவின் அடிப்படையில் உருவானது. ஆனால் அது கடைசியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆண்கள் செய்யும் மொத்தக் காதல்களுமே இப்படித்தான் என்பதுபோல் இதே இயக்குநராலேயே திரிக்கப்பட்டது.

தற்போது அதே இயக்குநர் ஜி.மோகன் பொது மேடையிலேயே.. அனைத்து மக்களுக்கும் பொதுவான திரைப்படத் துறையின் மேடையிலேயே தனது கருத்துக்கு எதிர்க் கருத்து கூறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இயக்குநர் கொண்டிருக்கும் கொள்கையை எதிர்த்து யாராவது எதிர் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு தனது திரைப்படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்து அவர்கள் மூலமாக பதில் சொல்வாராம். இதனால் அவர்கள் காயப்பட்டுப் போவார்களாம். பார்த்துப் பேசுங்கள் என்று பகிரங்கமாக பொது மேடையிலேயே மிரட்டியிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த இயக்குநர் இதுவரையிலும் இரண்டு திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஜி.மோகன் மேடையில் பேசும்போது, “தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சைத்தான் இப்படத்தில் வசனங்களாக இடம் பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம் பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

இப்படியே போனால் திரைத்துறையில்கூட கருத்து சுதந்திரம் இருக்காது… கிடைக்காது போலும்..!

The post “ஏதாவது பேசுனீங்க.. அவ்ளோதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..! appeared first on Touring Talkies.

]]>
‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட ராதாரவி https://touringtalkies.co/radharavi-asked-huge-amount-for-rudhra-thaandavam-movie/ Fri, 24 Sep 2021 05:28:10 +0000 https://touringtalkies.co/?p=18212 ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்தப் படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் […]

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>
ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.

இந்தப் படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில்  இயக்குநர் மோகன்ஜி, நடிகர் ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குநர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத் தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி.கே.ராமசாமி, நாகேஷ் நடித்திருந்த பழைய படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.

நாங்கள் தற்சமயம் ‘ருத்ரதாண்டவம்’ என்ற அதே பெயரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை.

இந்நிலையில் நண்பர் ஜே.எஸ்.கே.கோபியின் உதவியுடன் இயக்குநர் மோகன்ஜி என்னை சந்தித்தார். “நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என இயக்குநர் தெரிவித்தார். அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன். அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அதனால்தான் இதில் நடித்திருக்கிறேன்.

படத்திற்கு இசை அமைப்பாளர் ஜுபின் எனக்கு புதியவர். படக் குழுவினருக்கு நண்பராக பழகியவர். இந்த படத்திற்கு அவர் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். நான் இதற்குப் பிறகு ஏதேனும் படத்தை தயாரிக்கும் எண்ணம் இருந்தால்… அவரை இசையமைப்பாளராக பயன்படுத்துவேன்.

படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களை பாராட்ட வேண்டும் என்றால் குறிப்பாக கலை இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக நீதிமன்ற காட்சிகளுக்கான அரங்கத்தை அவர் வடிவமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரிடம் ஒரே ஒரு வசனத்தை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் அதனை ஒப்புக் கொண்டு, அந்த வசனத்தைப் பேச அனுமதித்தார்.

இந்தப் படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை மட்டுமே இயக்குநர் பேசியிருக்கிறார். உண்மையில் நமக்கெல்லாம் இது பெருமையாகத்தான் இருக்கும். எனக்கு இவர்தான் தலைவர் என சொல்லும் அனைவருக்கும் இந்தப் படம் பெருமையாக இருக்கும்.

இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1-ம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃ தே டவுனாக இருக்கும்.

இயக்குநர் மோகன்ஜி இந்தப் படத்தை குறிப்பிட்ட அந்தத் தலைவருக்காக எடுத்தது போல் இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்ட வேண்டும். திருந்த வேண்டும்.

தனுஷ் நடித்ததால் கர்ணன்’ படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ‘ருத்ர தாண்டவம்’ படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும், இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்.

நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதைத்தான் இந்த ருத்ர தாண்டவம்’ படம் சொல்கிறது.

மலையாள திரை உலகில் படைப்பாளிகளும், திரைக்கதை ஆசிரியர்களும் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ… அதை அவர்களால் உறுதியாகவும், துணிச்சலாகவும் செல்ல முடியும். அது போன்றதொரு நிலை தமிழகத்தில் இல்லை. இங்கு ஒரு காட்சியில் பின்னணியில் நிற்பவர்களால்கூட அது அரசியலாக்கப்படுகிறது.

நான் ஒரு திறமையான நடிகன். இதனை பல மேடைகளில் சொல்லிச் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போய்விட்டேன். இனிமேல் அப்படி சொல்வதில்லை என்ற முடிவிற்கும் வந்துவிட்டேன். ஏனெனில் தற்போதைய திரையுலகில் காகித பூக்களுக்குத்தான் மரியாதை. உண்மையாக வாசம் வீசும் மலர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை.

ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரைகூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும். நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரைகூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும். எனவே, இப்படத்தைப் பற்றி எழுதி ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>