Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை ராகினி – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 Sep 2021 11:57:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை ராகினி – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-68 – அறிஞர் அண்ணாவால் கண்ணகியாக நடிக்கின்ற வாய்ப்பை இழந்த பத்மினி https://touringtalkies.co/cinema-history-60-padmini-lalitha-rahini-story/ Tue, 14 Sep 2021 11:56:17 +0000 https://touringtalkies.co/?p=17912 திருவாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் என்ன காரணத்தாலோ பத்மினி திரையுலகில் அடைந்த உயரத்தை மற்றவர்களால் எட்ட முடியவில்லை. “கணவனே கண் கண்ட தெய்வம்” திரைப்படத்தில் நாகராணியாக பெயர் பெற்ற லலிதா தமிழில் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கட்டத்திற்குப் பிறகு மலையாளப் பட உலகின் பக்கம் ஒதுங்கி விட்டார் அவர். ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ராகினி பின்னர் […]

The post சினிமா வரலாறு-68 – அறிஞர் அண்ணாவால் கண்ணகியாக நடிக்கின்ற வாய்ப்பை இழந்த பத்மினி appeared first on Touring Talkies.

]]>
திருவாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் என்ன காரணத்தாலோ பத்மினி திரையுலகில் அடைந்த உயரத்தை மற்றவர்களால் எட்ட முடியவில்லை.

“கணவனே கண் கண்ட தெய்வம்” திரைப்படத்தில் நாகராணியாக பெயர் பெற்ற லலிதா தமிழில் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கட்டத்திற்குப் பிறகு மலையாளப் பட உலகின் பக்கம் ஒதுங்கி விட்டார் அவர். ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ராகினி பின்னர் துணைப் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் பத்மினியோடு இணைந்து நடித்த படங்கள்தான் அதிகம்.

சிவாஜியின் 2-வது படத்திலேயே அவருடன் ஜோடி சேர்ந்த பத்மினி எம்.ஜி.ஆரின் 35-வது படமான ‘மதுரை வீரன்’ படத்தில்தான் முதன்முதலாக அவருடன் ஜோடியாக நடித்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட திரை அரங்கங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிச் சித்திரமாக அந்தப் படம் அமைந்தது. அதற்குப் பிறகு பத்மினி எம்ஜிஆரோடு நடித்த படங்களில் முக்கியமான படம் “மன்னாதி மன்னன்”. எம்ஜிஆரோடு பல படங்களில் ஜோடியாக நடித்த பத்மினி அவருடைய சகோதரியாக நடித்த படமாக “ரிக்ஷாக்காரன்” படம் அமைந்தது.

தென்னிந்திய நடிகைகளில் வேறு எவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு பத்மினிக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகள் தவிர ரஷ்ய மொழிப் படத்திலும் நடித்தவர் பத்மினி. ரஷ்யப் படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்தப் படத்தில் ரஷ்ய மொழியில் பேசியும் இருந்தார் அவர். பால்ராஜ் சஹானி, பிரித்விராஜ் கபூர், நர்கீஸ், பத்மினி ஆகியோர் நடிக்க “பர்தேசி” என்ற பெயரில் தயாரான அந்தத் திரைப்படம் இந்தி-ரஷ்யன் ஆகிய இரு மொழிகளில் தயாரானது.

பத்மினியின் திரை வாழ்க்கையில் அவராலும், அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத ஒரு திரைப்படம் “வஞ்சிக் கோட்டை வாலிபன்”. ஜெமினியின் பிரம்மாண்டமான அந்தத் தயாரிப்பில் பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய இருவரும் பங்கு பெற்ற போட்டி நடனம் ஒன்றைப் படமாக்கி இருந்தார் அப்படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.வாசன்.

“கண்ணும் கண்ணும் கலந்து” என்று தொடங்கும் அந்தப் பாடல் காட்சியின் இடையில் “சபாஷ் சரியான போட்டி” என்பார் பி.எஸ்.வீரப்பா. அவருடைய அந்த வசனத்துக்கு ஏற்ப அந்தப் பாடல் காட்சியில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடி இருந்தனர்.

“அந்த யோசனை வாசன் அவர்களுக்கு எப்படி தோன்றியதோ எனக்குத் தெரியாது. அந்தப் பாடல் காட்சியில் என்னுடைய முழுத் திறமையையும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பல நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதே மாதிரி வைஜயந்திமாலாவும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார்.

