Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மாஸ்டர் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 28 Aug 2022 11:03:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மாஸ்டர் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மாளவிகா மோகனனுக்கே படம் இல்லையே..?” – நடிகை ரித்விகாவின் கேள்வி https://touringtalkies.co/malavika-mohanan-doesnt-have-a-film-actress-rithvikas-question/ Sun, 28 Aug 2022 11:02:45 +0000 https://touringtalkies.co/?p=24064 ‘பரதேசி’ படத்தில் அறிமுகமான நடிகை ரித்விகா சில படங்களில் தனி நாயகியாக நடித்திருந்தாலும், தற்போது பல மீடியம் பட்ஜெட் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். “இப்படி நாயகியாக இல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிப்பதில் வருத்தமில்லையா..?” என்ற கேள்விக்கு “மாஸ்டர்’ பட ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு அடுத்தப் படமே கிடைக்கலியே..?” என்று எதிர்க் கேள்வியெழுப்பியிருக்கிறார் நடிகை ரித்விகா. இது குறித்து நடிகை ரித்விகா அளித்த பேட்டியில், “இப்போவெல்லாம் ஹீரோ, ஹீரோயினே இல்லாமல் கதையை மட்டும் முக்கியமா வைச்சு […]

The post “மாளவிகா மோகனனுக்கே படம் இல்லையே..?” – நடிகை ரித்விகாவின் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
‘பரதேசி’ படத்தில் அறிமுகமான நடிகை ரித்விகா சில படங்களில் தனி நாயகியாக நடித்திருந்தாலும், தற்போது பல மீடியம் பட்ஜெட் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

“இப்படி நாயகியாக இல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிப்பதில் வருத்தமில்லையா..?” என்ற கேள்விக்கு “மாஸ்டர்’ பட ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு அடுத்தப் படமே கிடைக்கலியே..?” என்று எதிர்க் கேள்வியெழுப்பியிருக்கிறார் நடிகை ரித்விகா.

இது குறித்து நடிகை ரித்விகா அளித்த பேட்டியில், “இப்போவெல்லாம் ஹீரோ, ஹீரோயினே இல்லாமல் கதையை மட்டும் முக்கியமா வைச்சு படம் எடுக்குற அளவுக்கு சினிமால நிலைமை மாறிக்கிட்டிருக்கு. கேரக்டர் ரோல்ல நடிக்கிறதுல எனக்கு எந்தவித வருத்தமோ, கவலையோ இல்லை.

இப்போ நான் நிறைய படங்கள்ல முக்கியமான கேரக்டர்ல நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். நடிக்கும்போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. நாம ஏன் லீட் கேரக்டர் பண்ணலைன்னு எனக்குத் தோண மாட்டேங்குது. ஆனால் பாக்குறவங்களுக்கு ஏன் அப்படித் தோணுதுன்னு எனக்கும் தெரியலை.

ஹீரோயின் கேரக்டர்ஸ் பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஒரு நாளைக்கு நூறு பேர் வர்றாங்க. ஆனால் கேரக்டர் ரோல் செய்றதுக்குத்தான் இங்க ஆளே இல்லை. எல்லாருமே மெயின் லீடா நடிக்கணும்னுதான் வர்றாங்க. ஒரு சில படங்கள்ல நடிக்கிறாங்க. அதுக்கப்புறம் அடுத்தப் படம் கமிட் பண்றது கஷ்டமா இருக்கும். லோகேஷ் கனகராஜ் படத்துல விஜய்கூட நடிச்ச நடிகை அடுத்த படம் கமிட் பண்ணாங்களான்னே தெரியலை.

இப்படி டாப் ஸ்டார்ஸ்கூட நடிக்குறவங்களே ஒரே படத்துல காணாமப் போயிடற நிலைமையிருக்கும்போது நான் நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருக்கனே.. இது நல்லதுதானே..?”  என்று பதில் கேள்வியெழுப்பியிருக்கிறார் ரித்விகா.

