Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மலையாள நடிகர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 29 Jun 2022 16:14:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மலையாள நடிகர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மலையாள நடிகர் சங்கத்தில் பண மோசடி நடந்துள்ளது” – நடிகர் ஷம்மி திலகன் குற்றச்சாட்டு https://touringtalkies.co/money-laundering-has-taken-place-in-malayalam-actors-association-actor-shammi-thilakan-accused/ Wed, 29 Jun 2022 16:14:21 +0000 https://touringtalkies.co/?p=22932 நடிகர் விஜய்பாபுவின் விவகாரமே தலையைச் சுற்ற வைத்தது என்றால் அடுத்தப் பிரச்சினையாக நடிகர் ஷம்மி திலகன் எழுப்பிய பிரச்சினையும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் ஷம்மி திலகன், பழம்பெரும் மலையாள நடிகரான திலகனின் மகன். இவரும் ‘அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். சென்ற ஆண்டு நடந்த ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தைத் தனது செல்போனில் படமாக்கியதாக ஷம்மி திலகன் மீது புகார் எழுந்தது. மேலும் ஷம்மி திலகன் ‘அம்மா’ அமைப்பு பற்றி […]

The post “மலையாள நடிகர் சங்கத்தில் பண மோசடி நடந்துள்ளது” – நடிகர் ஷம்மி திலகன் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்பாபுவின் விவகாரமே தலையைச் சுற்ற வைத்தது என்றால் அடுத்தப் பிரச்சினையாக நடிகர் ஷம்மி திலகன் எழுப்பிய பிரச்சினையும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் ஷம்மி திலகன், பழம்பெரும் மலையாள நடிகரான திலகனின் மகன். இவரும் ‘அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். சென்ற ஆண்டு நடந்த ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தைத் தனது செல்போனில் படமாக்கியதாக ஷம்மி திலகன் மீது புகார் எழுந்தது.

மேலும் ஷம்மி திலகன் ‘அம்மா’ அமைப்பு பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் அவதூறாகப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. “அம்மா அமைப்பின் நிர்வாகிகள் மாபியா கேங் போல செயல்படுவதாக” ஷம்மி திலகன் குற்றம்சாட்டியதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பல முறை ஷம்மி திலகனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரிலும் வராமலும், கடிதம் மூலமும் விளக்கம் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஷம்மி திலகனை ‘அம்மா’ அமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக ஒரு தீர்மானத்தை அமைப்பின் நிர்வாகிகள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்தை நடிகர் மம்மூட்டியும், ஜெகதீஷும் எதிர்த்துள்ளனர். “இந்தப் பிரச்சினையை இத்தோடுவிட்டுவிடலாம்” என்று ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால், அமைப்பின் தலைவரான மோகன்லால் இதை ஏற்கவில்லையாம். இத்தீர்மானத்தை ஓட்டெடுப்புக்குவிட.. பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

ஆனாலும் இந்தத் தீர்மானத்தை செயற்குழுவுக்கு அனுப்பி வைப்பதாகவும், செயற்குழு ஷம்மி திலகனிடம் விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் கடைசியாக தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் கடைசியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் பொருளாளரான நடிகர் சித்திக்கும், தலைவரான மோகன்லாலும் இதைத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு கொதிப்படைந்த நடிகர் ஷம்மி திலகன் உடனடியாக பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்து பரபரப்பாக பேட்டியளித்தார்.

“எங்களது குடும்பத்தின் மீதே ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மாபெரும் நடிகரான எனது தந்தை திலகனுக்கே உரிய மரியாதையை அவர்கள் தரவில்லை. என் அப்பாவுக்கு இந்தச் சங்கத்தில் அநீதி இழைக்கப்பட்டது. அவரைத் திட்டமிட்டு சங்கத்தில் இருந்து நீக்கினார்கள். இப்போது என்னையும் அதேபோல் இந்த ‘அம்மா’ அமைப்பில் இருந்து நீக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

நான் ஒருபோதும் ‘அம்மா’ அமைப்பினரை தரக்குறைவாகவோ, அவதூறாகவோ பேசவில்லை. யாருக்கும் பேட்டியும் அளிக்கவில்லை. இதுதான் உண்மை. இதை நான் அவர்களுக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட்டேன். அப்படியிருந்தும் அவர்கள் பழி வாங்கும் நோக்கோடு என் மீது நடவடிக்கை எடுக்க பாய்ந்துள்ளார்கள்.

