Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 17 Aug 2022 11:38:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 1990-களின் டிவி நட்சத்திரங்களின் கொண்டாட்டம் https://touringtalkies.co/1990-tv-artistes-reunion-celebration/ Wed, 17 Aug 2022 11:37:42 +0000 https://touringtalkies.co/?p=23881 1990-களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர். 20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர். ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுபட்ட இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சிவப்புக் கலர் உடைகளில் வந்து தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினார்கள். இந்த நட்சத்திர சங்கமத்தில் சங்கமமான நட்சத்திரங்கள் : கௌஷிக், […]

The post 1990-களின் டிவி நட்சத்திரங்களின் கொண்டாட்டம் appeared first on Touring Talkies.

]]>
1990-களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.

ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுபட்ட இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சிவப்புக் கலர் உடைகளில் வந்து தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நட்சத்திர சங்கமத்தில் சங்கமமான நட்சத்திரங்கள் :

கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு, போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட், ரிஷி, அஞ்சு,  கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், K.S.G.வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸவேதா பாரதி, ரோஜா்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர்.

இனி வரும் காலங்களில் இந்தச் சங்கமம் வருடந்தோறும் நடைபெறும் என்று இவர்கள் தெரிவித்தனர்.

The post 1990-களின் டிவி நட்சத்திரங்களின் கொண்டாட்டம் appeared first on Touring Talkies.

]]>
கொரோனா பயம்-நடிகர் சங்கம், இயக்குநர் சங்கத் தேர்தல் ஒத்தி வைப்பு https://touringtalkies.co/directors-union-and-chinnathirai-nadigal-sangam-elections-are-postponed/ Sat, 22 Jan 2022 11:42:19 +0000 https://touringtalkies.co/?p=20370 தமிழ்த் திரையுலகத்தில் நடக்கவிருந்த சங்கங்களின் தேர்தல் கொரோனா பயத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் 25-ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் கே.பாக்யராஜின் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடி வருவதால் ஒரு இடத்தில் 50 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்று தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் 1100 […]

The post கொரோனா பயம்-நடிகர் சங்கம், இயக்குநர் சங்கத் தேர்தல் ஒத்தி வைப்பு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் நடக்கவிருந்த சங்கங்களின் தேர்தல் கொரோனா பயத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் 25-ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் கே.பாக்யராஜின் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடி வருவதால் ஒரு இடத்தில் 50 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்று தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் 1100 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றால் பெரும் கூட்டம் கூட வாய்ப்பு உண்டு என்பதை அறிந்த சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்புத் துறை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதேபோல் சென்னை மாநகர காவல்துறையும் இந்த நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்து வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து இந்தத் தேர்தல் காலவரையின்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும்வரையிலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சங்கத்தின் துணைத் தலைவர்களான இயக்குநர்கள் மாதேஷும், எழிலும் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கும் வரும் 27-ம் தேதியன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலுக்கும் சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல்துறையும் அனுமதி மறுத்ததை அடுத்து, இந்தச் சங்கத்தின் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post கொரோனா பயம்-நடிகர் சங்கம், இயக்குநர் சங்கத் தேர்தல் ஒத்தி வைப்பு appeared first on Touring Talkies.

]]>
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு https://touringtalkies.co/actor-manobala-select-as-president-of-tamilnadu-chinnathirai-actors-union/ Sat, 03 Oct 2020 06:44:23 +0000 https://touringtalkies.co/?p=8306 சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குநருமான மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த நடிகர் ரவிவர்மா பல்வேறு குற்றச்சாட்டுக்களால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்தச் சங்கத்தில் இதுவரையிலும் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நேற்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு appeared first on Touring Talkies.

]]>

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குநருமான மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த நடிகர் ரவிவர்மா பல்வேறு குற்றச்சாட்டுக்களால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அந்தச் சங்கத்தில் இதுவரையிலும் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நேற்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு appeared first on Touring Talkies.

]]>