Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
முரளி ராமசாமி – Touring Talkies https://touringtalkies.co Wed, 04 Aug 2021 12:43:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png முரளி ராமசாமி – Touring Talkies https://touringtalkies.co 32 32 டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர் சங்கம் கலைக்கப்படுமா..? https://touringtalkies.co/will-t-rajendars-producers-association-be-dissolved/ Wed, 04 Aug 2021 12:42:45 +0000 https://touringtalkies.co/?p=16747 டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டி.ராஜேந்தர். அந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தோற்க முரளி ராமசாமி வெற்றி பெற்று தலைவராகிவிட்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் டி.ராஜேந்தர் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய சங்கத்தைத் துவக்கினார். இந்தச் சங்கம் கடந்த சில மாதங்களாக […]

The post டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர் சங்கம் கலைக்கப்படுமா..? appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டி.ராஜேந்தர்.

அந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தோற்க முரளி ராமசாமி வெற்றி பெற்று தலைவராகிவிட்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் டி.ராஜேந்தர் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய சங்கத்தைத் துவக்கினார்.

இந்தச் சங்கம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்தச் சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகின.

சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலன்தான் இரண்டு சங்கங்களின் இணைப்பில் ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் தெரிவித்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்த சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “தற்போது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தச் சங்கத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அதேபோல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. நாங்கள் தனித்தே செயல்படுவோம்..” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த அந்தச் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலன் “இது நான் மட்டுமே எடுத்த முடியவல்ல. என்னுடன் சேர்த்து சங்கத்தின் பொருளாளரான கே.ராஜன், செயலாளர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர்களில் ஒருவரான பி.டி.செல்வராஜ், இணைச் செயலாளர்களான பாண்டியன், அசோக் சாம்ராஜ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு.

சங்கத்தில் தற்போதைக்கு நாங்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதுதான் சங்கத்திற்கு சிறப்பு.

தற்போது சென்சாருக்கு விண்ணப்பிக்கும் தகுதி நமது சங்கத்திற்குக் கிடைத்துள்ளது என்றாலும், பெப்சியுடன் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தகுதியெல்லாம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. அவர்கள்தான் அதை பேசி முடித்துத் தீர்க்கப் போகிறார்கள்.. அதனால் நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய ஆடியோ செய்திக்கு மீண்டும் பதிலளித்த ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “எங்களது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது மிகவும் வலுவான நிலைமையில் இருக்கிறது. எனவே அந்தச் சங்கத்தைக் கலைக்கும் நிலைமையோ அல்லது இன்னொரு சங்கத்துடன் இணைக்க வேண்டிய விஷயமோ இப்போதைக்கு எழவில்லை. சங்கம் இப்போது இருப்பது போலவே எப்போதும் தொடர்ந்து இயங்கும்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது தலைவராக உஷா ராஜேந்தரும், ஆலோசகராக டி.ராஜேந்தரும் இருக்கிறார்கள்.

இப்போது எழுந்துள்ள இந்த உட்கட்சிப் பூசல் எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

The post டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர் சங்கம் கலைக்கப்படுமா..? appeared first on Touring Talkies.

]]>
“டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு https://touringtalkies.co/tfpc-dec-7-working-committee-meeting-news/ Tue, 08 Dec 2020 06:05:39 +0000 https://touringtalkies.co/?p=10809 சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக ஆட்களை வைத்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்…” என்றெல்லாம் புகார் கூறிய டி.ராஜேந்தர் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்… தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்திருக்கும் புகாரின் கீழ் நடிகர் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். […]

The post “டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக ஆட்களை வைத்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்…” என்றெல்லாம் புகார் கூறிய டி.ராஜேந்தர் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்திருக்கும் புகாரின் கீழ் நடிகர் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மேலும்,

வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்கள் இனிமேல் கட்டவே மாட்டார்கள்.

நாளைக்குள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கியூப் நிறுவனம் சொல்லாவிட்டால் கியூப் நிறுவனத்தின் முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தும்.

ஆன்லைன் டிக்கெட் வசதியுள்ள தியேட்டர்களில் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணம் பாதிக்குப் பாதியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.

பையனூரில் தயாரிப்பாளர்களுக்கென்று குடியிருப்புகள் கட்டித் தர வழிவகை செய்யப்படும்.

வேறு சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்புக்கு வரக் கூடாது என்று சங்க விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

The post “டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>