Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
டூரிங் டாக்கீஸ் – Touring Talkies https://touringtalkies.co Wed, 23 Dec 2020 14:21:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png டூரிங் டாக்கீஸ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தில் நெப்போலியன் நடிக்க மறுத்தது ஏன்…? https://touringtalkies.co/why-did-napoleon-refuse-to-act-in-kamal-haasans-maruthanayakam/ Wed, 23 Dec 2020 14:19:45 +0000 https://touringtalkies.co/?p=11395 ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் படத்தில் ஒரு கேரக்டர் கிடைத்துவிடாதா.. 2 சீன் என்றாலும் நடிக்க வாய்ப்பு வராதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நிறைய பேர். ஆனால், கமல்ஹாசனின் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். இதற்கான காரணத்தை இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் நடிகர் நெப்போலியன். அவர் இது பற்றிப் பேசும்போது, “1993-ம் வருடம் ரஜினி ஸார் நடித்த ‘உழைப்பாளி’ படத்தில் ஒரு பிரச்சினை. […]

The post கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தில் நெப்போலியன் நடிக்க மறுத்தது ஏன்…? appeared first on Touring Talkies.

]]>
உலக நாயகன்’ கமல்ஹாசனின் படத்தில் ஒரு கேரக்டர் கிடைத்துவிடாதா.. 2 சீன் என்றாலும் நடிக்க வாய்ப்பு வராதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நிறைய பேர்.

ஆனால், கமல்ஹாசனின் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

இதற்கான காரணத்தை இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “1993-ம் வருடம் ரஜினி ஸார் நடித்த ‘உழைப்பாளி’ படத்தில் ஒரு பிரச்சினை. இந்தப் படத்துக்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்டு போட்டதால் அது பற்றிப் பேசுவதற்காக நடிகர்களெல்லாம் கூடி ஆலோசனை செஞ்சோம். இந்த ஆலோசனை கூட்டம் ரஜினி ஸாரின் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.

அந்தக் கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்னாடி கமல் ஸார் என் பக்கத்துல வந்து என் கையைப் பிடிச்சுக் குலுக்கி, “சீவலப்பேரி பாண்டி’ படம் பார்த்தேன். பிரமாதமா நடிச்சிருந்தீங்க. சத்தியமா நான்கூட அந்த அளவுக்கு நடிச்சிருக்க முடியாது. அவ்வளவு அற்புதமா நடிச்சிருக்கீங்க.

முதல்ல அந்தப் படம் என் கைக்குத்தான் வந்துச்சு. அந்தக் கதை ‘ஜூனியர் விகடன்’ல தொடர் கதையா வந்தப்பவே நான் ஆர்வமா படிச்சேன். நான்தான் இதுல நடிக்கணும்ன்னு இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க.. ஆனால், என்னைவிட நீங்கதான் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமா இருக்கீங்க..” என்று சொல்லிப் பாராட்டினார்.

அப்போது அவரிடம் நான், “ஸார்.. உங்க படத்துல ஒரு கேரக்டர்ல நடிச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். நாலு சீன் வந்தால்கூட போதும் ஸார்..” என்றேன். “சொல்றேன்.. சொல்றேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

இது நடந்து முடிந்து 3 வருஷம் கழிச்சு ஒரு நாள் என்னை அழைத்தார். நானும் சென்றேன். என்னிடம் ‘மருதநாயகம்’ படத்தின் கதையைச் சொல்லி அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார்.

அந்தக் கதை அற்புதமாக இருந்தது. கதையைக் கேட்டவுடன் சிலை போல் அமர்ந்திருந்தேன். ஆனால், வில்லன் வேடம் என்றவுடன் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“ஸார்.. நான் இப்பத்தான் 4, 5 படங்கள்ல ஹீரோவா நடிச்சுக்கிட்டிருக்கேன். இப்போ போய் நான் வில்லனா நடிச்சா.. அந்தப் படங்களுக்கு பாதிப்பு வரும். அந்தத் தயாரிப்பாளர்களும் பாவம் ஸார்..” என்றேன்.

