Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் மாதவன் – Touring Talkies https://touringtalkies.co Wed, 21 Oct 2020 09:33:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் மாதவன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ அமேஸானில் நேரடியாக வெளியாகிறது..! https://touringtalkies.co/maaraa-movie-will-release-on-amazon-prime-video/ Wed, 21 Oct 2020 09:32:23 +0000 https://touringtalkies.co/?p=9068 மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாறா’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும்  ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.  ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனம் பெற்றுள்ளது, படத்திற்கு மேலும்  பெரும் பலம் சேர்த்துள்ளது. ப்ரமோத் ஃப்லிம்ஸ் […]

The post மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ அமேஸானில் நேரடியாக வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>

மாதவன், ஷ்ரத்தா ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும்  ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனம் பெற்றுள்ளது, படத்திற்கு மேலும்  பெரும் பலம் சேர்த்துள்ளது.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

மாதவன், ஷ்ரத்தா ்ரீநாத் தவிர தமிழ்ச் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

பாடல்கள் – கவிஞர் தாமரை,  படத் தொகுப்பு – புவன் ்ரீநிவாசன், ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B., கலை இயக்கம் – அஜயன் ஜலிசரி, ஒலிப்பதிவு – தபஸ் நாயக், விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஸ்பலாட் ஸ்டூடியோ(splat studio), உடைகள் வடிவமைப்பு – ஏக் லகானி, ரெம்யா சுரேஷ், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, லைன் புரொடெக்சன்ஸ் – S.P. cinemas, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோகுல்.K,  

பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற கல்கி’ படத்தினை உருவாக்கி  புகழ் பெற்ற இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர்கள் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இருவரும் பேசும்போது, “தென்னகத்தில் இசைத் துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனத்துடன் நாங்கள் இணைந்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு இசை ஆல்பமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஒரு இசை ஆல்பத்தை அவர்கள் ரசிகர்களிடம் கொண்டு செல்லும்விதம் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. மிகுந்த உழைப்புடன், புத்தம் புது ஐடியாக்களுடன் பட்டித்தொட்டிவரை படத்தின் இசையை கொண்டு சேர்த்துவிடும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் எங்களின் மாறா’ படம் திங்க் மியூசிக்(Think Music)  நிறுவனத்தின் வழியாக வெளியாவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

அதையும் தாண்டி இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் திங்க் மியூசிக் Think Music)  நிறுவனம் இணைந்து வெளியிட்ட முந்தைய ஆல்பங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஜிப்ரானின் முதல் படமான வாகை சூட வா’ படத்தின் பாடல்கள் திங்க் மியூசிக்(Think Music) நிறுவனத்தன் மூலமாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்று பம்பர் ஹிட்டானது.

இசை என்ற காதல் கதையில் இந்த இரண்டு பெயர்களும் இணையும்போது ரசிகர்களிடம் அதற்கென்றே ஒரு தனித்த வரவேற்பு எப்போதும் உணடு. அந்த வகையில் மாறா’ படத்தின் மிகப் பெரும் வெற்றியை சொல்லி அடிக்கும் இசை ஆல்பமாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை..” என்றார்.

The post மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ அமேஸானில் நேரடியாக வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ https://touringtalkies.co/maaraa-movie-will-release-on-amazon-prime-video-ott-channel/ Sat, 10 Oct 2020 04:49:28 +0000 https://touringtalkies.co/?p=8536 மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட  ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை […]

The post அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ appeared first on Touring Talkies.

]]>

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட  ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது.

மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்ணனி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின்  வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது.

ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘கல்கி’ படத்தினை உருவாக்கிய இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

எப்போதும் காதல் கதைகளில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, உயிரை உருக்கும்படி இருக்கும். அந்த வகையில் ‘மாறா’ படக் குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக் காதலர்களுக்கு பெரு விருந்தாக இருக்குமென உறுதியளிக்கிறது.

திங் மியூஸிக் (Think Music) இசை உரிமையை பெற்றிருப்பதால்  பட இசை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் பரவி,  பெரும் வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.

படத்தின் போஸ்டரே படத்தின் விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கும் என்பதற்கு சான்றினைத் தருகிறது. ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B  மற்றும் கலை இயக்குநர் அஜயன் ஜலிசரி ஆகியோர் கண்டிப்பாக இப்படத்தின் மூலம் பெரும் பாராட்டை பெறுவார்கள். படத் தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார்.

தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக  அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வரும் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.

The post அமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’ appeared first on Touring Talkies.

