Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பார்டர் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 15 Apr 2021 07:27:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பார்டர் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/border-movie-title-release-function-held-on-the-park-hotel/ Thu, 15 Apr 2021 07:26:46 +0000 https://touringtalkies.co/?p=14374 ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், ‘பக்ஸ்’ என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். ‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள […]

The post ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’.

அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ்’ என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார்.

‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள தி பார்க் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர் ஏ.எல்.விஜய்,  இயக்குநர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில் நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில் நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர்.

திடீரென்று முன்னறவிப்பின்றி நடத்தப்பட்ட இந்தத் திடீர் விழாவினால் ஜெமினி மேம்பாலத்தின் அருகேயுள்ள சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பல டூவீலர் பயணிகள் வண்டிகளை ஓரங்கட்டிவிட்டு பாரக் ஹோட்டலின் கட்டிடத்தின் மீது ஒளிபரப்பான டைட்டில் வீடியோவை பார்த்து ரசித்தனர். இதனால் தொடர்ந்து 15 நி்மிடங்களுக்கு அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இது போன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கைதி’ படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குநர், சாம் சி.எஸ்.தான் நம்ம படத்திற்கும் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் இந்த ‘பார்டர்’ படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு.

என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குநர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குநர்கள்தான். அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் எனக்கு பக்க பலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் நல்லவிதமாக அமைந்து விட்டது.  இதற்கு முன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பைப் பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3-டி மேப்பிங் தொழில் நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து, பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.  தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள்.

என்னுடைய நடிப்பையும் அடுத்த கட்டத்திற்கு இந்த ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

The post ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>