“இல்ல.. இந்தக் கேரக்டர் உங்களுக்கேத்தாப்புல இருக்கும். நீங்க நடிச்சாத்தான் பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்றார். நான் மறுபடியும் என் தரப்பு வாதத்தை வைத்தவுடன், “சரி ஓகே.. அடுத்தப் படத்துல பார்ப்போம்..” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இதுக்கப்புறம் மிக நீண்ட வருடங்கள் கமல் ஸார் என்னைக் கூப்பிடவேயில்லை. பல இடங்கள்ல பார்த்தோம். பேசினோம். ஆனால் நடிக்க மட்டும் கூப்பிடலை.

ரொம்ப வருஷம் கழிச்சு ‘விருமாண்டி’ படத்துக்குக் கூப்பிட்டு என்னை ஒரு நல்ல கேரக்டர்ல நடிக்க வைச்சாரு. அதுக்கப்புறம் கொஞ்ச சீன்களே இரு்தாலும் ‘தசாவாதாரத்துல’ நடிக்க வைச்சாரு. ‘தசாவாதாரத்துல’ நடிக்கும்போது “நான் எதுக்கு ஸார் இந்த நாலு சீனுக்கு…?” என்று கேட்டேன். “இல்ல.. இல்ல.. இந்தக் கேரக்டருக்கு உங்களைவிட்டால் எனக்கு வேற ஆளே தோணலை.. நீங்கதான் நடிக்கணும்..” என்று சொல்லி நடிக்க வைத்தார்.

ரஜினி ஸாருக்கு வில்லனா நடிச்சிருந்தாலும், கமல் ஸாருக்கு வில்லனா நடிக்காமல் கேரக்டர் ரோல் செஞ்சதில் எனக்கு பரம திருப்திதான்..” என்கிறார் நடிகர் நெப்போலியன்.

The post கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தில் நெப்போலியன் நடிக்க மறுத்தது ஏன்…? appeared first on Touring Talkies.

]]>
தங்கக் காசுகளை வாரி வழங்கிய ரஜினி..! https://touringtalkies.co/rajini-gives-gold-coin-to-ulaipali-movie-workers/ Mon, 30 Nov 2020 14:18:44 +0000 https://touringtalkies.co/?p=10568 சூப்பர் ஸ்டார் ரஜினி சத்தமே இல்லாமல் செய்திருக்கும் பல மனிதாபிமான உதவிகளைப் பற்றிய செய்திகள், இப்போதுதான் சோஷியல் மீடியாக்களின் உதவியால் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது. பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ராமதுரை ‘உழைப்பாளி’ படத்தின்போது ரஜினி செய்த மிகப் பெரிய தானம் பற்றிய ஒரு செய்தியை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியூப் தளத்தில் இடம் பெறும் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட […]

The post தங்கக் காசுகளை வாரி வழங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினி சத்தமே இல்லாமல் செய்திருக்கும் பல மனிதாபிமான உதவிகளைப் பற்றிய செய்திகள், இப்போதுதான் சோஷியல் மீடியாக்களின் உதவியால் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ராமதுரை ‘உழைப்பாளி’ படத்தின்போது ரஜினி செய்த மிகப் பெரிய தானம் பற்றிய ஒரு செய்தியை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியூப் தளத்தில் இடம் பெறும் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமதுரை இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

“நான் ‘உழைப்பாளி’ படத்தில் இயக்குநர் பி.வாசுவிடம் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினேன். அந்தப் படத்தின் பூஜையின்போது படத்தின் தயாரிப்பாளரான பி.நாகி ரெட்டி கை நிறைய தங்கக் காசுகளை படத்தின் நாயகனான ரஜினியின் கைகளில் கொடுத்தார். ஒவ்வொரு காசும் ஒரு பவுன் தேறும்..!

ரஜினி முதலில் அதை வாங்க மறுத்துவிட்டார். நாகி ரெட்டியோ, “எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போதும் அவருக்கு நாங்கள் இதேபோல் கொடுத்தோம். இது எங்களது அன்புப் பரிசு. அவசியம் நீங்க வாங்கிக்கணும்..” என்றார்.

பெரியவரின் பேச்சைத் தட்ட முடியாமல் அன்றைக்கு அந்தத் தங்கக் காசுகளை பெற்றுக் கொண்டார் ரஜினி.

ஆனால், அதே ‘உழைப்பாளி’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அந்தத் தங்கக் காசுகளை செட்டுக்கு கொண்டு வந்தார் ரஜினி.

