Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பிட்ட காதலு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 20 Feb 2021 07:06:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பிட்ட காதலு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 அமலா பால் செக்ஸியாக நடித்திருக்கும் வெப் சீரீஸ் டிரெண்ட்டிங்கானது..! https://touringtalkies.co/the-web-series-starring-amala-paul-as-sexy-is-trending/ Sat, 20 Feb 2021 07:05:31 +0000 https://touringtalkies.co/?p=13203 நடிகை அமலா பால் நடிப்பில் நேற்று இரவு நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘Pitta Kathalu’ என்ற வெப் சீரிஸ் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களிலும், வெப் சீரிஸ்களின் ரேட்டிங்கிலும் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அமலா பால் மட்டுமே..! இதுவொரு அந்தாலஜி டைப் சீரிஸ். நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. நாக் அஸ்வின், பி.வி.நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி, தருண் பாஸ்கர் என்று நான்கு இயக்குநர்கள் ஆளுக்கொரு கதையை இயக்கியிருக்கிறார்கள். நான்கு கதைகளுமே […]

The post அமலா பால் செக்ஸியாக நடித்திருக்கும் வெப் சீரீஸ் டிரெண்ட்டிங்கானது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை அமலா பால் நடிப்பில் நேற்று இரவு நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘Pitta Kathalu’ என்ற வெப் சீரிஸ் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களிலும், வெப் சீரிஸ்களின் ரேட்டிங்கிலும் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அமலா பால் மட்டுமே..!

இதுவொரு அந்தாலஜி டைப் சீரிஸ். நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. நாக் அஸ்வின், பி.வி.நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி, தருண் பாஸ்கர் என்று நான்கு இயக்குநர்கள் ஆளுக்கொரு கதையை இயக்கியிருக்கிறார்கள்.

நான்கு கதைகளுமே பெண்களை மையப்படுத்தி எடுத்தக்கப்பட்ட கதைகள். இதில் இரண்டாவது கதையான ‘மீரா’ என்ற பகுதியில் நடிகை அமலா பால் நடித்திருக்கிறார்.

எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கும் கணவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் மீரா என்ற மனைவியின் கதைதான் இந்தப் பகுதி.

தனது மனைவி மீராவுக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கிறதோ என்று கணவர் சந்தேகப்படுகிறார். வார்த்தைகளால் சித்ரவதை செய்கிறார். இதன் தொடர்ச்சியாய் அவர் நினைத்துப் பார்க்கும் சில காட்சிகளில் மீராவுடன் அவளுடைய காதலன் உறவு கொள்வது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

நடிகை அமலாபால் நடித்திருக்கும் இந்தப் படுக்கையறை காட்சிகள் இதுவரையிலும் அவரே நடித்திருக்காதவை..! அமலா பாலின் ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியை இது கொடுத்திருக்கிறது. இதையடுத்து இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை மட்டும் நிறைய பேர் டவுன்லோடு செய்து இணையத்தில் பரப்புரை செய்து வருகிறார்கள்.

இந்தப் பகுதியை இயக்கியவர் பி.வி.நந்தினி ரெட்டி என்னும் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் ‘என்னமோ நடக்குது’, ‘ஓ பேபி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

The post அமலா பால் செக்ஸியாக நடித்திருக்கும் வெப் சீரீஸ் டிரெண்ட்டிங்கானது..! appeared first on Touring Talkies.

]]>