Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மிர்ச்சி சிவா – Touring Talkies https://touringtalkies.co Sat, 10 Dec 2022 10:26:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மிர்ச்சி சிவா – Touring Talkies https://touringtalkies.co 32 32 மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது https://touringtalkies.co/saloon-movie-poster-released/ Sat, 10 Dec 2022 10:26:04 +0000 https://touringtalkies.co/?p=28350 நடிகர் மிர்ச்சி சிவா நேற்றைக்கு தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். 2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் […]

The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மிர்ச்சி சிவா நேற்றைக்கு தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.

2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது.

இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இதே ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்று பத்திரிகைகள் சிவாவை பாராட்டித் தள்ளின.

சிவாவின் அடுத்த வெளியீடான ‘யா யா’-வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான ‘வணக்கம் சென்னை’-யில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘மசாலா’ படத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது.

2007 ல் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘சென்னை-600028’-ன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிப்பில் ‘சுமோ’, ‘சலூன்’ என்ற புதிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

இதில் ‘சலூன்’ படத்தின் புதிய போஸ்டர் சிவாவின் பிறந்த நாளையொட்டி நேற்றைக்கு வெளியானது..!

The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
“என்ன கோல்மால் செஞ்சாவது படத்தை ஹிட் ஆக்கிருங்க” – தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி பேச்சு https://touringtalkies.co/what-a-golmal-movie-make-a-hit-producer-rb-chowdhury-speech/ Sun, 10 Oct 2021 13:46:51 +0000 https://touringtalkies.co/?p=18624 பாலிவுட்டில் ‘கோல்மால்’ என்ற தலைப்பில் இதுவரையிலும் சீரீஸ் படங்களாக 4 படங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படத்தின் ஒரு கதையை தற்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள். அந்தத் தமிழ்ப் படத்திற்கும் ‘கோல்மால்’ என்றே பெயர் வைத்துள்ளனர். Jaguar Studios சார்பில் தயாரிப்பாளர் B.வினோத் ஜெயின் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் பொன் குமரனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் ஆகியோரின் நடிப்பில் காமெடி கலாட்டாவாக இந்தப் படம் உருவாகவுள்ளது.   […]

The post “என்ன கோல்மால் செஞ்சாவது படத்தை ஹிட் ஆக்கிருங்க” – தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட்டில் ‘கோல்மால்’ என்ற தலைப்பில் இதுவரையிலும் சீரீஸ் படங்களாக 4 படங்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படத்தின் ஒரு கதையை தற்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள். அந்தத் தமிழ்ப் படத்திற்கும் ‘கோல்மால்’ என்றே பெயர் வைத்துள்ளனர்.

Jaguar Studios சார்பில் தயாரிப்பாளர் B.வினோத் ஜெயின் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

அறிமுக இயக்குநர் பொன் குமரனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் ஆகியோரின் நடிப்பில் காமெடி கலாட்டாவாக இந்தப் படம் உருவாகவுள்ளது.  

மேலும் ஆடுகளம்’ நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

தயாரிப்பு – B. வினோத் ஜெயின், எழுத்து, இயக்கம் – பொன்குமரன், ஒளிப்பதிவு – சரவணன் S, இசை – அருள்தேவ், படத் தொகுப்பு –  டான் பாஸ்கோ, கலை இயக்கம் – சிவகிருஷ்ணா, டிசைனர் – சுமா, லைன் புரொடியூசர் – லால் தாஸ், புரொடக்சன் எக்சிக்யூட்டிவ்-  செந்தில் M, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ரவிகுமார், கிரியேட்டிவ் புரொடியூசர் – நரேஷ் ஜெயின், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை, சென்னை, தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் R.B.சௌத்திரி,  தயாரிப்பாளர் தனஞ்செயன்,  உட்பட  தமிழ் திரையுலகின் முக்கிய  பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி பேசும்போது, “இந்த ‘கோல்மால்’ பட இயக்குநரிடம் “என்ன கோல்மாலாவது செய்து, தயாரிப்பாளருக்கு மால் சம்பாதித்து கொடு” என்று சொன்னேன். ஜீவா, சிவாவுக்கு இப்படம் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் பெரிய வெற்றியைப் பெற்றபடம். அதேபோல் தமிழிலும் வெற்றி பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் இப்படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்…” என்றார்.

The post “என்ன கோல்மால் செஞ்சாவது படத்தை ஹிட் ஆக்கிருங்க” – தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் https://touringtalkies.co/kolmaal-movie-poojai-news/ Sun, 10 Oct 2021 11:01:35 +0000 https://touringtalkies.co/?p=18616 ‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட் செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் […]

The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட் செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இசை – அருள் தேவ், ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், படத் தொகுப்பு – டான் போஸ்கோ, கலை இயக்கம் – சிவா, பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – எம்.நரேஷ் ஜெயின், நிர்வாகத் தயாரிப்பு – எம்.செந்தில், தயாரிப்பு வடிவமைப்பு – டூனி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பாளர்கள் –  ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்.

இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன் குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “இந்தக் கோல்மால் படம் முழு நீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும். ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்.

ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். முழு படமும் மொரீஷியலில் படமாக்கப்படவுள்ளது.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும்..” என்றார்.

The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>