]]>
சைலன்ஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/silence-movie-revview/ Sun, 04 Oct 2020 09:45:21 +0000 https://touringtalkies.co/?p=8348 ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன்தான் படத்தின் ஆரம்பக் காட்சியே அமைந்திருக்கிறது. ஒரு பழமையான பங்களாவில் ஒரு காதல் ஜோடி கொல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக அந்த பங்களா அனாதையாக இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அனுஷ்காவும், மாதவனும் அங்கே வருகிறார்கள். இப்படியாக ஆரம்பம் ஆகும் படத்தில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் வருகிறது. அந்த பங்களாவில் மாதவனுக்கு ஓர் அசம்பாவிதம் நடக்க,.. அதற்கு யார் காரணம் என்ற விசாரணையில் படம் விரிகிறது. ஒரு பேய்ப் படத்திற்கான சாத்தியங்கள் இருந்தும் […]

The post சைலன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>

ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன்தான் படத்தின் ஆரம்பக் காட்சியே அமைந்திருக்கிறது.

ஒரு பழமையான பங்களாவில் ஒரு காதல் ஜோடி கொல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக அந்த பங்களா அனாதையாக இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அனுஷ்காவும், மாதவனும் அங்கே வருகிறார்கள். இப்படியாக ஆரம்பம் ஆகும் படத்தில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் வருகிறது.

அந்த பங்களாவில் மாதவனுக்கு ஓர் அசம்பாவிதம் நடக்க,.. அதற்கு யார் காரணம் என்ற விசாரணையில் படம் விரிகிறது.

ஒரு பேய்ப் படத்திற்கான சாத்தியங்கள் இருந்தும் படத்தை அந்த ரூட்டில் கொண்டு போகாமல் முழுக்க, முழுக்க க்ரைம், திரில்லரில் பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

வயலின் செலிபிரட்டியான மாதவனுக்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத அனுஷ்காவிற்கும் காதல் மலரும் இடங்களும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓர் ஓவியக் கவிதை. அனுஷ்கா வரைந்த ஓவியத்தை மாதவன் வாங்கும் காட்சி நல்ல இண்ட்ரெஸ்டிங் ஏரியா.

மாதவனுக்கு வழக்கமான கேரக்டர் இல்லாமல் கொஞ்சம் புகுந்து விளையாடும் இடமும் இருக்கிறது. அளவாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். அனுஷ்கா சவால் மிகுந்த கேரக்டரை ஓரளவு சமாளித்துள்ளார். பெரும்பாலும் படம் முழுதும் அவர் முகம் சோர்வாகவே இருக்கிறது..! Why?

சாலினி பாண்டே கேரக்டர் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரின் காதலனாக வரும் சுப்பாராஜு சூப்பர் ராஜுவாக க்ளைமாக்ஸில் ஈர்க்கிறார். உண்மையைக் கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஞ்சலி. அவர் குரலில் ஒரு போலீஸுக்கான கம்பீரம் இல்லை. ஆனாலும் தனது உடல் மொழியாலும் நடிப்பாலும் கவனம் பெற முயற்சித்துள்ளார்.

படத்தில் வில்லன் போலீஸாக வரும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பல காட்சிகளில் அசால்ட் காட்டி அசத்தியிருக்கிறார். அஞ்சலியின் கணவராக வரும் ஸ்ரீனிவாசஸுக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.

படத்தின் கலரிங்கும் ஒளிப்பதிவும் ஒரு ஹாலிவுட் படத்திற்கான தரத்தைக் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு சின்ன சின்னக் காட்சிகளிலும் அசத்துகிறது. பின்னணி இசைதான் இப்படியான திரில்லர் படங்களுக்கு ஆன்மா. அதை இசை அமைப்பாளர் சரியாக உள் வாங்கி உழைத்திருக்கிறார். ஆர்ட் டிபார்ட்மெண்டின் டீடெயிலிங் வொர்க்கும் மெச்சத்தக்கது.

ஒரே நேரத்தில் மூன்று மொழியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் சில இடங்களில் லிப்சிங் பிரச்சனை இருக்கிறது. 2 மணி நேரம்தான் படத்தின் நீளம் என்பதால் திரைக்கதையில் இன்னும் சில ரசவாத விசயங்களை இணைத்திருக்கலாம்.

சி.சி.டிவி புட்டேஜ் லாஜிக்குகளை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம். படத்தின் ஆதார ஜீவனே சாலினி பாண்டேதான் என்பதால் அவரது காதல் காட்சிகளில் இன்னமும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்.

அஞ்சலியின் இன்வெஸ்டிகேசன், அனுஷ்கா மாதவன் லவ், அனுஷ்கா சாலினி பாண்டே நட்பு, மைக்கேல் கேரக்டரின் வில்லனத்தனம் என்பதைத் தாண்டி படம் ஒரு கட்டத்தில் சின்ன தேக்கநிலையை அடைந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு பரபரப்பை தொற்ற வைத்து விடுகிறார் இயக்குநர் ஹேமந்த் மதுகர்.

சிறு சிறு லாஜிக் சத்தங்கள் அதிகம் இருந்தாலும், சைலன்ஸ் Mood-ல் பார்த்தால் இந்த சைலன்ஸ் பிடிக்கவே செய்யும்..!

The post சைலன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>