The post “மாளவிகா மோகனனுக்கே படம் இல்லையே..?” – நடிகை ரித்விகாவின் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
‘விஸ்வாச’த்தை முறியடிக்கத் தவறிய ‘மாஸ்டர்’..! https://touringtalkies.co/viswasam-and-master-movies-tv-screening-trp-ratings-news/ Mon, 26 Apr 2021 09:16:48 +0000 https://touringtalkies.co/?p=14698 தியேட்டர்களில் மட்டுமல்லாமது தொலைக்காட்சிகளிலும் விஜய்-அஜீத் படங்கள்தான் நம்பர் ஒன் போட்டியில் மல்லாடுகின்றன. கடந்த தமிழ்ப் புத்தாண்டு வாரத்தில் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையிட்டதன் மூலமாக சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதோடு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியியையும் பின்னுக்குத் தள்ளியது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சியாக இருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சிம்புவை சிறப்பு விருந்தினராக வரவழைத்திருந்தும், ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது. அதோடு அந்த […]

The post ‘விஸ்வாச’த்தை முறியடிக்கத் தவறிய ‘மாஸ்டர்’..! appeared first on Touring Talkies.

]]>
தியேட்டர்களில் மட்டுமல்லாமது தொலைக்காட்சிகளிலும் விஜய்-அஜீத் படங்கள்தான் நம்பர் ஒன் போட்டியில் மல்லாடுகின்றன.

கடந்த தமிழ்ப் புத்தாண்டு வாரத்தில் மாஸ்டர்’ படத்தைத் திரையிட்டதன் மூலமாக சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதோடு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியியையும் பின்னுக்குத் தள்ளியது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சியாக இருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சிம்புவை சிறப்பு விருந்தினராக வரவழைத்திருந்தும், ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது.

அதோடு அந்த வாரத்திய சீரியல்களின் வரிசையிலும் சன் தொலைக்காட்சி முதல் 4 இடங்களைப் பிடித்துக் கொள்ள ‘பாரதி கண்ணம்மா’ தொடர் மூலமாக ஸ்டார் விஜய் 5-ல் ஒரு இடத்தைத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது.

‘மாஸ்டரை’ வைத்து ‘குக் வித் கோமாளி’யை கீழே தள்ளினாலும் அஜீத்தின் விஸ்வாச’த்தை ‘மாஸ்டர்’ படம் நெருங்க முடியாமல் போய்விட்டதை எண்ணி அஜீத் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

‘மாஸ்டரு’க்குக் கிடைத்த டி.ஆர்.பி. 17.10. மேலும் 1375546 பார்வைகளும் உலக அளவில் கிடைத்துள்ளது.

ஆனால், ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலக அளவில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரையிலும் யாரும் முறியடிக்க முடியாத சாதனையாக 18143000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதனால் இந்த டி.ஆர்.பி. விவகாரம்… விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் கொடுத்திருக்கிறது..!

The post ‘விஸ்வாச’த்தை முறியடிக்கத் தவறிய ‘மாஸ்டர்’..! appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..? https://touringtalkies.co/yogi-babu-will-act-with-vijay-in-vijays-next-movie/ Sun, 21 Feb 2021 05:53:44 +0000 https://touringtalkies.co/?p=13243 ‘மாஸ்டர்’ படம் பற்றிய பேச்சு ஓய்ந்து போயிருந்தாலும் தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ படம் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. செகண்ட் ஷெட்யூலாக ஒவ்வொரு ஊரிலும் இரண்டாம் தர தியேட்டர்களில் திரும்பவும் ‘மாஸ்டர்’ படத்தை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள். புத்தம் புதிய படத்திற்கு வரும் கூட்டத்தைவிடவும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இப்போதும் அதிகமான கூட்டமே வருவதால் மாஸ்டர் நின்று விளையாடுகிறது என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும். இந்த சந்தோஷத்துடன் விஜய்யின் 65-வது படத்துக்கான வேலைகளும் துவங்கிவிட்டன. இந்தப் படத்தை இயக்கப் போகும் […]

The post விஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..? appeared first on Touring Talkies.

]]>
மாஸ்டர்’ படம் பற்றிய பேச்சு ஓய்ந்து போயிருந்தாலும் தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ படம் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. செகண்ட் ஷெட்யூலாக ஒவ்வொரு ஊரிலும் இரண்டாம் தர தியேட்டர்களில் திரும்பவும் ‘மாஸ்டர்’ படத்தை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

புத்தம் புதிய படத்திற்கு வரும் கூட்டத்தைவிடவும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இப்போதும் அதிகமான கூட்டமே வருவதால் மாஸ்டர் நின்று விளையாடுகிறது என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும்.