அன்றைக்கு அந்த செட்டில் இருந்த அத்தனை தொழிலாளர்களையும் அழைத்து ஆளுக்கொரு தங்கக் காசினை கொடுத்தார். அப்போது என்னைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் ராமநாதனுக்கும் ஒரு காசு கொடுத்தார். அப்படியே நாகி ரெட்டியார் கொடுத்த மொத்தக் காசுகளையும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் ரஜினி..” என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை.

The post தங்கக் காசுகளை வாரி வழங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய அக்கறை- தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பெருமிதம் https://touringtalkies.co/producer-dhananjayan-speaks-about-super-star-rajini/ Tue, 24 Nov 2020 07:41:18 +0000 https://touringtalkies.co/?p=10347 ‘Pride of Tamil Cinema’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த புத்தகத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்ததையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது நடந்த விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் நான் ரஜினியிடம் கொடுத்த புக்தகத்தை புரட்டிப் பார்த்த ரஜினி, “புத்தகத்தை பிரிண்ட் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு..” என்று கேட்க “14 லட்சம் செலவாச்சு ஸார்…” என்றேன். “ஏன்.. இப்படி நீங்களே ரிஸ்க் எடுக்குறீங்க…” என்றார் ரஜினி. “எந்த பப்ளிஷரும் வரலை […]

The post சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய அக்கறை- தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>

‘Pride of Tamil Cinema’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த புத்தகத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்ததையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது நடந்த விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்

நான் ரஜினியிடம் கொடுத்த புக்தகத்தை புரட்டிப் பார்த்த ரஜினி, “புத்தகத்தை பிரிண்ட் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு..” என்று கேட்க “14 லட்சம் செலவாச்சு ஸார்…” என்றேன்.

“ஏன்.. இப்படி நீங்களே ரிஸ்க் எடுக்குறீங்க…” என்றார் ரஜினி. “எந்த பப்ளிஷரும் வரலை ஸார். அதுனால் என் வொய்ப்கிட்ட பணம் வாங்கி செலவழிச்சேன்” என்றேன். உடனேயே ரஜினி.. “இல்ல.. இல்ல.. இதையெல்லாம் போட்டா திரும்பி வருமா.. எப்படி வரும்ன்னு பிளான் பண்ணித்தான் செய்யணும்.. இப்படியெல்லாம் இனிமேல் செய்யாதீங்க. வரவே வாரதுன்னு தெரிஞ்சும் ஏன் செய்யணும்..?” என்று கேட்டார்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் அவர் என் மீதான அக்கறையில்தான் இதைச் சொல்கிறார் என்பதை உணர்ந்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி சில வருடப் பழக்கத்தில் இருப்பவரிடமே ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி அட்வைஸ் செய்றாராருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்..?என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

The post சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய அக்கறை- தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
“டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ் https://touringtalkies.co/actor-anandhrajs-working-experience-with-rajini-in-rajathiraja-movie/ Mon, 16 Nov 2020 07:30:39 +0000 https://touringtalkies.co/?p=10073 ‘ராஜாதிராஜா’ படத்தில் நடித்தபோது ரஜினியை ‘டேய்’ என்று அழைக்க வேண்டி வந்தபோது தான் தயங்கி நின்றதாகவும், ரஜினியே ‘பரவாயில்லை பேசுங்க.. இது சினிமாதானே…’ என்று சொல்லி தன்னை ஊக்குவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது நடிகர் ஆனந்த்ராஜ் இதைச் சொல்லியிருக்கிறார். ஆனந்த்ராஜ் இது பற்றிப் பேசும்போது, “எனக்கு சின்ன வயசுல இருந்தே ரஜினி ஸாரை ரொம்பவும் புடிக்கும். நான் சின்ன வயசுல ‘காயத்ரி’ படம் பார்த்தேன். அதுல […]

The post “டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ் appeared first on Touring Talkies.

]]>
‘ராஜாதிராஜா’ படத்தில் நடித்தபோது ரஜினியை ‘டேய்’ என்று அழைக்க வேண்டி வந்தபோது தான் தயங்கி நின்றதாகவும், ரஜினியே ‘பரவாயில்லை பேசுங்க.. இது சினிமாதானே…’ என்று சொல்லி தன்னை ஊக்குவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது நடிகர் ஆனந்த்ராஜ் இதைச் சொல்லியிருக்கிறார்.

