Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பட்டத்து அரசன் சினிமா விமர்சனம் – Touring Talkies https://touringtalkies.co Fri, 25 Nov 2022 20:01:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பட்டத்து அரசன் சினிமா விமர்சனம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/pattaththu-arasan-movie-review/ Fri, 25 Nov 2022 11:00:38 +0000 https://touringtalkies.co/?p=27571 கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது. இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, […]

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது.

இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் காளையார்கோவில் கிராமத்தில் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப் பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். சொத்துப் பிரச்சினையால் ராதிகாவையும், அதர்வாவையும் ராஜ்கிரணும் அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்துள்ளனர். தனது தாய் ராதிகாவின் எதிர்ப்பையும் மீறி அதர்வா மட்டும் எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜ்கிரணின் மற்றொரு பேரனும், ராஜ்கிரணின் பால்ய காலத்து தோழனும், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவருமான ரவி காளேவின் மகனும் ஒன்றாக அதே ஊரின் கபடி டீமில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள். ராஜ்கிரணின் பேரன் மட்டும் தமிழக கபடி டீமிற்கு தேர்வாகிவிட்டதை தெரிந்து கொண்ட காளேவின் மகன் தந்திரமாக சிலவைகளை செய்து ராஜ்கிரணின் பேரனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறான்.

இப்போது ஊரே கொண்டாடிய ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்கான கபடி அணியில் விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.

இப்போது கபடி விளையாடவே தெரியாத அதர்வா தன் தாத்தா குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்க களத்தில் இறங்குகிறார். கபடி விளையாட்டில் தன் ஊர் அணியை தன் குடும்ப அணி வெல்லும் என்று சவால்விட்டு பிரிந்த, குடும்பத்தை ஒன்று சேர்த்து ஊர் அணிக்கு எதிராக கபடி விளையாடத் தயாராகிறார் அதர்வா.

அந்தச் சவாலில் ராஜ்கிரணின் குடும்பம் வெற்றி பெற்றதா..? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு, குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் வழக்கம்போல கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் காளையாக பாய்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கும்படி அளவாக நடித்தும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரவும் வைக்கிறார். 

அதர்வாவுக்கு தாத்தாவாக, கதையின் உண்மையான நாயகனாக பொத்தாரி’ என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனது வித்தியாசத்தை நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா என்ற கேள்விக்குத் திரையில் கபடி விளையாடியே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்திற்கு குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலித்திருக்கிறார். நாயகி தொடை தெரியும் அளவுக்கு உடையணிந்திருப்பது சற்குணத்தின் இயக்கத்தில் இதுதான் முதல் படமாகும்.

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மகனை இழந்த ஆற்றாமையில் தவிக்கும் காட்சிகளிலும், இறுதியில் நிலைமை புரிந்து அதர்வாவுடன் இணைந்து கபடியில் மல்லுக்கட்டும் காட்சியிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் தன் பங்குக்கு உரிய நடிப்பினை காண்பித்திருக்கிறார். சிங்கம் புலி வீட்டு மாப்பிள்ளையாக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார். ராதிகா தன் பங்குக்குத் தனது தனித் திறமையை பதிவு செய்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என்று பலரும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து முடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது மட்டுமல்ல.. பல்வேறு வயதுகளில் இருக்கும் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு குடும்ப அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் கேமிரா அந்த வெற்றிலை கொடி தோட்டத்திற்குள் நுழைந்து பயணிக்கும் காட்சியை இதுவரையிலும் தமிழ்த் திரை ரசிகர்கள் கண்டதில்லை. அவ்வளவு அழகுடன் அதைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாக சற்குணத்தின் படமென்றால் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அதிகப்படியான பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கிராமத்து, குடும்பக் கதையை சொல்வதே மிகப் பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து அளவாகவே கொடுத்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாய் இன்றைய இளைஞர்களுக்கான படமாக மட்டுமின்றி, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ‘பாசமலர்’ டைப் படமாகவும் இந்தப் ‘பட்டத்து அரசன்’ அமைந்துள்ளது.

RATING : 3.5 / 5

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>