இந்த சந்தோஷத்துடன் விஜய்யின் 65-வது படத்துக்கான வேலைகளும் துவங்கிவிட்டன. இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த விஜய் படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் யோகிபாபு இருப்பதாகத் தகவல். நெல்சன் இயக்கிய முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வெற்றிக்குப் பெரும் காரணமாக இருந்த யோகிபாபு இந்தப் புதிய விஜய் படத்தில் விஜய்க்கு பக்கபலமாக கடைசிவரையிலும் வரக் கூடிய அளவுக்கான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

இது நடந்தேறினால் யோகிபாபுவின் கேரியர் மேலும் உயரப் போவது உறுதி..!

The post விஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..? appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! https://touringtalkies.co/deleted-scenes-in-master-movie-released-in-ott-platform/ Sun, 07 Feb 2021 06:58:35 +0000 https://touringtalkies.co/?p=12817 சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தெரிந்தது. இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து […]

The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தெரிந்தது.

இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றுவார். காவல்துறையும் அவர்களக் கைது செய்யும்.

இதன் பின்பு நடக்கும் ஒரு காட்சிதான் தியேட்டர்களில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் காட்சிதான் விஜய்-மாளவிகா மோகனன் இடையிலான அறிதலுக்கும், புரிதலுக்கும் இணைப்பான காட்சி. தியேட்டர்களில் இந்தக் காட்சியை நீக்கிவிட்டதால் மாளவிகா மோகனன் விஜய்யை தேடி வந்து பேசும் காட்சியில் லாஜிக்கே இல்லாதது போலவும், உயிர்ப்பே இல்லாததாகவும் இருந்ததது.

நீக்கப்பட்ட இந்தக் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான வசனங்களாகும். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளின்போது பல ஆண்களும், பெண்களும் பேசும் பொதுப்படையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதே வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.

“பெண்களின் உடைதான் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது…” என்று ஒரு பெண் பேராசிரியரே சொல்வதும், அதற்கு விஜய் விளக்கம் சொல்வதும் அருமை.

‘மாஸ்டர்’ படத்தில் நீளம் காரணமாக குறைக்கப்பட வேண்டிய பல காட்சிகள் இருக்கும்போது உயிர்த் துடிப்பான இந்தக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை..?!

The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
அமேஸான் கொடுத்த கூடுதல் தொகையினால்தான் ‘மாஸ்டர்’ ஓடிடியில் வெளியானதா..? https://touringtalkies.co/master-movie-ott-release-reason/ Fri, 29 Jan 2021 07:48:59 +0000 https://touringtalkies.co/?p=12557 விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று காலை அமேஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்துவிட்டது. ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியானது. இந்தத் திரைப்படம் ஒரே வாரத்தில் 100 கோடியையும், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாயையும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. திரையிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய அவசியமென்ன என்பதில் […]

The post அமேஸான் கொடுத்த கூடுதல் தொகையினால்தான் ‘மாஸ்டர்’ ஓடிடியில் வெளியானதா..? appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்த மாஸ்டர்’ திரைப்படம் இன்று காலை அமேஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்துவிட்டது.

’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியானது. இந்தத் திரைப்படம் ஒரே வாரத்தில் 100 கோடியையும், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாயையும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

திரையிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய அவசியமென்ன என்பதில் சில வியாபார காய் நகர்த்தல்கள் இருந்தன என்கிறார்கள் தகவல் தெரிந்தவர்கள்.

இந்த ‘மாஸ்டர்’ படத்தை அமேஸான் நிறுவனத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே படத்தின் தயாரிப்பாளர் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார். ஆனால் அப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி படம் தியேட்டரில் வெளியாகி 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட முடியும் என்று இரு தரப்புமே ஒப்புக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைக்கு அமேஸானில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடுவதற்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக 15.5 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி ‘மாஸ்டர்’ படத்தை திரையிட அதன் தயாரிப்பாளர் அமேஸானுக்கு அனுமதி கொடுத்திருப்பத்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்திற்காக அமேசான் நிறுவனம் தயாரிப்பாளருக்கு மொத்தம் 36 கோடி கொடுத்துள்ளதாகவும் இதில் 15.5 கோடி தற்போது கொடுக்கப்பட்ட கூடுதலான தொகை என்றும் கூறப்படுகிறது.

