Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மண்டேலா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 01 Mar 2021 07:46:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மண்டேலா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! https://touringtalkies.co/mandela-movie-will-telecast-on-vijay-tv/ Mon, 01 Mar 2021 07:45:39 +0000 https://touringtalkies.co/?p=13427 யோகிபாபு நடித்திருக்கும் ‘மண்டேலா’ திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது. அதற்குப் பின்பு வெளியான எந்தப் படமும் தியேட்டர்களில் கூட்டத்தை வரவழைக்கவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க என்ன செய்வது என்பதே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு அந்தப் படத்திற்கு வெற்றி கிடைக்குமா.. […]

The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.

]]>
யோகிபாபு நடித்திருக்கும் ‘மண்டேலா’ திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது. அதற்குப் பின்பு வெளியான எந்தப் படமும் தியேட்டர்களில் கூட்டத்தை வரவழைக்கவில்லை.

இதனால் தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க என்ன செய்வது என்பதே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு அந்தப் படத்திற்கு வெற்றி கிடைக்குமா.. வசூல் வருமா.. வராதா என்கிற குழப்பத்தில் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவிட்டு… வசூல் கிடைக்காமல் போனால் நிறைய நஷ்டமாகுமே என்பதால் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டு ஒரே செக்காக கிடைக்கின்ற பணத்தை வாங்கிப் போடுவது நல்லது என்ற நினைப்பிற்கு பல தயாரிப்பாளர்களும் வந்துவிட்டார்கள்.

அதோடு தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது எந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தாலும் படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடிக்கு இந்தப் படத்தைத் தர மாட்டோம் என்கிற சான்றிதழையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலைத் தந்திருக்கிறது.

இதனாலேயே தான் தயாரித்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்த முடிவு படத்தின் நாயகனான தனுஷுக்கு பிடிக்கவில்லையென்றாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நலனை முன் வைத்து இந்த முடிவையெடுத்துவிட்டார்.

இதற்கிடையில் தான் தயாரித்த ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்தப் படம் நேற்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்துமே இந்தப் படத்தில் சிறப்பாக இருந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இதே விஜய் டிவியிலேயே வெளியிட தயாரிப்பாளர் சசிகாந்த் முடிவெடுத்திருக்கிறாராம்.

அந்தப் படம் மண்டேலா’ என்ற திரைப்படம். நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் அநேகமாக ஏப்ரல் 14-ம் தேதியன்று விஜய் டிவியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏப்ரல் 14-ம் தேதியன்று சன் தொலைக்காட்சியும் தியேட்டர்களுக்கே வராத புத்தம் புதிய படமாக ‘வணக்கம்டா மாப்ளை’ என்ற படத்தையும் வெளியிடவுள்ளதாம்.

ஆக மொத்தத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் தங்களது ரசிகர்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.

]]>