Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பானுஸ்ரீ ரெட்டி – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Nov 2022 07:52:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பானுஸ்ரீ ரெட்டி – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! https://touringtalkies.co/actor-jai-turns-to-be-super-hero-character-in-breaking-news-movie/ Mon, 14 Nov 2022 07:52:03 +0000 https://touringtalkies.co/?p=27052 தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS.  இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். நாயகியாக தெலுங்கின் பானுஸ்ரீ நடிக்கிறார். […]

The post சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS. 

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். நாயகியாக தெலுங்கின் பானுஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

படத்தின் தொழில் நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஜானிலால், செவிலோ ராஜா,
விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.
எடிட்டர்: அந்தோணி,
கலை: NM மகேஷ்,
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
நடனம்: ராதிகா,
பாடல்கள் இசை: விஷால்  பீட்டர்,
பின்னணி இசை: LV முத்து கணேஷ்.
ஒலி வடிவமைப்பு: ரமேஷ்,
சவுண்ட் FX: ரேண்டி,
எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

The post சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! appeared first on Touring Talkies.

]]>
லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! https://touringtalkies.co/gate-movie-preview-news/ Wed, 20 Jan 2021 06:13:37 +0000 https://touringtalkies.co/?p=12284 ஜி.கே. சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018-ம் ஆண்டு தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானுஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். […]

The post லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! appeared first on Touring Talkies.

]]>
ஜி.கே. சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018-ம் ஆண்டு தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானுஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம்’ படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்களாக இருப்பவர்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பியார் பிரேமா காதல்’ என்கிற ஹிட் படத்திற்கு படத் தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா இந்தப் படத்தின் படத் தொகுப்பை கவனிக்கிறார். இக்கு’, ‘கிகோரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக நடக்கும் திகில் நிகழ்வுதான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழு நீள த்ரில்லர் படமாக இது உருவாகி  இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

The post லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! appeared first on Touring Talkies.

]]>