எங்கள் இருவருக்குமிடையே அப்போது எந்த போட்டியும் இல்லை. அந்தப் பாடல் காட்சியின் முடிவிலும் அந்த போட்டி நடனத்தில் யாருக்கு வெற்றி என்பது காட்டப்படவில்லை. எங்களின் நோக்கமெல்லாம் அந்தப் பாடல் காட்சியில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட ரசிகர்களை திருப்திப்படுத்துவதில்தான் இருந்தது” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பத்மினி.

அந்தப் போட்டி நடனத்தில் வெற்றி பெற்றது யார் என்பதைக் காட்டாததற்குப் பின்னாலே எஸ்.எஸ்.வாசனின் புத்திசாலித்தனமும், வியாபாரத் தந்திரமும் இருந்தது.

“வஞ்சிக் கோட்டை வாலிபன்” திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவான படம். இந்தியில் அதன் பெயர் “ராஜ்திலக்”. அந்தப் படம் தயாரானபோது தமிழில் பத்மினி புகழின் உச்சத்தில் இருந்ததுபோல, இந்தியில் வைஜயந்திமாலா நல்ல புகழுடன் இருந்தார். போட்டி நடனத்தில் வைஜயந்திமாலா வெற்றி பெற்றதாகக் காட்டினால் நிச்சயமாக தமிழ் ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

அதேபோன்று பத்மினி வெற்றி பெற்றதாகக் காட்டினால் இந்தி ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் உத்திரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு மிகப் பெரிய லஸ்தர் விளக்கு கீழே விழ அதை பத்மினியும் வைஜயந்திமாலாவும் அதிர்ச்சியோடு பார்ப்பதாக அந்த நடனக் காட் சியை வாசன் முடித்துவிட்டார் “என்று ஒரு பத்திரிகைக் குறிப்பு கூறுகிறது.

1942-ம் ஆண்டில் பி.யு.சின்னப்பாவும், கண்ணாம்பாவும் ஜோடியாக நடித்த ‘கண்ணகி” திரைப்படத்தைத் தயாரித்து மாபெரும் வெற்றியைக் குவித்த ஜுபிடர் சோமுவிற்கு சிவாஜி கணேசன் கோவலனாகவும் பத்மினி கண்ணகியாகவும் நடிக்க அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை 1950-ம் ஆண்டில் பிறந்தது.

கண்ணகியின் புதிய பதிப்பை இயக்க ஏ.எஸ்.ஏ.சாமியை இயக்குநராகத் தேர்ந்தெடுத்த அவர் படத்தைத் தொடங்குவதற்கு முன்னாலே ‘கண்ணகி’ படத்தைத் தனது இனிய நண்பரான அறிஞர் அண்ணாவிற்குத் திரையிட்டுக் காட்டினார்.

படத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா “1940-க்கும்1950-க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆகவே இப்போதுள்ள சூழ்நிலையில் மீண்டும் கண்ணகியை எடுத்தால் வெற்றி பெறுவது கஷ்டம்” என்று சோமுவிடம் சொன்னார்.

“கண்ணகி” கதையை மீண்டும் படமாக்குகின்ற யோசனையை அறிஞர் அண்ணா வரவேற்கவில்லை என்றாலும் தனது கணவனைக் காப்பாற்ற போராடிய கண்ணகியின் பாத்திரம் ஏ.எஸ்.ஏ.சாமியின் மனதில் நிலைத்து நின்று விட்டதால் அந்த பாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை எழுதித் தரும்படி பிரபல நாவலாசிரியரான அரு.ராமநாதனை அவர் கேட்டுக் கொண்டார். அந்தக் கதைதான் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடிக்க “தங்கப் பதுமை” என்ற பெயரிலே வெளிவந்தது.

பத்மினியின் சகோதரி லலிதா தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது “உனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறேன்” என்று லலிதாவிடம் கூறினார் அவரது தாயார். லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவருமே தாயார் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்டு நடந்தவர்கள் என்பதால் அம்மாவின் ஆசைப்படி பட உலகைவிட்டு விலகி 1957-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதியன்று சிவசங்கரன் என்ற வக்கீலைத் திருமணம் செய்து கொண்டார் லலிதா.