The post அமேஸான் கொடுத்த கூடுதல் தொகையினால்தான் ‘மாஸ்டர்’ ஓடிடியில் வெளியானதா..? appeared first on Touring Talkies.

]]>
“மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு..?” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி..! https://touringtalkies.co/what-is-the-collection-report-of-master-movie-director-r-v-udhayakumar-questioned/ Fri, 29 Jan 2021 07:00:44 +0000 https://touringtalkies.co/?p=12550 ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் நிலவரம் தமிழ்ச் சினிமாவில் யாருக்காவது தெரியுமா என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சில்லு வண்டுகள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது இந்தக் கேள்வியை எழுப்பினார். அவர் பேசும்போது, “கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமா…? தியேட்டர்காரர்கள்  சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். மேலும், இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய […]

The post “மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு..?” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படத்தின் வசூல் நிலவரம் தமிழ்ச் சினிமாவில் யாருக்காவது தெரியுமா என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சில்லு வண்டுகள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் பேசும்போது, “கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமா…? தியேட்டர்காரர்கள்  சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

மேலும், இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய முடியும். ஒரே சர்வரை வைத்து டிக்கெட் விற்பனையை மானிட்டரிங் செய்ய முடியும். எது நல்ல திரைப்படம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க முடியும். திரையுலகின் வளர்ச்சிக்காக அரசாங்கம் டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வர வேண்டும். தயாரிப்பாளரை காப்பாற்றும் சினிமாதான் நல்ல சினிமா..” என்றார்.

The post “மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு..?” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
விஷாலின் ‘சக்ரா’ படம் பின் வாங்கியது ஏன்..? https://touringtalkies.co/why-a-chakra-film-drop-list-of-release-movies-in-this-week/ Thu, 28 Jan 2021 10:27:12 +0000 https://touringtalkies.co/?p=12529 நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படம் கொரோனா லாக் டவுனுக்கு முன்பாகவே தயாராக இருந்தும் இன்றுவரையிலும் ரிலீஸாக முடியாமல் தவிக்கிறது. முதலில் ஓடிடியில் இதனை வெளியிடலாம் என்றுதான் விஷால் தீர்மானித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலைமையில் அந்தப் படத்தின் கடன் பிரச்சினை காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இடையில் லாக் டவுனும் முடிவுக்கு வந்து தியேட்டர்களும் திறக்கப்பட்டு கடைசியாக ‘மாஸ்டர்’ வெளியானவுடன் அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு […]

The post விஷாலின் ‘சக்ரா’ படம் பின் வாங்கியது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படம் கொரோனா லாக் டவுனுக்கு முன்பாகவே தயாராக இருந்தும் இன்றுவரையிலும் ரிலீஸாக முடியாமல் தவிக்கிறது.

முதலில் ஓடிடியில் இதனை வெளியிடலாம் என்றுதான் விஷால் தீர்மானித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலைமையில் அந்தப் படத்தின் கடன் பிரச்சினை காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இடையில் லாக் டவுனும் முடிவுக்கு வந்து தியேட்டர்களும் திறக்கப்பட்டு கடைசியாக ‘மாஸ்டர்’ வெளியானவுடன் அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு விஷாலை சற்று யோசிக்க வைத்திருக்கிறது.

இதனால், திடீரென்று ‘மாஸ்டரை’ போலவே ‘சக்ரா’வையும் தியேட்டருக்கு கொண்டு வரலாம் என்று நினைத்து “பிப்ரவரி 12-ம் தேதியன்று சக்ரா வெளியாகும்…” என்று போஸ்டர்களை வெளியிட்டார்கள்.

ஆனால், அதுவும் இரண்டு நாட்களிலேயே முடிந்து போனது. இப்போது மீண்டும் ‘சக்ரா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறதாம்.

