The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.
“தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.
அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘தேவர் மகன்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது..! appeared first on Touring Talkies.
]]>1993-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தேவர் மகன்’. சிவாஜி, கமல், கவுதமி, ரேவதி, நாசர், ‘தலைவாசல்’ விஜய், ரேணுகா, வடிவேலு என்று பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படம் அந்தாண்டின் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இத்திரைப்படம் இந்தியில்கூட மொழி மாற்றம் செய்யப்பட்டது.
இப்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கமல்ஹாசன் ‘மலையாள மனோரமா’ டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தை ‘மாலிக்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவிருக்கிறார். இவர் கமலின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் தொகுப்பாளர். அந்தப் பட வேலைகள் சமயத்தில் மகேஷின் பணித் திறனை அறிந்த கமல், “நீ நிச்சயமாக சிறந்த இயக்குநராக வருவாய்” என்று அப்போதே வாழ்த்தினாராம். அந்த வாழ்த்துக்கள் பலித்த கையோடு கமல்ஹாசனின் சொந்தப் படத்தையும் இயக்கப் போகும் வாய்ப்பையும் பெறுகிறார் மகேஷ் நாராயணன். இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘தேவர் மகன்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது..! appeared first on Touring Talkies.
]]>