Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
த.செ.ஞானவேல் – Touring Talkies https://touringtalkies.co Sun, 21 Nov 2021 10:16:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png த.செ.ஞானவேல் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அக்னி கலசம் காலண்டரின் பின்னணி எனக்குத் தெரியாது” – ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேலின் விளக்கம் https://touringtalkies.co/jai-bhim-director-tha-se-gnanavel-explanation-about-that-calender/ Sun, 21 Nov 2021 10:15:56 +0000 https://touringtalkies.co/?p=19502 ‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அது இங்கே : தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.  ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப் பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் […]

The post “அக்னி கலசம் காலண்டரின் பின்னணி எனக்குத் தெரியாது” – ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேலின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அது இங்கே :

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.  ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப் பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன்.

1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன.

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. 

நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார். அதற்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை நமது முதல்வர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளபடும் என நான் அறியவில்லை.  1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக்ஷன்’ பணியின்போதும் எங்கள்  யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும்கூட, படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார்.  இயக்குநராக என் பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலை வடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற  திரையுலகத்தினருக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

த.செ.ஞானவேல்

The post “அக்னி கலசம் காலண்டரின் பின்னணி எனக்குத் தெரியாது” – ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேலின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
“ஜெய் பீம்’ படத்தில் நான் நடித்த காட்சி சரியானதுதான்…” – நடிகர் பிரகாஷ்ராஜின் பதில். https://touringtalkies.co/actor-prakash-raj-explanation-about-his-scene-in-jai-bhim-movie/ Sun, 07 Nov 2021 09:30:32 +0000 https://touringtalkies.co/?p=19261 சூர்யாவின் தயாரிப்பில், நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தில் வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். ஐ.ஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சியில் திருடு போன நகைகளைப் பற்றி, அடகுக் கடை வைத்திருக்கும் ஒரு சேட்டுவிடம் பிரகாஷ்ராஜ் விசாரிக்கும்போது, தமிழ் தெரிந்த அந்த சேட்டு பிரகாஷ்ராஜிடம் இந்தியில் பேசுவார். அவரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ், “தமிழ்ல பேசு” என்பார். […]

The post “ஜெய் பீம்’ படத்தில் நான் நடித்த காட்சி சரியானதுதான்…” – நடிகர் பிரகாஷ்ராஜின் பதில். appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவின் தயாரிப்பில், நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.

இந்தப் படத்தில் வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். ஐ.ஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

படத்தில் ஒரு காட்சியில் திருடு போன நகைகளைப் பற்றி, அடகுக் கடை வைத்திருக்கும் ஒரு சேட்டுவிடம் பிரகாஷ்ராஜ் விசாரிக்கும்போது, தமிழ் தெரிந்த அந்த சேட்டு பிரகாஷ்ராஜிடம் இந்தியில் பேசுவார். அவரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ், “தமிழ்ல பேசு” என்பார்.

இந்தக் காட்சிக்கு ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யார், எந்த மொழியில் பேசுவது என்பது அவரவர் விருப்பம். அதற்காக தமிழில் பேசு’ என்று மிரட்டுவது அநாகரிகம் என்று எழுதி வருகிறார்கள்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “அந்த ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்காமல், அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைத்தான் பார்த்தார்கள் என்றால், அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. இது அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியிடம் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர்,  வேண்டுமென்றே இந்தியில் பேசினால் வேறு எப்படி நடந்து கொள்வார்…? இது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இப்படம் 1990-களை பின்னணியாக கொண்டது. அந்தக் கேரக்டருக்கு இந்தி திணிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார். முறையான கல்வியைப் பெறாத பழங்குடியினப் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “ஜெய் பீம்’ படத்தில் நான் நடித்த காட்சி சரியானதுதான்…” – நடிகர் பிரகாஷ்ராஜின் பதில். appeared first on Touring Talkies.

]]>
ஜெய் பீம் படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/jai-bhim-movie-trailer/ Fri, 22 Oct 2021 13:09:13 +0000 https://touringtalkies.co/?p=18969 Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written & Directed by Tha.Se. Gnanavel Produced by Jyotika & Suriya World Premiere Day – 2nd November 2021, exclusive release on Amazon Prime Video Movie Credits: Written & Directed by Tha.Se. Gnanavel Music – […]

The post ஜெய் பீம் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written & Directed by Tha.Se. Gnanavel Produced by Jyotika & Suriya World Premiere Day – 2nd November 2021, exclusive release on Amazon Prime Video Movie Credits: Written & Directed by Tha.Se. Gnanavel Music – Sean Roldan Cinematography – SR Kathir ISC Editor – Philomin Raj Production Design – K. Kathir Action – Anbariv Additional Screenplay – Kiruthika B Lyrics – Yugabharathi, Raju Murugan, Arivu Choreography – Dinesh Costume Design – Perumal Selvam – Poornima Ramasamy Audiography – Raja Krishnan M R Sound Design – S. Alagiyakoothan – Suren.G Hair and Makeup – Pattanam Rashid VFX – Knack Studios – Nxgen Colorist – G. Balaji Stills – SR. Murugan PRO – Yuvraaj Designs – Kabilan Production Supervisor – S. Karthikeyan Chief Production Controller – B. Senthil Kumar Co Produced by Rajsekar Karpoorasundarapandian Produced by Jyotika & Suriya

The post ஜெய் பீம் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ https://touringtalkies.co/jai-bhim-movie-will-released-on-deepavali-day/ Fri, 01 Oct 2021 11:21:04 +0000 https://touringtalkies.co/?p=18430 சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில், பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். […]

The post தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில், பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் – ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன். 

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது.

ராஜ்கண்ணு கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக பிரத்யேகமாக வெளியாகிறது.

The post தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ appeared first on Touring Talkies.

]]>