லலிதா திரையுலகை விட்டு விலகியதால் அதிகம் பாதிக்கப்பட்டவர் பத்மினிதான். லலிதாவும் பத்மினியும் எப்போதும் இரட்டைப் பிறவிகள் மாதிரி ஒன்றாகத் திரிவார்கள். “அப்போது நான்கு மொழிகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த தொடர் படப்பிடிப்புகள்தான் லலிதாவின் பிரிவிலிருந்து ஓரளவு என்னைக் காப்பாற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார் பத்மினி.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரோடும், இந்தியில் ராஜ்கபூர் என்ற உச்ச நட்சத்திரத்தோடும் பல திரைப்படங்களில் பத்மினி நடித்துக் கொண்டிருந்தபோது ராமச்சந்திரன் என்ற டாக்டரை அவருக்கு திருமணம் செய்ய வைக்க முடிவெடுத்தார் அவரது தாயார்.

அப்போது திரையுலகில் இருந்த பலர் பத்மினியைத் திருமணம் செய்து கொள்ள தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு பத்மினிக்கு அவரது தாயார் தேர்வு செய்த மணமகன்தான் கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

பத்மினி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியே கசியத் தொடங்கியதும் பத்திரிகையாளர்கள் பத்மினியைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் அவரைத் துளைத்தனர்.

“உங்களை மணக்கப் போகும் மணமகன் யார்? அவர் இந்தத் திரையுலகை சேர்ந்தவரா? என்றெல்லாம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது “எனக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பது உண்மைதான். மற்ற விவரங்களை என்னுடைய தாயார் விரைவில் அறிவிப்பார்” என்று பதில் அளித்தார் பத்மினி.

“திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?” என்ற கேள்விக்கு எல்லா நடிகைகளையும் போலவே “திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன்” என்று பதில் சொன்னார் பத்மினி. ஆனால் பத்மினியின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத படங்களாக அமைந்த “தில்லானா மோகனாம்பாள், சித்தி, வியட்நாம் வீடு, இரு மலர்கள்” உட்பட பல சிறந்த படங்கள் திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள்தான்.

1960-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதியன்று ஆலப்புழையில் இருந்த லலிதாவின் வீட்டில் பத்மினியின் திருமணத்துக்கான நிச்சயத்தார்த்த நிகழ்ச்சி நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியில் பத்மினி கலந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் முன்பாக பத்மினியும் ராகினியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். “அங்கு நடனமாடிக் கொண்டிருந்தேனே தவிர அன்று என்னுடைய எண்ணமெல்லாம் ஆலப்புழையில்தான் இருந்தது” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பத்மினி.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை அன்று முதலில் பத்மினி முடிவெடுத்திருந்ததால் அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்த பல படங்களில் அவர் நடித்து முடிப்பதற்கு வசதியாக அவரது திருமணத்தை 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று நடத்த முடிவு செய்தார் அவரது தாயார்.

ஆனால் அவர் திட்டமிட்டபடி அந்தத் தேதிக்குள் அவரது படங்களின் படப்பிடிப்பு முடிவடையாததால் திருமணத் தேதி மே மாதம் 25-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. மே மாதம் முதல் வாரத்துக்குள் எல்லா படங்களையும் முடித்துவிட திட்டமிட்டிருந்தார் பத்மினி. ஆனால் படப்பிடிப்பு நீண்டு கொண்டேயிருந்தது.

மே மாதம் 21 முதல் வரை இராமாயண நாட்டிய நாடகத்தில் நடிக்கவும் பத்மினி ஒப்புக் கொண்டிருந்ததால் காலை முதல் மாலைவரை படப்பிடி ப்பு அதற்குப் பிறகு நாட்டிய நாடகம் என்று பம்பரமாக சுழன்றார் பத்மினி. திருமணத்திற்கு முன்னால் அவரது கடைசி நாட்டிய நிகழ்ச்சி மே மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அந்த நாட்டிய நாடகத்தில் பத்மினி சீதையாகவும், ராகினி ராமராகவும் நடித்தனர்.

நாடகம் முடிந்தவுடன் “இனி இந்த ராமன் உனக்கு வேண்டாம். அந்த ராமச்சந்திரன் போதும்” என்று பத்மினியிடம் ராகினி கிண்டலாகத்தான் சொன்னார் என்றாலும் அவர் அப்படி சொன்னதைத் தொடர்ந்து இருவராலும் அழுகையை அடக்க முடியவில்லை.

ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கலைச்சேவை புரிந்த ஈடு இணையற்ற நடிகையான பத்மினிக்கு இந்திய அரசு எந்த உயரிய விருதும் கொடுத்து கவுரவிக்காதது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-68 – அறிஞர் அண்ணாவால் கண்ணகியாக நடிக்கின்ற வாய்ப்பை இழந்த பத்மினி appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. https://touringtalkies.co/actor-karthick-raginis-love-marriage-story/ Wed, 07 Oct 2020 08:50:51 +0000 https://touringtalkies.co/?p=8421 1980-களின் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் திருமணம் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அவருடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் இணைத்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு கார்த்திக்கின் செயல்பாடுகள் இருந்ததால்… ஒரேயொரு படத்தில் நடித்தவுடனேயே அந்த நாயகியுடன் கார்த்திக்கின் கல்யாணம் முடிந்தது என்பதை அப்போதைய திரையுலகத்தினரால் நம்ப முடியவில்லை. கார்த்திக்கும் அவருடைய காதல் மனைவியான ராகினியும் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இது குறித்து விளக்கமாக பேட்டியளித்துள்ளார். […]

The post “நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. appeared first on Touring Talkies.

]]>

1980-களின் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் திருமணம் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் அவருடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் இணைத்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு கார்த்திக்கின் செயல்பாடுகள் இருந்ததால்… ஒரேயொரு படத்தில் நடித்தவுடனேயே அந்த நாயகியுடன் கார்த்திக்கின் கல்யாணம் முடிந்தது என்பதை அப்போதைய திரையுலகத்தினரால் நம்ப முடியவில்லை.

கார்த்திக்கும் அவருடைய காதல் மனைவியான ராகினியும் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இது குறித்து விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலு’க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விரிவாக அவர் பேசியுள்ளார்.

அது இங்கே :

“நான் தயாரித்த ‘சோலைக்குயில்’ படத்தின் நாயகியாக ராகினியை இயக்குநர் ராஜன்தான் புக் செய்தார். ராகினியின் அண்ணன், இயக்குநர் ராஜனின் நெருங்கிய நண்பர். அந்த வகையில் ஏற்கெனவே அவருக்கு ராகினியைத் தெரியும் என்பதால் அவரை பரிந்துரை செய்தார். நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.

சோலைக்குயில்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக 10 நாட்கள் சென்னையில் தி.நகரில் உள்ள முத்துராமன் திருமண மண்டபத்தில் நடனப் பயிற்சி ராகினிக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக ராகினி சென்னை வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரம் மாஸ்டர்தான் ராகினிக்கு நடனப் பயிற்சியளித்தார்.

ரிகர்சல் துவங்கிய முதல் நாளே தம்பி கார்த்திக் கல்யாண மண்டபத்திற்கு வந்தார். என்னிடம் “சித்தப்பா ஒரு பத்து நிமிஷம்தான் இருப்பேன். பார்த்துட்டு போயிருவேன்…” என்று சொன்னார்.

இந்தக் கல்யாண மண்டபத்துலதான் ராகினியை கார்த்திக் முதன்முதலா சந்திச்சார். பார்த்தவுடனேயே இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு போலிருக்கு. பத்து நிமிஷத்துல போயிருவேன்னு சொன்ன கார்த்திக் ஒரு மணி நேரமாகியும் போகலை. சுந்தரம் மாஸ்டர் வந்து “ரிகர்சலை கண்டினியூ பண்ணப் போறேன்”னார். “கார்த்திக் போயிருவாப்புலயே.. பார்த்துக்குங்க…” என்று நான் சொன்னேன். அதுக்கு சுந்தரம், “ரிகச்ரலை தொடரச் சொன்னதே கார்த்திக்குதான்…” என்றார். அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு.. பய விழுந்துட்டான்னு.

கார்த்திக்கின் ராசி அவருக்கு காதலிகள் வரிசையாக வந்தார்கள். அவருடைய சிரிப்பு ஒன்றே போதும்.. பல நடிகைகள் அவரைக் காதலித்தார்கள். அந்தக் காதலெல்லாம் அந்த ஒரு படத்தோட முடிஞ்சிரும். அடுத்து வேற படத்துல நடிக்கப் போவார். அங்க வேற நடிகை இருப்பார். அப்புறம் அது வேற காதலாகும்.. இது இப்படியே தொடரும். இது எனக்கும் தெரியும். ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் போய் முடியும்ன்னு எனக்கே தெரியாது.

‘சோலைக்குயில்’ படம் முழுவதும் கோத்தகிரிலதான் ஷூட் செஞ்சோம். அங்க ‘ரமேஷ் லாட்ஜ்’ன்னு ஒரேயொரு லாட்ஜ்தான் இருந்தது. அங்கதான் எல்லாரும் தங்கியிருந்தோம். ஆனாலும், இடம் பத்தலை. இதுல எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் வேறொரு கெஸ்ட் ஹவுஸுக்கு போயிட்டாங்க.

