Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
டேஞ்சரஸ் டிரெயிலர் – Touring Talkies https://touringtalkies.co Fri, 14 May 2021 11:34:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png டேஞ்சரஸ் டிரெயிலர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராம்கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது https://touringtalkies.co/ram-gopal-varmas-dangerous-movie-trailer-news/ Fri, 14 May 2021 11:31:41 +0000 https://touringtalkies.co/?p=15088 சர்ச்சைக்குரிய இயக்குநராக உருவெடுத்திருக்கும் ராம்கோபால்வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகி வழக்கம்போல சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராம்கோபால் வர்மா சமீப ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய, பெண் உடலை மையமாக வைத்து.. கவர்ச்சியை முன்னிறுத்தி, பாலியல் தொடர்பான கதைகளையே படமாக்கி வருகிறார். மும்பையில் இருந்து அவர் ஹைதராபாத்திற்கு நிரந்தரமாக குடியேறிய பிறகு அவர் எடுத்த அத்தனை படங்களும் பாலியல் தொடர்பான கிரைம், திரில்லர் சப்ஜெக்ட் திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் அவர் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் டேஞ்சரஸ். இந்தப் படம் […]

The post ராம்கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சர்ச்சைக்குரிய இயக்குநராக உருவெடுத்திருக்கும் ராம்கோபால்வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகி வழக்கம்போல சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராம்கோபால் வர்மா சமீப ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய, பெண் உடலை மையமாக வைத்து.. கவர்ச்சியை முன்னிறுத்தி, பாலியல் தொடர்பான கதைகளையே படமாக்கி வருகிறார்.

மும்பையில் இருந்து அவர் ஹைதராபாத்திற்கு நிரந்தரமாக குடியேறிய பிறகு அவர் எடுத்த அத்தனை படங்களும் பாலியல் தொடர்பான கிரைம், திரில்லர் சப்ஜெக்ட் திரைப்படங்கள்தான்.

அந்த வரிசையில் அவர் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் டேஞ்சரஸ். இந்தப் படம் லெஸ்பியன் உறவை முன் வைத்து தயாராகியுள்ளதால் இந்தியா முழுவதும் இத்திரைப்படம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தப் படத்தில் அப்ஸரா ராணி, நைனா கங்குலி இருவரும்தான் முக்கிய கதாபாத்திரங்களில் அதாவது காதலர்களாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் துவக்கத்தில் இருந்தே இந்தப் படம் குறித்து அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டேயிருந்தார் ராம் கோபால் வர்மா.

டிரெயிலர் வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்தப் படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுக் கொண்டேயிருந்தார் ராம்கோபால் வர்மா. அது மிக இலகுவாக பற்றிக் கொண்டது.

இந்த டிரெயிலர் வெளியாகி 23 மணி நேரத்திற்குள் 77 லட்சம் பேர் இதைப் பார்த்திருக்கிறார்கள்.

ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு, கண்டிக்கப்படும் ஒரு இளம் பெண்ணுக்கு இன்னொரு இளம் பெண் ஆறுதல் சொல்லி அடைக்கலம் தர.. அதுவே அவர்களுக்கு இடையிலான காதலாக மாறுகிறது. சமூகமே வெளியில் எதிர்க்கும் இந்தத் தன் பாலின ஈர்ப்புக் காதலில் அவர்களால் ஜெயிக்க முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் கதையாம்.

படத்தின் டிரெயிலரில் மிக இயல்பாக ஆண்-பெண் முத்தமிடுவதைப் போலவே நாயகிகள் இருவரும் முத்தமிடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். பிகினி உடையில் கவர்ச்சியை ஷாட் பை ஷாட்டாக அளித்திருக்கிறார்கள் நாயகிகள். படுக்கையறைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

பொதுவாக ராம்கோபால் வர்மாவின் படங்களில் கேமிரா ஒர்க் மிக அற்புதமாக இருக்கும். இதிலும் அப்படியே.. வித்தியாசமான கோணங்கள்.. காட்சிகள்.. நடிப்பு என்று அனைத்திலும் ராம் கோபால் வர்மாவின் கை வண்ணம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் ராம் கோபால் வர்மாவின் சொந்த ஓடிடி தளமான ‘ஸ்பார்க்’ என்னும் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. வெளியாகும் தேதி இன்னமும் முடிவாகவில்லையாம்.

The post ராம்கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>