Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தயாரிப்பாளர் சிங்காரவேலன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Mar 2021 19:08:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தயாரிப்பாளர் சிங்காரவேலன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அவர்தான் கதைத் திருடர்” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது பாய்கிறார் இயக்குநர் சரவண சக்தி. https://touringtalkies.co/origional-story-writer-producer-singaravelan-told-director-saravana-sakthi/ Tue, 30 Mar 2021 05:01:21 +0000 https://touringtalkies.co/?p=13979 பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான சிங்காரவேலன் ‘பில்லா பாண்டி’ இயக்குநரான சரவண சக்தி மீது கதைத் திருட்டு புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் பற்றிய செய்தியை இந்தப் பதிவில் நாம் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்தப் புகாரை அப்படியே தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதே, திருப்பிப் போடுகிறார் இயக்குநர் சரவண சக்தி. இது தொடர்பாக அவர் தரப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது : இயக்குநர் சரவண  சக்தி நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை […]

The post “அவர்தான் கதைத் திருடர்” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது பாய்கிறார் இயக்குநர் சரவண சக்தி. appeared first on Touring Talkies.

]]>
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான சிங்காரவேலன் பில்லா பாண்டி’ இயக்குநரான சரவண சக்தி மீது கதைத் திருட்டு புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் பற்றிய செய்தியை இந்தப் பதிவில் நாம் வெளியிட்டிருந்தோம்.

இப்போது இந்தப் புகாரை அப்படியே தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதே, திருப்பிப் போடுகிறார் இயக்குநர் சரவண சக்தி.

இது தொடர்பாக அவர் தரப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

இயக்குநர் சரவண  சக்தி நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்திற்கு ‘குலசாமி’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது.

இருப்பினும், ‘குலசாமி’ என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட அந்தப் பெயரை  கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி. மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது.

இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடுவதாக இப்படக் குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு ராக் ஸ்டார்’ நடிக்கும் ‘எங்க குலசாமி’ என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அப்படத்தின் பத்திரிக்கை செய்தியும் வெளியானது.

அந்த செய்தியை சரவண சக்தி படிக்கும்போது, தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் ‘எங்க குலசாமி’ படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் பின்புதான் இயக்குநர் சரவண சக்திக்கு சிங்காரவேலன் தன்னை நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்பது புரிந்தது.

இதற்கு முன் இவர் சிங்காரவேலனிடம் இருவரும் இணைந்து இப்படத்தை எடுப்போம் என்று கூறியதாகவும், அதற்கு சிங்காரவேலன் ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக இரண்டு நாள் அலுவலக வேலையில் ஈடுபட்டு ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது இப்படத்தின் கதையை நம்பிக்கையின் பெயரில் சிங்காரவேலனிடம் கூறியிருக்கிறார் சரவண சக்தி. பிறகு சில காரணங்களால் சிங்காரவேலனுடன் இணைந்து சரவண சக்தியால் அப்படத்தை தயாரிக்க முடியவில்லை. ஆகையால், MIK Production (P) Ltd தயாரிப்பில் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துவிட்டார் சரவண  சக்தி.

இப்போது அதே கதையை ராக் ஸ்டார்’ என்பவரை வைத்து சிங்கார வேலன் எடுக்கவுள்ளார் என்பதையறிந்த சரவண  சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பிரபல பத்திரிக்கையில், “இயக்குநர் சரவண  சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் ‘குலசாமி’ என்ற படத்தின் ஒட்டு மொத்த காப்பிரைட் உரிமை எனது கட்சிக்காரர் கே.விக்னேஷ் குமார் அவர்களிடம் உள்ளது. எனது கட்சிக்காரரின் அனுமதி இல்லாமல் யாரேனும் இப்படத்தை விற்க முயல்வதோ வாங்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வழக்கறிஞர் A.M.ரவீந்திரநாத் ஜெயபால் மூலம் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் இயக்கும் ‘குலசாமி’ படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு நியாயம் கேட்பதற்காக சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சரவண சக்தி சென்றுள்ளார். அப்போது சிங்காரவேலன் அங்கு இல்லை, விக்னேஷ் என்பவர்தான் இருந்துள்ளார்.

அவரிடம் விசாரிக்கும்போது “என் பெயர் விக்னேஷ். ஆனால், அந்த அறிவிப்பில் உள்ள விக்னேஷ் நானில்லை…” என்று கூறியிருக்கிறார். மேலும், ‘எங்க குலசாமி’ படத்திற்காக ஒப்பந்த சிங்காரவேலன் ஒப்பந்தம் செய்த அறிமுக நாயகன் ராக் ஸ்டாரும்’ அங்கு இருந்துள்ளார்.

அவரிடம் கேட்டதற்கு, “என்னிடம் ஒரு கதை இருக்கிறது நீங்கள்தான் நாயகன்…” என்றும், “இப்படம் OTTயில் வெளியாகும் என்று என்னிடம் கூறினார்கள். இது தவிர வேறு எந்த விபரமும் எனக்கு தெரியாது…” என்று ராக் ஸ்டார் கூறியுள்ளார்.

சிங்காரவேலன் நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் விமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இதை செய்திருக்கிறார். மேலும், இதில் அவர் பெயர் வெளிவராத வண்ணம் அவருடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை வைத்து இந்தப் புகாரை கொடுத்திருக்கிறார்…” என்று சரவண சக்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது புகார் சொல்லியிருக்கிறார்.

The post “அவர்தான் கதைத் திருடர்” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது பாய்கிறார் இயக்குநர் சரவண சக்தி. appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. https://touringtalkies.co/tfpc-election-2020-singaravelan-complaint-ltter-news/ Sat, 24 Oct 2020 06:47:33 +0000 https://touringtalkies.co/?p=9194 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்பு ரீலீஸ் செய்யப்பட்ட படத்தை நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள், தங்களுக்கான தகுதியாக அதைக் குறிப்பிட முடியாது என்பதால் இவர்களது வேட்பு மனுக்களின் தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  தேர்தல் அதிகாரியிடம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-க்கு உட்பட்டது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58-ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது.

அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள்.

15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில்,                                       விதி எண் 2-ல் “சங்க விதிமுறை எண் 13-ன்படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்ப் படம் தயாரித்து,  வெளியிட்ட தயாரிப்பாளர், உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு…” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே அவரால் தற்போதைய தேர்தலில் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின்படி, 14-10-2020-க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை                                14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.

எனவே, ஐயா அவர்கள்…

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் விதிகளின்படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>