‘ஆக்சன்’ படம் சம்பந்தமாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.ரவீந்திரனுக்கு 8 கோடி ரூபாயை விஷால் கொடுக்க வேண்டியிருப்பதால், அதைக் கொடுத்தால்தான் அவரால் ‘சக்ரா’ படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைமையில் விஷால் இப்போது சிக்கியிருக்கிறார். இதனால்தான் இந்த முறையும் ‘சக்ரா’வை அவரால் கொண்டு வர முடியவில்லையாம்.

The post விஷாலின் ‘சக்ரா’ படம் பின் வாங்கியது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..! https://touringtalkies.co/vijay-is-the-reason-for-the-success-of-master-movie-vijay-sethupathi-interview/ Mon, 25 Jan 2021 15:34:26 +0000 https://touringtalkies.co/?p=12449 சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் விமர்சனங்களில், “இது விஜய் படமே இல்லை.. விஜய் சேதுபதியின் திரைப்படம்…” என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ “மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு முழு காரணம் விஜய்தான்” என்று கூறியுள்ளார். இன்றைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் […]

The post “மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் விமர்சனங்களில், “இது விஜய் படமே இல்லை.. விஜய் சேதுபதியின் திரைப்படம்…” என்று பலரும் எழுதியிருந்தார்கள்.

ஆனால் விஜய் சேதுபதியோ “மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு முழு காரணம் விஜய்தான்” என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “சமீபத்தில் வெளியான மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் அந்தப் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும், ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி.

திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்கான நன்றியை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் திரைப்படத் துறையில் பல பேருக்கு வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது, நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

இந்த மாஸ்டர்’ படம் முழுக்க, முழுக்க இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு விஜய் ஸார்தான் காரணம்…” என்றார் விஜய் சேதுபதி.

“மாஸ்டர்’ படம் விஜய் சேதுபதியின் படம் என்று உங்களுடைய ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்களது கருத்து என்ன..?” என நிருபர் ஒருவர் கேட்டபோது, “நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால்தான் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லிவிட்டேனே.. அதன் பிறகு இந்தக் கேள்வி அவசியமில்லாதது…” என்றார் விஜய் சேதுபதி.

The post “மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
இந்தியில் ரீமேக்காகும் தமிழ்ப் படங்கள் https://touringtalkies.co/some-tamil-movies-to-be-remake-to-hindi/ Mon, 18 Jan 2021 06:03:10 +0000 https://touringtalkies.co/?p=12229 தற்போது வெளியாகி பெரும் வெற்றியடைந்திருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெற்றுள்ளன. இந்த ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிரித்திக் ரோஷனை அணுகியிருக்கிறார்கள். இதேபோல் ‘மாநகரம்’ திரைப்படமும் ஹிந்தியில் படமாகிறது. இந்தப் படத்திற்கு இந்தியில் ‘மும்பைக்கர்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். சந்தீப் கிஷன் வேடத்தில் […]

The post இந்தியில் ரீமேக்காகும் தமிழ்ப் படங்கள் appeared first on Touring Talkies.

]]>
தற்போது வெளியாகி பெரும் வெற்றியடைந்திருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெற்றுள்ளன.

இந்த ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிரித்திக் ரோஷனை அணுகியிருக்கிறார்கள்.

இதேபோல் ‘மாநகரம்’ திரைப்படமும் ஹிந்தியில் படமாகிறது. இந்தப் படத்திற்கு இந்தியில் ‘மும்பைக்கர்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். சந்தீப் கிஷன் வேடத்தில் ஹிரித்திக் ரோஷனிடம் பேசியிருக்கிறார்கள்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’வும் இந்திக்குச் செல்கிறது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார். படத்தின் ‘குட்லக் ஜெர்ரி’. சித்தார்த் சென் குப்தா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கைதி’ படமும் இந்திக்கு செல்கிறது. இதில் கார்த்தி கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படமும் இந்திக்கு செல்கிறது. இந்தப் படத்தை புஷ்கர்-காயத்ரி தம்பதியினரே இயக்கவுள்ளனர். மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும், விஜய் சேதுபதி வேடத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடிக்கவுள்ளனராம்.

