Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
யானை முகத்தான் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 06 Oct 2022 07:32:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png யானை முகத்தான் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அடுத்தப் படம் எப்போ..?” – இயக்குநரை குடையும் யோகிபாபு..! https://touringtalkies.co/when-is-the-next-film-yogibabu-who-is-covering-the-director/ Thu, 06 Oct 2022 07:31:36 +0000 https://touringtalkies.co/?p=24903 மலையாளத்தில்  ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, ‘யானை முகத்தான்’ படம் மூலமாகத் தமிழுக்கு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – ரெஜிஷ் மிதிலா, தயாரிப்பாளர்கள் – ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ், தயாரிப்பு நிறுவனம் – […]

The post “அடுத்தப் படம் எப்போ..?” – இயக்குநரை குடையும் யோகிபாபு..! appeared first on Touring Talkies.

]]>
மலையாளத்தில்  ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, ‘யானை முகத்தான்’ படம் மூலமாகத் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரெஜிஷ் மிதிலா, தயாரிப்பாளர்கள் – ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ், தயாரிப்பு நிறுவனம் – தி கிரேட் இந்தியன் சினிமாஸ், ஒளிப்பதிவு – கார்த்திக் S.நாயர், படத் தொகுப்பு – சைலோ, இசை – பரத் சங்கர், ஆடை வடிவமைப்பு – குவோச்சாய்.S, ஒப்பனை – கோபால், நிர்வாக தயாரிப்பு – சுனில் ஜோஸ், தயாரிப்பு மேற்பார்வை – ஜெயபாரதி, முதன்மை இணை இயக்குநர் – நிதிஷ் வாசுதேவன், இணை இயக்குநர் – கார்த்தி, இணை இயக்குநர் – அகில் V.மாதவ், உதவி இயக்குநர்கள் – பிரஜின் M.P., தண்டேஷ் D நாயர், வந்தனா, விளம்பர வடிவமைப்பு –  சிவகுமார், புகைப்படங்கள் – ஜோன்ஸ், பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

இந்த யானை முகத்தான்’ படம் பற்றி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா பேசும்போது, “எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையைக் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ‘யானை முகத்தான்’.

கதை சொன்னதுமே பிடித்துப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார் யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு எல்லாரையும் கூப்பிட்டு நடிக்கச் சொல்லிட்டார். இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு.

ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், உணர்வுகளை மிக எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார்.

ஒரு காட்சியில் நடிக்கும்போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி யோகி பாபு நடிக்கிறார்.

பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். விநாயகரின் தீவிர பக்தர் அவர். எங்கே கணபதி சிலையைப் பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால், கொஞ்சம் பிராடு.

அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகர்’ என்று சொல்லிக் கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நம் கஷ்டங்களை தீர்க்கச் சொல்லி மன்றாடும்போது அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி அவர் வந்துவிட்டால், நான்தான் கடவுள்’ என்று நிரூபிக்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கும்.

ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன வினோத நிகழ்வுகள் நடக்கிறது..? அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதுதான் இப்படம்.

நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றங்களை அழகாக, கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள்வரைக்கும் போய் மனசில் நிற்கணும். அதற்காக சில உணர்வுபூர்வமான விஷயங்களையும் படத்தில் வைத்துள்ளோம்.  

நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப தமிழ் ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் இந்த யானை முகத்தானை’ எடுத்திருக்கிறேன்.

என்னுடைய அடுத்த படத்திலும் யோகிபாபுதான் ஹீரோ. அதில் அவரை இன்னும் நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி, மேகாலயாவில்தான் நடக்கும். “இப்பவே வா.. கிளம்புவோம்”னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதற்கு தயாராக வேண்டும்.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

The post “அடுத்தப் படம் எப்போ..?” – இயக்குநரை குடையும் யோகிபாபு..! appeared first on Touring Talkies.

]]>