Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தெற்கத்தி வீரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 28 Nov 2022 15:37:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தெற்கத்தி வீரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தெற்கத்தி வீரன்’ டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/therkathi-veeran-movie-will-release-on-december-2/ Mon, 28 Nov 2022 15:37:13 +0000 https://touringtalkies.co/?p=27774 சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர […]

The post ‘தெற்கத்தி வீரன்’ டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’.

இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியிலும் நடித்துள்ளார். என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு  செய்ய வி.ஜே.சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை குருராஜ் கவனிக்க, பாரதி மற்றும் சாண்டி நடனம் அமைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்கம் – சூப்பர் சுப்புராயன், கனல் கண்ணன்.

படம் பற்றி படத்தின் நாயகனும், இயக்குநருமான சாரத் பேசும்போது, “தூத்துக்குடியில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ‘தெற்கத்தி வீரன்’ படம். எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தைத்தான் படமாக்கியுள்ளேன்.

5 வில்லன்கள் மற்றும் 4 நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்களும், அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்.

படத்தில் 8 சண்டை காட்சிகள், 5 பாடல் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா சார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபனிங் சாங் பாடியுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் படமான இந்தப் பாடல் காட்சிக்கு சாண்டி மாஸ்டர் அழகாக நடனம் அமைத்துக் கொடுத்தார். அதிரடி சண்டை காட்சிகள் ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு விருந்தாக அமையும்…” என்றார்.

நாயகனின் நண்பராக வரும் அசோக் படம் பற்றி பேசுகையில், “நாயகனாக நடித்து வரும் எனக்கு இப்படியொரு கேரக்டர் சரிபட்டு வருமா என்று முதலில் தயங்கினேன். ஆனால் சாரத் என்னிடம் கதை சொன்ன விதமும் கதையும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். டி.ஆர்.போல எல்லா திறமைகளும் கொண்டவர் சாரத். இந்த படம் எனக்கு முக்கியமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, “ஒரு படத்தில் பல பொறுப்புகளை ஏற்று வேலை செய்வது சவாலானது. சாரத் சினிமாவுக்கு புதிது என்றாலும் அனுபவம் பெற்ற இயக்குநர் போல  இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். எனது இசையில் அப்பா பாடிய ”கடலம்மா..” பாடல் சூப்பரா வந்திருக்கு. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும் என்று இயக்குநர் என்னிடம் கேட்டார். நான் மறுக்கவே ”கடலம்மா” பாடலில் நடிக்க வைத்துவிட்டார்.”என்றார்.

வரும் டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலரும், ”கடலம்மா கடலம்மா..” பாடலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

The post ‘தெற்கத்தி வீரன்’ டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>