Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தான்யா ரவிச்சந்திரன் – Touring Talkies https://touringtalkies.co Fri, 04 Nov 2022 17:41:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தான்யா ரவிச்சந்திரன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘மெளன குரு’ சாந்தகுமார் இயக்கும் புதிய படம் https://touringtalkies.co/mouna-guru-director-shanthakumar-directs-a-new-movie/ Fri, 04 Nov 2022 17:40:10 +0000 https://touringtalkies.co/?p=26558 DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளன குரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் – தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘மெளன குரு’, ‘மகா முனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட […]

The post ‘மெளன குரு’ சாந்தகுமார் இயக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளன குரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் – தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

‘மெளன குரு’, ‘மகா முனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.

இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி), ஒளிப்பதிவு – சிவா G.R.N., கலை இயக்கம் – சிவராஜ் சாமரன், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், படத் தொகுப்பு – V.J.சபு ஜோசப், இசை – தமன், பாடல்கள் – யுகபாரதி, புகைப்படங்கள் – M.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு – மீனு சித்ரா கனி, உடைகள் – P.செல்வம், ஒப்பனை – வினோத், இணை இயக்கம் – சிவ பிரகாஷ் & கிருஷ்ணமூர்த்தி, புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ் – C.சரவணன், தயாரிப்பு மேலாளர் – தேனி தமிழ், நிர்வாக தயாரிப்பாளர் – S.பிரேம்.

ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான ‘மகாமுனி’ மற்றும் ‘மெளன குரு’.

இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.

தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன்.

‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘அந்தகாரம்’  ஆகிய படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தக் கட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன்  தொடங்கியது.

The post ‘மெளன குரு’ சாந்தகுமார் இயக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
‘மாயோன்’ படத்திற்காக தமிழகம் முழுவதும் ரத யாத்திரை..! https://touringtalkies.co/chariot-pilgrimage-all-over-tamil-nadu-for-mayon-movie/ Sun, 05 Jun 2022 13:02:51 +0000 https://touringtalkies.co/?p=22455 Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘மாயோன்’.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு ரதத்தில், படத்தில் இடம் பெறும்  விஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. […]

The post ‘மாயோன்’ படத்திற்காக தமிழகம் முழுவதும் ரத யாத்திரை..! appeared first on Touring Talkies.

]]>
Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘மாயோன்’. 

புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு ரதத்தில், படத்தில் இடம் பெறும்  விஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரதம் 40 நாட்கள் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் வலம் வரப் போகிறது.

இன்று காலை சென்னையில் ஈஸ்வரி பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இந்த ரதத்தின் பயணம்  துவக்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நம் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்தும் அரங்கேற்றப்பட்டது. மேலும் பார்வையற்ற  மாற்றுத் திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக  ஆடியோ விளக்கத்துடன்  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிரெய்லர்  வெளியிடப்பட்டது.

அகல் பவுண்டேசனை சேர்ந்த பார்வையற்றவர்கள் இந்த சிறப்பு டிரெய்லரை பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  இவ்விழாவினில் படக் குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசும்போது, “நான் இப்படத்தில் நடிப்பதாக எல்லாம் ப்ளான் இல்லை. ஆனால் படப்பிடிப்பில் ஒரு காட்சிதான் என சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். எனக்குள் பல காலம் இருந்த கதை. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்.

சைக்கோ படத்தின் போதுதான்  பார்வையற்றோருக்கு டிரெய்லர் செய்ய வேண்டும் என்ற ஐடியா முதலில் எனக்குள் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒரு சமூக அக்கறையாக இதை செய்தோம். சைக்கோ படத்தை பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப் பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும்…” என்றார்.

நடிகரும், இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் ஒரு நடிகன்தான். இது பக்தி படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு குகை மாதிரி இடத்திற்கு சென்றோம். அதன் உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கத்தைப் பார்த்து பிரமித்தேன். கலை இயக்குநருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “இண்டியானா ஜோன்ஸ்’, ‘டாவின்சி கோட்’ படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை, இந்தப் படத்தில்தான் நிறைவேறியுள்ளது.

இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படம் பக்தி படமெல்லாம் இல்லை. அதைத் தாண்டி நிறையவே இருக்கிறது. மேடையில் குட்டிக் கதை சொல்லலாம். ஆனால் இந்தப் படத்தின் கதையை சொல்ல முடியாது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார். 

நாயகி தான்யா ரவிச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. சிபிராஜ் உடன் நடித்தது நல்ல அனுபவம். படத்தில் முழுதும் வருவது மாதிரி பெரிய ரோல்.  படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

கலை இயக்குநர் பாலா பேசும்போது, “இந்த மாதிரி கதையும், திரைக்கதையும் தமிழில் அதிகம் வந்ததில்லை. இந்தப் படத்திற்காக நிறைய இடங்களுக்கு ஆராய்ச்சிக்காக சென்று தகவல்கள் சேகரித்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறோம். படம் பார்க்கும் போது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்…” என்றார்.

நடிகர் மாரிமுத்து பேசும்போது, “இயக்குநர் 15 நிமிடத்தில் திரில் நிறைந்த இந்த கதையை என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் சார் உடன் நடித்ததில் எனக்குப் பெரும் எனக்கு மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி.

இதுவரை நாம் பயணப்படாத ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கும் இந்த படம். இந்த பூமியில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் இந்த மாதிரி கதை எழுத பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த படம் விரைவில் தியேட்டருக்கு வரவிருக்கிறது. படம் பார்த்து நீங்கள் வரவேற்பு தர வேண்டும் நன்றி…” என்றார்.

இயக்குநர் N.கிஷோர் பேசும்போது, “இந்தப் படத்தின் திரைக்கதை மிக ஃபிரஷ்ஷாக இருந்தது. சிபிராஜ் எப்போதும் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தது. படத்தில்  கே.எஸ்.ரவிக்குமார், மாரிமுத்து, பக்ஸ் என ஒவ்வொருவருமே படத்திற்கு பொருத்தமாக அமைந்தார்கள்.

படத்தை நிறைய உழைப்பில் நிறைய பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக அருண்மொழி சார்தான் காரணம். அவர் படம்தான் முக்கியம் என புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்தார். மேலும் ஓடிடி வாய்ப்பு இருந்தும் படத்தை திரையரங்கில்தான் கொண்டு வருவேன் எனும் அவரின் நம்பிக்கைக்கு நன்றி. கந்தர்வ இசை படத்திற்கு தேவைப்பட்டது. எங்களுக்கு இளையராஜாதான் ஒரே வாய்ப்பாக தோன்றினார் . அவரைவிட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணர்ந்து கொள்ள கூடிய கதையாக இருக்கும். ..” என்றார்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது.

The post ‘மாயோன்’ படத்திற்காக தமிழகம் முழுவதும் ரத யாத்திரை..! appeared first on Touring Talkies.

]]>
‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் https://touringtalkies.co/chief-minister-mk-stalin-greeted-the-film-crew-after-watching-the-film-nenjukku-needhi/ Mon, 16 May 2022 08:40:40 +0000 https://touringtalkies.co/?p=22088 Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’ இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், […]

The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின்  படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

வரும் மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி’ படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>