Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தர்ஷா குப்தா – Touring Talkies https://touringtalkies.co Wed, 18 Aug 2021 06:47:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தர்ஷா குப்தா – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் https://touringtalkies.co/rudhra-thaandavam-movie-gets-u-a-certificate/ Wed, 18 Aug 2021 06:46:22 +0000 https://touringtalkies.co/?p=17091 கடந்த ஆண்டு  இயக்குநர் ஜி.மோகனின் இயக்கத்தில்  ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. “ஆணவக் கொலைகள் அனைத்தும் உண்மையல்ல” என்னும் கருத்துடன் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சயைக் கிளப்பியது.   தியேட்டர்களில் மட்டுமே தொடர்ந்து 3 வாரங்கள் ஓடிய இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் 14.28 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்தது. இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் […]

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>
கடந்த ஆண்டு  இயக்குநர் ஜி.மோகனின் இயக்கத்தில்  ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’.

“ஆணவக் கொலைகள் அனைத்தும் உண்மையல்ல” என்னும் கருத்துடன் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சயைக் கிளப்பியது.  

தியேட்டர்களில் மட்டுமே தொடர்ந்து 3 வாரங்கள் ஓடிய இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் 14.28 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்தது.

இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து இயக்கியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா இந்த படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இயக்குர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

திரெளபதி’ படத்திற்கு 14 இடங்களில் சென்சார் போர்டு கட் சொல்லியிருந்தது. மேலும், குறிப்பிட்ட கட்சித் தலைவரை குறிக்கும்விதமாக வசனங்கள் இருப்பதாகவும் சர்ச்சை எழ, அதையும் கோர்ட் வரையிலும் சென்று நீக்க உத்தரவு வாங்கியது நினைவிருக்கலாம்.

இப்போது இந்தப் படத்திற்கும் சில கட்டுகள் கிடைத்திருப்பதால் நிச்சயம் இதுவும் அரசியல், ஜாதி சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>
இவர்தான் ஸ்லிம் நயன்தாராவாம்..! https://touringtalkies.co/actress-dharsha-guptha-get-a-nick-name-slim-nayanthara/ Fri, 26 Feb 2021 09:27:45 +0000 https://touringtalkies.co/?p=13349 இன்றைய காலக்கட்டங்களில் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடிகர், நடிகைகள் திரைப்படங்களையும் தாண்டி தங்களை ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பிக்க சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தனது ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் வளர்ந்து வரும் நடிகையான தர்ஷா குப்தா. ‘குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள்வரை சென்று சேர்ந்தவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது, மெகா ஹிட் திரைப்படமான ‘திரெளபதி’ படத்தின் இயக்குநரான மோகன்.ஜி.யின் அடுத்த படமான […]

The post இவர்தான் ஸ்லிம் நயன்தாராவாம்..! appeared first on Touring Talkies.

]]>
இன்றைய காலக்கட்டங்களில் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடிகர், நடிகைகள் திரைப்படங்களையும் தாண்டி தங்களை ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பிக்க சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தனது ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் வளர்ந்து வரும் நடிகையான தர்ஷா குப்தா. ‘குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள்வரை சென்று சேர்ந்தவர் தர்ஷா குப்தா.

இவர் தற்போது, மெகா ஹிட் திரைப்படமான ‘திரெளபதி’ படத்தின் இயக்குநரான மோகன்.ஜி.யின் அடுத்த படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.

ஸ்லிம் நயன்தாரா’ என்ற பட்டப் பெயருடன் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு விழா கொண்டாடியிருக்கிறார்.

எல்லாஞ் சரி.. இந்த ‘ஸ்லிம் நயன்தாரா’ என்ற படத்தை இந்த அம்மணிக்குக் கொடுத்தது யாராம்..? பட்டம் கொடுத்தவங்க முன்ன, பின்ன நயன்தாராவை பார்த்திருக்காங்களா.. இல்லையாமா..?

The post இவர்தான் ஸ்லிம் நயன்தாராவாம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா. https://touringtalkies.co/dharsha-guptha-enters-in-cinema-industry-as-heroine-in-rudhra-thaandavam-movie/ Thu, 31 Dec 2020 08:21:24 +0000 https://touringtalkies.co/?p=11613 ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக ‘திரௌபதி’ படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது இந்தப் படத்தின் நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார். பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’யில்  பிஸியாகவும் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் தர்ஷா குப்தாவிற்கு இப்போது திரைப்படத்தில் […]

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா. appeared first on Touring Talkies.

]]>
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக ‘திரௌபதி’ படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது இந்தப் படத்தின் நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.

பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’யில்  பிஸியாகவும் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் தர்ஷா குப்தாவிற்கு இப்போது திரைப்படத்தில் நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.

‘திரெளபதி’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான மோகன்.ஜி. இயக்கவுள்ள அடுத்தப் படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில்தான் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் தர்ஷா குப்தா.

இது பற்றி தர்ஷா குப்தா பேசும்போது, “திரெளபதி என்னும் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த இயக்குநர் மோகன்.ஜி-யின் அடுத்தப்  படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.  

என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட  படைப்பை கொடுத்த, மோகன்.ஜியுடன் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது.

திரெளபதி’ போலவே இந்த ‘ருத்ர தாண்டவம்’ படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ருத்ர தாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன..” என்கிறார் தர்ஷா குப்தா.

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா. appeared first on Touring Talkies.

]]>