பெண் உறுப்பினர்களை பாதுகாக்கும் வகையில் சங்கத்தின் சட்டத் திட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்று நடிகைகள் ரேவதியும், பார்வதி திருவோத்தும் வேண்டுகோள் வைத்தபோது அவர்களுக்காக நானும் சேர்ந்து குரல் கொடுத்தேன். அப்போதுதான் இந்த அமைப்பின் நிர்வாகிகள் என் மீது கோபமானார்கள்.

மேலும் இந்த அமைப்பில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் பண மோசடி செய்திருக்கிறார்கள். இது குறித்து மோகன்லாலிடம் 7 பக்க கடிதம் மூலமாக தெரிவித்திருந்தேன். அதன் பின்புதான் எங்கே நான் சங்தத்தில் இருந்தால் தாம் மாட்டிக் கொள்வோமோ என்றெண்ணிதான் சிலர் என்னை இந்த ‘அம்மா’ அமைப்பில் இருந்து நீக்க துடிக்கிறார்கள்.

இந்த ‘அம்மா’ அமைப்பைத் துவக்கியபோது நான் 4-வது ஆளாக உறுப்பினரானேன். என்னுடைய சொந்தப் பணத்தில்தான் முதன்முதலாக இந்த அமைப்பின் லெட்டர்பேடை நான் தயார் செய்தேன். இந்த அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான எனக்கே இந்த நிலைமையென்றால் எப்படி..?

‘அம்மா’ அமைப்பினர் தவறு மேல் தவறு செய்கிறார்கள். தற்போதைய நிர்வாகம் சரியில்லை. விஜய்பாபுவை பொதுக்குழுவுக்குள் அனுமதித்திருக்கவே கூடாது. வழக்கு விசாரணை முடியும்வரையிலும் அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் அவரை அங்கே அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சக நடிகைக்கு இவர்கள் காட்டும் மரியாதை அவ்வளவுதான் போலும்..!” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் நடிகர் ஷம்மி திலகன்.

The post “மலையாள நடிகர் சங்கத்தில் பண மோசடி நடந்துள்ளது” – நடிகர் ஷம்மி திலகன் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
‘அம்மா’ சங்க விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்ததன் மர்மம்தான் என்ன..? https://touringtalkies.co/what-is-the-mystery-behind-the-arrival-of-manju-warrior-for-the-amma-sangam-festival/ Thu, 01 Jul 2021 11:54:34 +0000 https://touringtalkies.co/?p=15909 நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் ‘அம்மா’ சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மலையாளத் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மலையாள திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் இணைந்து ‘அம்மா’(AMMA-Association of Malayalam Movie Artistes) என்ற சங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது 27 வருடங்களுக்கு முன்பு உருவானதாகும். இந்தச் சங்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகை மஞ்சு வாரியர் உறுப்பினர் என்றாலும் அவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்ததில் இருந்து இந்த சங்கம் நடத்திய எந்தவொரு விழாவுக்கும் வந்ததே இல்லையாம். ஏன் […]

The post ‘அம்மா’ சங்க விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்ததன் மர்மம்தான் என்ன..? appeared first on Touring Talkies.

]]>
நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் அம்மா’ சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மலையாளத் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மலையாள திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் இணைந்து ‘அம்மா’(AMMA-Association of Malayalam Movie Artistes) என்ற சங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது 27 வருடங்களுக்கு முன்பு உருவானதாகும்.

இந்தச் சங்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகை மஞ்சு வாரியர் உறுப்பினர் என்றாலும் அவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்ததில் இருந்து இந்த சங்கம் நடத்திய எந்தவொரு விழாவுக்கும் வந்ததே இல்லையாம். ஏன் பொதுக் குழுவுக்குக்கூட வந்ததில்லை என்கிறார்கள்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அம்மா’ சங்கத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மஞ்சு வாரியர் கலந்து கொண்டு அந்த முகாமைத் துவக்கி வைத்திருக்கிறார்.