சமீப ஆண்டுகளாக தமிழில் வெற்றி பெறும் திரைப்படங்கள் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படுவது நமது தமிழ்த் திரைப்பட கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

The post இந்தியில் ரீமேக்காகும் தமிழ்ப் படங்கள் appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படம் வசூலை அள்ளுகிறது..! https://touringtalkies.co/master-movie-collection-reports/ Sat, 16 Jan 2021 07:09:23 +0000 https://touringtalkies.co/?p=12175 ஒரு வருட காலத்திற்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களால் கடந்த 3 நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பயத்தினாலும், லாக் டவுனாலும் தியேட்டர்கள் பக்கமே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அந்தப் பயத்தையெல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்துவிட்டு தங்களுடைய அபிமான ஹீரோவை ஆராதிக்க விடியற்காலை 2 மணிக்கெல்லாம் மார்கழி பனியில் தியேட்டருக்கு வந்து குவிந்தார்கள். கடந்த 13-ம் தேதியில் இருந்தே ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து ஊர்களிலும் 5 […]

The post ‘மாஸ்டர்’ படம் வசூலை அள்ளுகிறது..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு வருட காலத்திற்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களால் கடந்த 3 நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பயத்தினாலும், லாக் டவுனாலும் தியேட்டர்கள் பக்கமே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அந்தப் பயத்தையெல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்துவிட்டு தங்களுடைய அபிமான ஹீரோவை ஆராதிக்க விடியற்காலை 2 மணிக்கெல்லாம் மார்கழி பனியில் தியேட்டருக்கு வந்து குவிந்தார்கள்.

கடந்த 13-ம் தேதியில் இருந்தே ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து ஊர்களிலும் 5 ஷோக்களாக திரையிடப்பட்டு வருகிறது.

‘மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. படம் தமிழகம் முழுவதும் டிஸ்டிரிபியூஷன் முறையில் விநியோகஸ்தர்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு கற்பக வினாயகர் பிலிம்ஸ் 5.5 கோடி, செங்கல்பட்டு படூர் ரமேஷ் 15 கோடி, வேலூர்-புதுச்சேரி செந்தில் 8.5 கோடி, சேலம் சுப்புராஜ் 6.5 கோடி, கோவை ராஜமன்னார் 11.5 கோடி, திருச்சி அரவின்த் 8.25 கோடி, மதுரை அழகர்சாமி 9 கோடி, திருநெல்வேலி 5 கோடி என்று தமிழகத்தின் அனைத்து விநியோகப் பகுதிகளின் மொத்த விற்பனையும் 84 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

மேலும் கேரளாவில் 6.5 கோடிக்கும், கர்நாடகாவில் 8.25 கோடிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 9 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இது தவிர கொரோனா லாக்டவுன் இல்லாத வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது. அனைத்து வெளிநாட்டு உரிமைகளும் சேர்ந்து 30 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

படம் வெளியான முதல் நாளிலேயே 26 கோடியை வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அடுத்த நாளான பொங்கல் தினத்தன்று மட்டுமே உலகம் தழுவிய வசூல் அளவில் 35 கோடி நிகர லாபமாக கிடைத்தாகவும் சொல்கிறார்கள்.

கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் 61 கோடியும், கேரளாவில் 4.80 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 6.25 கோடியும், கர்நாடகாவில் 4.50 கோடி்யும் கிடைத்திருக்கிறதாம்.

இதே நேரம் ‘மாஸ்டர்’ படம் வட இந்தியாவில் வெளியான இந்தி பதிப்பில் மட்டும் படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஹிந்தி பதிப்பின் மூலமாக 80 லட்சம் ரூபாயும்தான் கடந்த 3 நாட்களின் முடிவில் வசூலாகக் கிடைத்திருக்கிறதாம்.

நாளை ஞாயிற்றுக்கிழமைவரையிலும் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாகும் சூழலே இருப்பதால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் ஓவர் டிராப்ட்டாகவே இந்தப் படத்தின் வசூல் அமைய வாய்ப்புண்டு என்கிறது சினிமா வட்டாராம்.

The post ‘மாஸ்டர்’ படம் வசூலை அள்ளுகிறது..! appeared first on Touring Talkies.

]]>