கார்த்திக்கும் ‘எனக்கு இது செட்டாகுதுப்பா’ என்றான். அதுனால அவனுக்காக தொண்டமான் கெஸ்ட் ஹவுஸ்ல பேசி ஒரு ரூம் புக் பண்ணிக் கொடு்த்தேன். அங்க போன பின்னாடி கார்த்திக் என்கிட்ட.. ‘அந்தப் பொண்ணு மட்டும் தனியா அங்க இருக்குமே.. எதுக்கு அதை தனியா விட்டுட்டு.. அதையும் இங்கயே கொண்டு வந்துவிட்ருங்க..’ என்றான். சரி.. என்று ராகினிக்கும் அங்கயே ரூம் புக் பண்ணி கொண்டு வந்துவிட்டுட்டேன். இப்படி ஒரு தயாரிப்பாளரா இருந்துட்டு செய்யக் கூடாத வேலையையெல்லாம் செஞ்சிருக்கேன்..

கோத்தகிரில திடீர்ன்னு மழை போட்டுத் தள்ளிருச்சு.. ஷூட்டிங் நின்னு போச்சு.. அங்க பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. ‘அந்தக் கோவில்ல பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டீங்கன்னா மழை நிச்சயம் நிக்கும்’ன்னு அங்க இருந்தவங்க சொன்னாங்க.

சரி.. இதையும் செஞ்சிருவோமேன்னுட்டு.. பொங்கல் வைக்க எல்லா வேலையையும் செஞ்சோம். அப்போ அந்த அம்மனுக்காக பூவெல்லாம் கட்டி கொண்டு வந்தோம். அந்தப் பூவையெல்லாம் ராகினியும் கேட்டுவிட்டுச்சு. கொடுத்துவிட்டோம்.

அதோட அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சில ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குற மாதிரி சீன்ஸ் இருக்கு. இதுக்காக பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, சேலையெல்லாம் ஏற்கெனவே வாங்கி வைச்சிருந்தோம். அதை எனக்குத் தெரியாமல் கார்த்திக் எப்படியோ வாங்கியிருக்கான்.

அன்னிக்கு அந்த பொங்கல் வைக்குற சமயத்துல கார்த்திக்கும், ராகினியும் பட்டு வேட்டி, பட்டு சட்டை, கல்யாண சேலையெல்லாம் கட்டிக்கிட்டு வந்தாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இன்னிக்கு ஷூட்டிங் இல்லையே.. இது கிளைமாக்ஸ்ல போட வேண்டிய காஸ்ட்யூம்ஸ் ஆச்சேன்னு யோசிச்சேன்.

வந்தவங்க கைல கொண்டு வந்த மல்லிகைப் பூ மாலையை அப்படியே அம்மன் காலடில வைக்கச் சொன்னாங்க.. நம்ம காந்திமதி அம்மாதான் அதை வாங்கி அம்மன் காலடில வைச்சாங்க.. வைச்சிட்டு கார்த்திக்கைப் பார்த்து ‘மருமவனோ போற போக்கு சரியாயில்லை.. அந்தத் திருச்சி வெக்காலியம்மன்தான் உன்னைக் காப்பாத்தணும்’னு சொன்னாங்க.

அப்புறம் படையலெல்லாம் வைச்ச பின்னாடி அந்தப் பூவை எடுத்துப் பிய்ச்சு எல்லாருக்கும் கொடுக்கலாம்ன்னு காந்திமதியக்கா நினைச்சாங்க. அப்போ அந்தப் பொண்ணு ராகினி ‘அந்தப் பூவையெல்லாம் கொடுங்க.. எங்க கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு சாமி சிலையிருக்கு. அதுக்குப் போட்டுவிடுறேன்’னு சொல்லுச்சு. சரின்னு அந்த மாலையைக் கொடுத்துட்டோம். அப்புறம் நாங்க எல்லோரும் லாட்ஜூக்கு திரும்பிட்டோம்.. இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

இதுக்கப்புறமா எங்களுக்கே தெரியாமல் அவங்க ரெண்டு பேருக்கும் அதே இடத்துல கல்யாணம் நடந்திருக்கு.. அந்தப் பூவுக்குள்ள தாலியை ஒளிச்சு வைச்சிருந்திருக்கான் கார்த்திக். இதெல்லாம் பின்னாடிதான் எனக்குத் தெரியும்.