“வருடா வருடம் நடைபெறும் பொதுக் குழுவுக்குக்கூட வராதவர் இந்த நிகழ்ச்சிக்கு எப்படி வந்தார்..?” என்று மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் கிசுகிசுத்து வருகிறார்கள்.

மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸை 2014-ம் ஆண்டு வெளியான ‘How old are you’ படம் மூலமாகத் துவக்கி அதன் பின்பு இப்போதுவரையிலும் 21 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த 7 ஆண்டுகளில்கூட ஒரு முறைகூட அம்மா சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அவர் வந்ததேயில்லை. வராததற்குக் காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட அவருடைய முன்னாள் கணவரான திலீப், அம்மா சங்கத்தில் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்ததுதான். கூட்டத்திற்குப் போனால் அவரைப் பார்க்க வேண்டி வருமே என்று தவிர்த்துவிட்டார்.

ஆனால், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய திலீப், அம்மா சங்கத்தில் இருந்து தானாகவே விலகிவிட்டார். இந்தச் சர்ச்சையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையும், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் இருவரும்கூட அம்மா சங்கத்தில் இருந்து இப்போது விலகிவிட்டார்கள்.

இந்த மூன்று நடிகைகளும்கூட மஞ்சு வாரியருக்கு மிக நெருக்கமானவர்கள்தான். மஞ்சுவாரியர் முன்னின்று துவக்கிய ‘Women In Cinema Collective’ என்ற அமைப்பிலும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் ‘அம்மா’ சங்கத்தின் மீது கூறிய குற்றச்சாட்டு, நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை ‘அம்மா’ காப்பாற்ற முனைகிறது என்றுதான். ஆனால் இந்த நடிகைகளுக்கு உரிய பதில் கிடைக்காததால், அவர்கள் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் முக்கிய ஆதாரப் புள்ளியான மஞ்சு வாரியர் மட்டும் இன்னமும் இந்தச் சங்கத்தில் இருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற இரண்டு முறை ‘அம்மா’ சங்கத்திற்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில்கூட மஞ்சு வாரியர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. தவிர்த்துவிட்டார். லேட்டஸ்ட்டாக ‘அம்மா’ சங்கத்தின் புதிய சொந்தக் கட்டிடத் துவக்க விழாவுக்கும் வரவில்லை.

இப்படி ‘அம்மா’ சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் ஒதுங்கியிருந்த மஞ்சு வாரியர் எப்படி இந்த முறை சங்க அலுவலகத்திற்கு வந்தார் என்று விசாரித்தபோது, “நிகழ்ச்சியில் அவர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலோ, மற்றைய நடிகர், நடிகர்களோ வரப் போவதில்லை. மஞ்சு மட்டுமே முக்கியப் புள்ளி…” என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

சங்கத்தின் செயலாளரான எடவலா பாபுவும், நடிகை நாராயணிக் குட்டியும், மற்றும் நடிகர் டினி டோம் உள்ளிட்ட வெகு சிலரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதனாலேயே மஞ்சு வாரியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்கிறார்கள் மலையாளத் திரையுலகத்தினர்.

எங்கே சென்றாலும், எந்த விழா என்றாலும் தான் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் என்று மஞ்சு வாரியர் பெரிதும் விரும்புவார். அதுதான் அவரை இந்த முறை அம்மா சங்கத்திற்குள் அழைத்து வந்திருக்கிறது என்று மலையாளப் பத்திரிகையாளர்களும் சொல்கிறார்கள்.

எப்படியோ.. அடுத்தாண்டு பொதுக் குழுவுக்கு மஞ்சு வாரியர் நிச்சயமாக வருவார் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரம் காவ்யா மாதவனும் அந்தப் பொதுக் குழுவுக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்..?

The post ‘அம்மா’ சங்க விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்ததன் மர்மம்தான் என்ன..? appeared first on Touring Talkies.

]]>