Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நாகேஷ் – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Oct 2022 14:51:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நாகேஷ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கதறி அழுத நாகேஷ்! https://touringtalkies.co/dazzling-nagesh/ Fri, 28 Oct 2022 14:48:00 +0000 https://touringtalkies.co/?p=26128 நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாகேஷ், சொந்தமாக திரையரங்கம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தார். இறுதியில் தனது சம்பாத்தியம் அனைத்தையும் போட்டு, சென்னை தி.நகரில், தனது பெயரிலேயே திரையரங்கம் துவங்கினார். ஆனால் அத்திரையரங்கம் திறக்க இருந்த நேரத்தில், மாநகராட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டது. காரணம் அருகில்  ஒரு பள்ளி இருப்பதால், அந்த இடத்தில் திரையரங்கம் வருவது சரியாக இருக்காது என காரணம் சொல்லப்பட்டது. நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார். […]

The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாகேஷ், சொந்தமாக திரையரங்கம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தார். இறுதியில் தனது சம்பாத்தியம் அனைத்தையும் போட்டு, சென்னை தி.நகரில், தனது பெயரிலேயே திரையரங்கம் துவங்கினார்.

ஆனால் அத்திரையரங்கம் திறக்க இருந்த நேரத்தில், மாநகராட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டது. காரணம் அருகில்  ஒரு பள்ளி இருப்பதால், அந்த இடத்தில் திரையரங்கம் வருவது சரியாக இருக்காது என காரணம் சொல்லப்பட்டது.

நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார்.

“சட்டதிட்டங்கள் தெரிந்து தியேட்டர் கட்டமாட்டாயா” என கடிந்து திருப்பி அனுப்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.

சோகத்துடன் வீட்டுக்கு வந்தார் நாகேஸ். ஆனால் இரு நாட்களில் திரையரங்கத்துக்கு அனுமதி கிடைத்தது.

நெகிழ்வும் ஆச்சரியமுமாக எம்.ஜி.ஆரை சந்திக்க ஓடினார்.

அப்போது எம்.ஜி.ஆர்., “அந்த பள்ளிக்கு இன்னொரு வாசல் உண்டு. அந்த வாசலைத் திறந்து இந்த கதவை மூடச் சொல்லி விட்டோம். இது உனக்காக செய்தது அல்ல. நீண்ட நாட்களாகவே, திரையரங்கப் பகுதியில் நெரிசல் இருப்பதால் வழியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது  இப்போது நிறைவேறிவிட்டது” என்று சிரித்தார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்ட நாகேஸ், நெகிழ்ச்சியில் கதறி அழுதுவிட்டார்.

காலத்தால் செய்த உதவி என்பார்கள்.. ஆனால் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் காலம் கடந்து நிற்பவை!

The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
“நாகேஷூக்கு சிலை வைக்க வேண்டும்” – தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை https://touringtalkies.co/kamal-haasans-request-to-the-tamil-nadu-government-to-built-a-statue-to-nagesh/ Tue, 28 Sep 2021 07:37:47 +0000 https://touringtalkies.co/?p=18329 “மறைந்த தமிழ்த் திரையுலக மூத்த நடிகரான நாகேஷிற்கு சிலை வைக்க வேண்டும், அவர் பெயரில் விருது ஏற்படுத்த வேண்டும்” என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் நடிகர் நாகேஷின் பிறந்த தினமாகும். இதையொட்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் தத்தமது சமூக வலைத்தளங்களில் நாகேஷின் நடிப்பையும், திரையுலக வாழ்க்கையும் நினைவு கூர்ந்தார்கள். ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் நாகேஷை நினைவு கூர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் […]

The post “நாகேஷூக்கு சிலை வைக்க வேண்டும்” – தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
“மறைந்த தமிழ்த் திரையுலக மூத்த நடிகரான நாகேஷிற்கு சிலை வைக்க வேண்டும், அவர் பெயரில் விருது ஏற்படுத்த வேண்டும்” என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நடிகர் நாகேஷின் பிறந்த தினமாகும். இதையொட்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் தத்தமது சமூக வலைத்தளங்களில் நாகேஷின் நடிப்பையும், திரையுலக வாழ்க்கையும் நினைவு கூர்ந்தார்கள்.

மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் நாகேஷை நினைவு கூர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடிகர் நாகேஷிற்கு சிலை வைக்க வேண்டும். ஏதாவது ஒரு சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும். அவருடைய பெயரில் விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்’, ‘தமிழகத்தின் சார்லி சாப்ளின்’ என்றெல்லாம் அவரது நடிப்பு புகழப்பட்டது.

1958-ல் ‘மனமுள்ள மறுதாரம்’ படத்தில் அறிமுகமாகி 2008-ல் ‘தசாவதாரம்’வரை மிகச் சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும், வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த ‘கலைமாமணி’ விருது, 1994-ல் ‘நம்மவர்’ திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் ‘சிறந்த துணை நடிகர்’ விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள்.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். அவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன்.

அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது, ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும்.

கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…” என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post “நாகேஷூக்கு சிலை வைக்க வேண்டும்” – தமிழக அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
‘உலகம் சுற்றும் வாலிபன்’ புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்..! https://touringtalkies.co/ulagam-sutrum-vaaliban-movie-rerelease-news/ Tue, 09 Mar 2021 05:37:34 +0000 https://touringtalkies.co/?p=13459 ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972-ம் ஆண்டு தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை துவக்கிய பின்பு இப்படம், அக்கட்சியின் கொடியுடன் வெளியானது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின் ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். விஞ்ஞானி முருகனின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் இந்த […]

The post ‘உலகம் சுற்றும் வாலிபன்’ புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்..! appeared first on Touring Talkies.

]]>
‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972-ம் ஆண்டு தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை துவக்கிய பின்பு இப்படம், அக்கட்சியின் கொடியுடன் வெளியானது.

இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின் ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். விஞ்ஞானி முருகனின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் இந்த சதித் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முருகன், ராஜூ என இரண்டு வேடங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இயக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ‘கவியரசு’ கண்ணதாசன், கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களை எழுதினர். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘சிரித்து வாழ வேண்டும்’ உட்பட இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றன. இன்றைக்கும் மறக்க முடியாத பாடல்களாக அவை அமைந்துள்ளன.

இந்த உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய தொழில் நுட்பக் கலைஞர் என்பது அனைவருக்கும் புரியும்.

இப்படம் தற்போது புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

The post ‘உலகம் சுற்றும் வாலிபன்’ புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்..! appeared first on Touring Talkies.

]]>