Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை அனுமோள் – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 May 2021 07:54:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை அனுமோள் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சாதி மாற்றுத் திருமணங்களைப் பற்றிப் பேசும் ‘காயல்’ திரைப்படம் https://touringtalkies.co/kaayal-movie-preview-news/ Thu, 13 May 2021 07:53:49 +0000 https://touringtalkies.co/?p=15060 ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காயல்’. இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ‘ரேடியோ சிட்டி’ பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள நடிகையான அனுமோள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத் தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபலமான தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான தமயந்தி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். சாதி […]

The post சாதி மாற்றுத் திருமணங்களைப் பற்றிப் பேசும் ‘காயல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காயல்’.

இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ரேடியோ சிட்டி’ பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள நடிகையான அனுமோள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத் தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

பிரபலமான தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான தமயந்தி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

சாதி  மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் இந்தக் காயல்’ திரைப்படம் காதலும், பயணமும் கலந்த ஒரு திரை வடிவமாகும். 

ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியையே இத்திரைப்படத்தின் ஆணி வேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தமயந்தி.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

The post சாதி மாற்றுத் திருமணங்களைப் பற்றிப் பேசும் ‘காயல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>