Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை வாணி போஜன் – Touring Talkies https://touringtalkies.co Sun, 30 May 2021 09:42:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை வாணி போஜன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் https://touringtalkies.co/radha-mohans-malaysia-to-amnesia-has-been-released-on-odt-and-has-been-very-well-received/ Sun, 30 May 2021 09:42:05 +0000 https://touringtalkies.co/?p=15327 இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகி தற்போது ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. வைபவ், வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுடன் கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – பிரேம்ஜி, கலை – கதிர், எழுத்து, […]

The post ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகி தற்போது ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. வைபவ், வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுடன் கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – பிரேம்ஜி, கலை – கதிர், எழுத்து, இயக்கம் – ராதா மோகன்.

இப்படம் முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் கருணாகரன்.

அவர் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது, “இயக்குநர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு’ படத்தில் என்னை நாயகனாக அறிமுகுபடுத்திய அவருக்கு நான் என்றென்றும்  கடமைப்பட்டு இருக்கிறேன்.

குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. மலேசியா to அம்னீஷியா படத்தில்கூட அவரது கைவண்ணம்  நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும்.” என்று உற்சாகம் குறையாத உவகையுடன் கூறினார் கருணாகரன்.

கடந்த மே 28-ம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் பொது மக்களிடையே பெரும்  வரவேற்பு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ராதா மோகனின் ‘மலேஷியா to அம்னீஷியா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
ZEE-5 OTT-யில் வெளியாகிறது ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம்..! https://touringtalkies.co/malaysia-to-amneshia-movie-preview-news/ Mon, 10 May 2021 08:57:21 +0000 https://touringtalkies.co/?p=15004 தமிழகத்தில் தற்போதைய கொரோனாவின் இரண்டாம் அலை காலக்கட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. தயாரித்து முடித்து, வெளியாகாத தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டிவிட்டது. ஆனால் ஓடிடி தளங்கள் தாங்களாகவே புதிய திரைப்படங்களைத் தயாரிக்கத் துவங்கிவிட்டன. அவற்றைத் தியேட்டருக்கு கொண்டு வராமல் தங்களுடைய ஓடிடி தளத்திலேயே வெளியிடுகின்றன. இந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘மலேஷியா டூ அம்னீஷியா’. இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன் இருவரும் நாயகன், நாயகியாக […]

The post ZEE-5 OTT-யில் வெளியாகிறது ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழகத்தில் தற்போதைய கொரோனாவின் இரண்டாம் அலை காலக்கட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. தயாரித்து முடித்து, வெளியாகாத தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டிவிட்டது.

ஆனால் ஓடிடி தளங்கள் தாங்களாகவே புதிய திரைப்படங்களைத் தயாரிக்கத் துவங்கிவிட்டன. அவற்றைத் தியேட்டருக்கு கொண்டு வராமல் தங்களுடைய ஓடிடி தளத்திலேயே வெளியிடுகின்றன.

இந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘மலேஷியா டூ அம்னீஷியா’.

இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – பிரேம்ஜி, கலை – கதிர், எழுத்து,

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குநரான ராதா மோகன் இயக்கியுள்ளார்.

‘லாக்கப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீ-5 தளம் தயாரித்துள்ள அடுத்த படம் இதுதான்.

இத்திரைப்படம் வரும் மே-28-ம் தேதியன்று ZEE-5 தளத்தில் வெளியாகிறது.

The post ZEE-5 OTT-யில் வெளியாகிறது ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம் https://touringtalkies.co/bharath-vaani-bhojan-new-movie-poojai-function-held-in-today/ Sun, 11 Apr 2021 14:01:52 +0000 https://touringtalkies.co/?p=14310 தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக் கூடிய வெற்றி படங்களாகவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G.டில்லி பாபுவின் Axess Film Factory  நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கியுள்ளது. இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன்  முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் இருவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.சுரேஷ் பாலா இப்படத்திற்கு […]

The post பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக் கூடிய வெற்றி படங்களாகவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G.டில்லி பாபுவின் Axess Film Factory  நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன்  முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் இருவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே வெற்றி மாறனின் பாவக் கதைகள் ஆந்தாலஜி’ மற்றும் பரத்தின் ‘காளிதாஸ் ‘ படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபல படத் தொகுப்பாளர் ரூபனிடம் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களில்  உதவியாளராகப் பணியாற்றிய R.கலைவாணன் இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார்.

கலை இயக்குநர் ராஜீவனின் உதவியாளர் மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார்.

தற்போதைக்கு Production No-12’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்குகிறார்.

சமீபத்தில் இவர் இயக்கியிருந்த அபிமன்யூ’ என்ற குறும்படம் திரை உலகில் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

இந்தப் புதிய திரைப்படம் குறித்துத் தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேசும்போது, “இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறியபோது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும்விதமும் மிகவும் புதிதாக இருந்தது.

நகருக்கு வெளியே இருக்கும் காற்றாடி விண்ட் மில்லை சுற்றியே மொத்தக் கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முழுத் திரைக்கதையையும் படித்த பின்னர்தான் படத்தை தயாரிக்கவே சம்மதித்தேன்.

திரைக்கதையை படித்தபோது பல இடங்களில் மிக அழுத்தமான கதையமைப்பும்,  மர்மமும் கலந்து இருந்தது. மயிர்க்கூச்செரியும் பல தருணங்கள் திரைக்கதையில் இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது. அதுவே எனக்கு இந்தப் படத்தை தயாரிக்கும் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது.

பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோரை முன்னணி பாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என இயக்குநர் சொன்னபோது இப்படத்திற்கு கச்சிதமான தேர்வு என எனக்கும் தோன்றியது. பரத் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நாயகன். வாணி போஜன் எங்களின் மிகப் பெரிய ஹிட் படமான ஓ மை கடவுளே’ படத்தில் நடித்திருந்தார். அற்புதமான நடிகை அவர். அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்து விரைவில் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்…” என்றார்.

The post பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம் https://touringtalkies.co/pagavainakku-arulvaai-movie-preivew-news/ Mon, 14 Dec 2020 08:50:57 +0000 https://touringtalkies.co/?p=11028 ‘கூர்கா’ படத்தைத் தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்கிறார். நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி இருவரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே.தில்லை, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, நடன […]

The post சசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>

‘கூர்கா’ படத்தைத் தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்கிறார். நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி இருவரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே.தில்லை, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, நடன இயக்கம் – தீனா, சண்டை இயக்கம் – ஆக்‌ஷன் நூர், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய இயக்குநர் அனிஸ் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் இனிதே துவங்கியது.

The post சசிகுமார்-பிந்து மாதவி-வாணி போஜன் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் https://touringtalkies.co/paayum-oli-nee-enakku-movie-preview-news/ Sun, 25 Oct 2020 07:09:50 +0000 https://touringtalkies.co/?p=9231 ‘அசுர குரு’ படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இது விக்ரம் பிரபு நடிக்கும் 16-வது படமாகும். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா இந்தப் படத்தைப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாணி போஜன் நடிக்கிறார். வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். மூத்த இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மகன் […]

The post விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>

‘அசுர குரு’ படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இது விக்ரம் பிரபு நடிக்கும் 16-வது படமாகும்.

மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா இந்தப் படத்தைப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாணி போஜன் நடிக்கிறார். வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். மூத்த இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்து தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு – ரமேஷ் நோக்கவல்லி.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் சௌத்ரி  இயக்குகிறார்.

அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>