Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மாறா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Fri, 08 Jan 2021 07:24:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மாறா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் https://touringtalkies.co/2021-january-8-day-release-tamil-movies/ Fri, 08 Jan 2021 07:23:36 +0000 https://touringtalkies.co/?p=11909 இன்று 2021 ஜனவரி 8 வெள்ளிக்கிழமையன்று 2 தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களிலும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது. ‘வி’, மற்றும் ‘குலசேகரபட்டிணம்’ ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களிலும், ‘மாறா’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. வி திரைப்படம் தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி இசை – இளங்கோ கலைவாணன்இயக்கம் – டாவின்சி குலசேகரப்பட்டிணம் திரைப்படம் தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்நடிப்பு […]

The post இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>
இன்று 2021 ஜனவரி 8 வெள்ளிக்கிழமையன்று 2 தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களிலும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது.

வி’, மற்றும் ‘குலசேகரபட்டிணம்’ ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களிலும், ‘மாறா’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

வி திரைப்படம்

தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்
நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி

இசை – இளங்கோ கலைவாணன்
இயக்கம் – டாவின்சி

குலசேகரப்பட்டிணம் திரைப்படம்

தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்
நடிப்பு – ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்

இசை – பிரவீன், ஷங்கர், தஞ்சை செல்வா
இயக்கம் – ஆழ்வான்

மாறா திரைப்படம்

தயாரிப்பு – பிரமோத் பிலிம்ஸ்
நடிப்பு – மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவேதா நாயர், அபிராமி

இசை – ஜிப்ரான்
இயக்கம் – திலீப்குமார்

The post இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>
அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ https://touringtalkies.co/maaraa-movie-will-release-on-amazon-prime-video-ott-channel/ Sat, 10 Oct 2020 04:49:28 +0000 https://touringtalkies.co/?p=8536 மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட  ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை […]

The post அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ appeared first on Touring Talkies.

]]>

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட  ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது.

மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்ணனி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின்  வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது.

ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘கல்கி’ படத்தினை உருவாக்கிய இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

எப்போதும் காதல் கதைகளில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, உயிரை உருக்கும்படி இருக்கும். அந்த வகையில் ‘மாறா’ படக் குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக் காதலர்களுக்கு பெரு விருந்தாக இருக்குமென உறுதியளிக்கிறது.

திங் மியூஸிக் (Think Music) இசை உரிமையை பெற்றிருப்பதால்  பட இசை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் பரவி,  பெரும் வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.

படத்தின் போஸ்டரே படத்தின் விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கும் என்பதற்கு சான்றினைத் தருகிறது. ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B  மற்றும் கலை இயக்குநர் அஜயன் ஜலிசரி ஆகியோர் கண்டிப்பாக இப்படத்தின் மூலம் பெரும் பாராட்டை பெறுவார்கள். படத் தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார்.

தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக  அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வரும் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.

The post அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ appeared first on Touring Talkies.

]]>