Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தேர்தல் ஆணையம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 22 Nov 2020 05:16:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தேர்தல் ஆணையம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! https://touringtalkies.co/diector-s-a-chandrasekar-wrote-a-letter-to-election-commission-for-not-to-register-his-party-name/ Sun, 22 Nov 2020 05:15:48 +0000 https://touringtalkies.co/?p=10279 நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார். இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது […]

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார்.

இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது அப்பாவையே எச்சரித்திருந்தார்.

இந்த நிலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகரும் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கடுத்து கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்பவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க.. இப்போதைக்கு அந்தக் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தார்.

இடையில் பல நாட்கள் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் பல சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வந்தது இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது.

இதனால், “விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டாம்…” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆக, நடிகர் விஜய்யை வைத்து உருவான ஒரு மாத கால சர்ச்சை சட்டென்று முடிவுக்கு வந்திருக்கிறது.

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! https://touringtalkies.co/all-india-thalapathy-makkal-iyakkam-party-announcement-news/ Thu, 05 Nov 2020 15:09:02 +0000 https://touringtalkies.co/?p=9730 இன்று மாலை வரையிலும் அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி திடீரென்று மாலை வேளையில் வெளியானது. ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், […]

The post நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>
இன்று மாலை வரையிலும் அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி திடீரென்று மாலை வேளையில் வெளியானது.

‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், உடனடியாக இதை மறுத்து நடிகர் விஜய்யின் தரப்பு, இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் விஜய் எந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்றும் விளக்கமளித்தது.

விஜய்யின் மேலாளர் இதனை மறுத்த 5-வது நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “அந்தக் கட்சி பதிவு செய்தி உண்மைதான். நான்தான் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய சொந்த முயற்சி. இது விஜய்யின் அரசியல் கட்சி அல்ல. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை..” என்று கூறினார்.

இந்தப் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பு நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>