Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மாமனிதன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 28 Sep 2022 07:04:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மாமனிதன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது https://touringtalkies.co/maamanithan-movie-gets-4-awards-in-singapore-film-festival/ Wed, 28 Sep 2022 07:04:02 +0000 https://touringtalkies.co/?p=24731 சிங்கப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, ‘மாமனிதன்’ படம் 4 விருதுகளை பெற்றுள்ளது.  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்த படம் ‘மாமனிதன்’. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு அவரும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். இந்தப் படம் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய பாராட்டுக்களை படக் குழுவினருக்குப் பெற்றுக் […]

The post ‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, மாமனிதன்’ படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்த படம் ‘மாமனிதன்’. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு அவரும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.

இந்தப் படம் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய பாராட்டுக்களை படக் குழுவினருக்குப் பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ‘ஆஹா’ ஓடிடி தளம் ‘மாமனிதன்’ படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. ‘மாமனிதன்’ படம் ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ‘ஆஹா’ ஓடிடி குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக் கொண்டாடியது.

தொடர்ந்து பல நாடுகளில் நடத்தப்பட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ பல  பல விருதுகளை தொடர்ச்சியாக வென்று வருகிறது.

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற வேர்ல்டு பிலிம் கார்னிவல்’ எனப்படும் சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் கலந்து கொண்டது.

இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது, சிறந்த குடும்ப படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதையிற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, என்று 4 விருதுகளை இத்திரைப்படம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

The post ‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
‘மாமனிதன்’ படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது https://touringtalkies.co/maamanithan-movie-gets-international-award/ Tue, 09 Aug 2022 04:06:19 +0000 https://touringtalkies.co/?p=23667 ‘யதார்த்த வாழ்வியல் இயக்குநர்’ என்று பெயரெடுத்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பேராதரவையும், பெரும் வரவேற்பையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற ‘மாமனிதன்’, திரை அரங்குகளில் வெளியான குறுகிய காலகட்டத்தில் ‘ஆஹா’ ஓ. டி. டி. எனப்படும் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு […]

The post ‘மாமனிதன்’ படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது appeared first on Touring Talkies.

]]>
‘யதார்த்த வாழ்வியல் இயக்குநர்’ என்று பெயரெடுத்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பேராதரவையும், பெரும் வரவேற்பையும் பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற ‘மாமனிதன்’, திரை அரங்குகளில் வெளியான குறுகிய காலகட்டத்தில் ‘ஆஹா’ ஓ. டி. டி. எனப்படும் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையைப் படைத்தது.

இப்படம் வெளியானவுடன் ஏராளமான சர்வதேச விருதுகளை இந்த ‘மாமனிதன்’ பெறுவான் என திரையுலகினர் கணித்தனர். அதற்கேற்ற வகையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வருகிறான் இந்த ‘மாமனிதன்’,

இந்த வரிசையில் அடுத்த விருதாக இந்த ‘மாமனிதன்’ படம் ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என்ற விருதை வென்றுள்ளது.

ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ என்னும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று.

சிறந்த திரில்லர், சிறந்த ஆக்சன், சிறந்த நகைச்சுவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியான  படைப்புகளையும், திறமையான கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்து வருகிறது டோக்கியோ திரைப்பட விழா கமிட்டி.

இந்த ஆண்டு ஆசியாவில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக ‘மாமனிதன்’ தமிழ்ப் படத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது.

டோக்கியோ திரைப்பட விருதை வென்ற ‘மாமனிதன்’ பட குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் ஏனைய இந்திய திரை உலகினரும் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

The post ‘மாமனிதன்’ படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி https://touringtalkies.co/director-seenu-ramasamy-complaint-againts-ilayaraja-and-yuvan/ Fri, 17 Jun 2022 17:49:54 +0000 https://touringtalkies.co/?p=22704 யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப, டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.  இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப் […]

The post இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>
யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன்’.

இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

குடும்ப, டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். 

இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது படத்தின் பாடல் உருவாக்கத்திலும், பின்னணி இசை சேர்ப்பின்போதும் இசைஞானியும், யுவன் சங்கர் ராஜாவும் தன்னை அருகிலேயே விடவில்லை. தன்னை அழைக்கவேயில்லை. தனக்குத் தெரியாமலேயே இந்த வேலைகளை செய்து முடித்தனர் என்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “இத்திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிப் பார்க்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தக் கதை இதே திரையுலகத்தில் பல நாயகர்களால் நிராகரிக்கப்பட்ட கதைதான். அப்போதுதான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது.

முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா – யுவன் சங்கர் ராஜா – இளையராஜா மூவரும் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணங்களால் விலகிவிட்டார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரிக்க முடிவெடுத்தபோது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே, இந்தப் படத்தின் காட்சிகள் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் பிறந்து, வாழ்ந்த தேனி, பண்ணைபுரத்தில் இந்தப் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

நான் பல நடிகைகளிடம் இந்தப் படத்திற்கா கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது காயத்ரிதான் தைரியமாக முன் வந்து இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்தக் படத்திற்காக காயத்ரிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.

நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை என்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிக்கொண்டு வருகிறேன். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம்தான் இது.

ஆனால், இந்தப் படத்தில் எனக்கு மோசமான சம்பவங்களும் நேர்ந்துள்ளது. இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள். படத்தின் பாடல் பதிவின் போதும், பின்னணி இசை சேர்ப்பின் போதும் ஒரு இயக்குநராக அவர்கள் என்னை அழைக்கவேயில்லை. என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. படத்தின் பாடல்கள் எழுதிய கவிஞர்கள்கூட யாரும் என்னிடம் அவர்கள் எழுதிய பாடல் வரிகளை காண்பிக்கவில்லை.

படத்தின் இயக்குநரான என்னிடம் எதுவும் கேட்காமல் யுவன் ஷங்கர் ராஜாவும், இசைஞானியும் இப்படி தன்னிச்சையாக நடந்து கொண்டது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. யுவனின் கூடா நட்பால்தான் நான் இந்த அளவுக்கு நிராகரிக்கப்பட்டேன்…” என மிகவும் வேதனையுடன் பேசியவர் சில நிமிடங்கள் பேச முடியாமல் மேடையிலேயே அழுதார். விஜய் சேதுபதி எழுந்து வந்து சீனு ராமசாமியை அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றினார்.

படத்தின் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா இன்றைய நிகழ்ச்சிக்கு வராததும், அவரைப் பற்றியும், அவரது தந்தையான இசைஞானியைப் பற்றியும் இயக்குநர் சீனு ராமசாமி வெளிப்படையாக வைத்த குற்றச்சாட்டும் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

The post இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>