மழையெல்லாம் நின்ன பின்னாடி.. பாட்டு சீன் சூட்டிங் நடந்துச்சு.. கலா மாஸ்டர்தான் டான்ஸ் சொல்லிக் கொடுக்க வந்திருந்தார். அப்போ ராகினி தாலியைக் கழட்டி தன்னோட இடுப்புல மறைவா கட்டியிருந்தாங்க. ஆனால், இதை கலா பார்த்துட்டாங்க. ‘இதென்ன..?’ என்று கேட்டதற்கு ‘ச்சும்மா.. மந்திரிச்ச கயிறு’ என்று சொல்லி ராகினி சமாளிச்சிட்டாங்க.

ஒரு வழியா அங்க ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்குத் திரும்பலாம்ன்னு பிளான் பண்ணினோம். அப்போ படத்தோட புரொடெக்சன் மேனேஜர் என்னோட மச்சினன்தான். அவன்கிட்ட தனக்கும், ராகினிக்கும் டிரெயின்ல பர்ஸ்ட் கிளாஸ்ல சீட் புக் பண்ணச் சொல்லியிருக்கான் கார்த்திக். இது எனக்குத் தெரியாது.

ராகினி அதே ஊர்க்கார பெண்தானே. இங்க இருந்திட்டுதான் பின்னாடி சென்னைக்கு வரும்ன்னு நினைச்சேன். ஏன்னா சென்னைல இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கியிருந்துச்சு. ஆனால் அந்தப் பொண்ணு என்கிட்ட ‘உங்க காரை கொடுங்க ஸார். என்னை கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கிவிட்ர சொல்லுங்க’ன்னு சொல்லுச்சு.. நானும் ‘சரி’ன்னு சொல்லி என் காரை அவங்ககிட்ட கொடுத்திட்டேன்.

நானும், என் மேனேஜரும் கோத்தகிரில இருந்து பஸ்ல வர்றோம். மழை கொட்டுது. அந்தப் பஸ்ஸும் ஒழுகுது. பஸ்ஸுக்குள்ளேயே நிறைய பேர் குடையை பிடிச்சிருக்காங்க. அப்படியிருக்கு நிலைமை.

அப்போ எங்க பஸ்ஸை ஒட்டியே என்னோட காரும் வருது. காரை கார்த்திக் ஓட்டிக்கிட்டு வர்றான்.. ராகினி பக்கத்துல உக்காந்திருக்கு. இதைப் பார்த்தவுடனேயே எனக்குப் புரிஞ்சு போச்சு.. சரி.. பய என்னமோ பண்ணிட்டான்ன்னு நினைச்சேன்.

நான் கோத்தகிரில வந்து சென்னைக்கு வர்றதுக்குள்ள அவன் சென்னைக்கு வந்து ராகினியை கொண்டு வந்து என் வீட்ல விட்டுட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டான். நான் வீட்டுக்கு வந்து பார்த்தால் ராகினி என் வீட்டில் உக்காந்திருக்கு. எனக்கும் அதிர்ச்சியாயிருந்துச்சு. சரி.. இன்னும் 4 நாள் ஷூட்டிங் இருக்கே.. அதுல நடிச்சிட்டுப் போகட்டும்ன்னு விட்டுட்டேன்.

ஆனால் என் வீட்டுக்காரம்மா ‘என்ன விஷயம்’ன்னு கேட்டப்போ ராகினி தனக்கும், கார்த்திக்கும் கல்யாணம் ஆனா விஷயத்தையெல்லாம் சொல்லிருச்சு. அப்புறம்தான் எங்களுக்கே அவங்களுக்கு கல்யாணம் நடந்த விஷயம் தெரியும். சரி.. என்ன செய்றது.. இவன் மத்த ஹீரோக்கள் மாதிரியில்லையே.. அண்ணன் மவனா வேற போயிட்டான். அதனால விட்ருவோம்ன்னு ஏத்துக்கிட்டேன்.

அப்படியே என் வீட்ல அந்தப் பொண்ணுகூட 30 நாள் இருந்துட்டான் கார்த்திக். அங்க போட்ட வித்துல பிறந்தவன்தான் இன்னிக்கு நடிகனா இருக்குற கவுதம் கார்த்திக்..” என்று நீட்டமாக ஒரு வரலாறையே சொல்லி முடித்தார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

The post “நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. appeared first on Touring Talkies.

]]>