Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை சுஷ்மிதா சென் – Touring Talkies https://touringtalkies.co Sat, 02 Jul 2022 10:03:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை சுஷ்மிதா சென் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “எனக்கு 3 முறை திருமணம் நடக்க முயன்றும் முறிந்தது” – நடிகை சுஷ்மிதா சென் பேச்சு https://touringtalkies.co/i-tried-3-marriages-but-failed-actress-sushmita-sen/ Sat, 02 Jul 2022 10:03:19 +0000 https://touringtalkies.co/?p=22990 முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகை சுஷ்மிதா சென், 2000-ம் ஆண்டில் ரெனி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் அலிசா பெண் என்ற குழந்தையை 2010-ல் தத்தெடுத்துக் […]

The post “எனக்கு 3 முறை திருமணம் நடக்க முயன்றும் முறிந்தது” – நடிகை சுஷ்மிதா சென் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை சுஷ்மிதா சென், 2000-ம் ஆண்டில் ரெனி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் அலிசா பெண் என்ற குழந்தையை 2010-ல் தத்தெடுத்துக் கொண்டார். இவர்கள் இப்போது ஒரே குடும்பமாக, வாழ்ந்து வருகின்றனர். அவருடைய மூத்த வளர்ப்பு மகள் ரெனி ஒரு குறும்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், முன்னணி இந்தி நடிகையாக வலம் வந்த டுவிங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் ‘தி ஐகான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் சுஷ்மிதா. அதில் தனது திருமணம் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகை சுஷ்மிதா சென்.

அந்தப் பேட்டியில் சுஷ்மிதா சென் பேசும்போது, “அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எனது குழந்தைகளுக்கு இதில் துளியளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.

மூன்று முறை நான் திருமணம் செய்துகொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னை காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் சொல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்…” என்றார் சுஷ்மிதா சென்.

சுஷ்மிதா சென்னின் வாழ்க்கையில் அவரது காதலர்களாக வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இயக்குநர் விக்ரம் பட், நடிகர் ரந்தீப் ஹூடா, பன்டி சச்தேவ், இம்தியாஸ் காத்ரி, முடாசர் அஸீஸ், சமீர் பாட்டியா, சஞ்சய் நரங், ரிதிக் பாஷன், ரோஹ்மன் சால் ஆகிய 9 பேருடனும் காதலியாக வாழ்ந்து வந்தவர் சுஷ்மிதா சென். இதில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுஷ்மிதா சென்னைவிடவும் 10 வயதுக்கும் குறைவான வயதையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “எனக்கு 3 முறை திருமணம் நடக்க முயன்றும் முறிந்தது” – நடிகை சுஷ்மிதா சென் பேச்சு appeared first on Touring Talkies.

]]>