ஆனந்த்ராஜ் இது பற்றிப் பேசும்போது, “எனக்கு சின்ன வயசுல இருந்தே ரஜினி ஸாரை ரொம்பவும் புடிக்கும். நான் சின்ன வயசுல ‘காயத்ரி’ படம் பார்த்தேன். அதுல ஒரு கொடூரமான கணவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அதுக்கப்புறம் ரஜினி ஸாரோட கேரியர் எங்கயோ போய் அன்னிக்கு சூப்பர் ஸ்டாராகவே ஆயிட்டார்.

அப்பத்தான் யோசிச்சேன். இப்படியொரு கெட்டவனா நடிச்சவரே பெரிய ஸ்டார் ஆயிட்டார்ன்னா நாமளும் எந்தக் கேரக்டர்ல நடிச்சாலும் தப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

நானும் ரஜினி ஸார் கூட நடிச்ச முதல் படம் ‘ராஜாதிராஜா’தான். அந்தப் படத்தோட இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனை எனக்கு முன்னாடியே தெரியும். என்னுடைய நல்ல நண்பர் அவர். இந்தப் படத்துக்கு கேரக்டர் பேசும்போது “ஆனந்த்ராஜ் இதைப் பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டார்.

அந்தப் படத்துல எனக்கு வைத்த முதல் ஷாட்டே நான் ரஜினி ஸாரை ‘டேய் சின்ராசு’ன்னு கூப்பிடுறதுதான். அதைக் கேட்டுட்டு ரஜினி அங்கேயிருந்து ஓடி வந்து.. “அண்ணே.. சொல்லுங்கண்ணே”ன்னு சொல்லணும். இதுதான் ஷாட்.

சுந்தர்ராஜன் ஸார் இதைச் சொன்னதும் எனக்கு திக்குன்னு ஆயிருச்சு. “ஸார்.. அவர் பெரிய ஸ்டார். சூப்பர் ஸ்டார் வேற. என்னோட முதல் ஷாட்டையே இப்படி வைச்சால் எப்படி ஸார்..? அவரோட ரசிகர்கள் கல்லால அடிப்பாங்க ஸார்..” என்றேன். சுந்தர்ராஜனோ.. “இதுதான் சீன்.. அதுதான் டயலாக்.. ச்சும்மா பேசுங்க” என்றார்.

நான் தயக்கத்துடன் நிற்பதையும், இயக்குநருடன் பேசுவதையும் கவனித்த ரஜினி பக்கத்தில் வந்து “ச்சும்மா கூப்பிடுங்க.. ஒண்ணும் தப்பில்லை. சினிமாவுக்காகத்தானே.. ஜாலியா கூப்பிடுங்க..” என்று சொன்னார். அந்த டயலாக் பேசி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்துவிட்டது.. இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவம்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

The post “டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ் appeared first on Touring Talkies.

]]>
மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது சிம்புவா..? https://touringtalkies.co/simbu-will-act-in-manoj-bharathiraja-movie/ Sun, 08 Nov 2020 11:56:25 +0000 https://touringtalkies.co/?p=9839 ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா இப்போது ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கிறார். மனோஜ் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக அளித்த பேட்டியில் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருப்பதாகவும், அதையே தன்னுடைய முதல் படமாக இயக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார். “ஒருவேளை அந்தப் படம்தான் இதுவா..?” என்று விசாரித்தபோது அதனை முற்றிலும் மறுத்தார் மனோஜ் பாரதிராஜா. […]

The post மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது சிம்புவா..? appeared first on Touring Talkies.

]]>
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா இப்போது ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார்.

இந்தப் படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கிறார்.

மனோஜ் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக அளித்த பேட்டியில் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருப்பதாகவும், அதையே தன்னுடைய முதல் படமாக இயக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார்.

“ஒருவேளை அந்தப் படம்தான் இதுவா..?” என்று விசாரித்தபோது அதனை முற்றிலும் மறுத்தார் மனோஜ் பாரதிராஜா.

“லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்காக நான் செய்யப் போவது வேறொரு கதை. முழுதாக ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டேன். எல்லாம் தயாராக இருக்கிறது. இதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் இப்போது அடுத்து வரும் நாட்களில் ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிக்கவிருக்கிறேன். அந்த நேரத்தில் அவரிடத்தில் இந்தக் கதையைச் சொல்லி ஓகே வாங்கலாம் என்று நினைத்துள்ளேன்.. நிச்சயமாக சிம்பு என் படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்..” என்றார் மனோஜ் பாரதிராஜா.

நல்லதே நடக்கட்டும். வாழ்த்துகள்..!

The post மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது சிம்புவா..? appeared first on Touring Talkies.

]]>
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! https://touringtalkies.co/udhayanidhi-stalin-maghia-thirumeni-combo-movie-will-starts-on-november-4/ Thu, 29 Oct 2020 10:16:31 +0000 https://touringtalkies.co/?p=9419 பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, […]

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது.

இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் 5-வது திரைப்படம் இது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 4-ம் தேதி துவங்குகிறது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் சம்பந்தமான பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
விஷால்-ஆர்யா படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் ரெடி..! https://touringtalkies.co/shooting-schedule-news-of-vishal-arya-movie/ Mon, 19 Oct 2020 19:09:53 +0000 https://touringtalkies.co/?p=9028 ‘அண்ணாத்த’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட செட்டுகளில் படப்பிடிப்புகள் நடக்காமல் காத்து வாங்கிக் கொண்டிருக்க, நடிகர் விஷால் மட்டும் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும்.  இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவிருக்கிறார். ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ […]

The post விஷால்-ஆர்யா படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் ரெடி..! appeared first on Touring Talkies.

]]>

அண்ணாத்த’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட செட்டுகளில் படப்பிடிப்புகள் நடக்காமல் காத்து வாங்கிக் கொண்டிருக்க, நடிகர் விஷால் மட்டும் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும். 

இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவிருக்கிறார்.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.

தற்போது ஹைதராபாத் ஷூட்டிங்கில் 2 நாட்கள் மட்டுமே ஆர்யா நடித்திருக்கிறார். மீண்டும் சென்னையில் 16 நாட்களும், ஊட்டியில் 12 நாட்களும், 32 நாட்கள் மலேசியாவிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.

மலேசியாவில் நடைபெறும் 32 நாட்கள் படப்பிடிப்பு முழுவதிலும் ஆர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த லாக்டவுன் பீரியடில் மலேசியாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அனுமதியில்லை என்று மலேசிய அரசு சொல்லியிருக்கிறது. இப்போதைக்கு இந்தப் படத்தின் சென்னை, ஊட்டி ஷெட்யூல்கள் முடியவே அடுத்தாண்டு ஜனவரி ஆகிவிடும் என்பதால் அதற்குப் பிறகு மலேசியாவுக்கு செல்வதில் பிரச்சினையிருக்காது என்று தயாரிப்பாளர் தரப்பு எண்ணுகிறது.

The post விஷால்-ஆர்யா படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் ரெடி..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. https://touringtalkies.co/actor-karthick-raginis-love-marriage-story/ Wed, 07 Oct 2020 08:50:51 +0000 https://touringtalkies.co/?p=8421 1980-களின் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் திருமணம் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அவருடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் இணைத்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு கார்த்திக்கின் செயல்பாடுகள் இருந்ததால்… ஒரேயொரு படத்தில் நடித்தவுடனேயே அந்த நாயகியுடன் கார்த்திக்கின் கல்யாணம் முடிந்தது என்பதை அப்போதைய திரையுலகத்தினரால் நம்ப முடியவில்லை. கார்த்திக்கும் அவருடைய காதல் மனைவியான ராகினியும் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இது குறித்து விளக்கமாக பேட்டியளித்துள்ளார். […]

The post “நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. appeared first on Touring Talkies.

]]>

1980-களின் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் திருமணம் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் அவருடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் இணைத்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு கார்த்திக்கின் செயல்பாடுகள் இருந்ததால்… ஒரேயொரு படத்தில் நடித்தவுடனேயே அந்த நாயகியுடன் கார்த்திக்கின் கல்யாணம் முடிந்தது என்பதை அப்போதைய திரையுலகத்தினரால் நம்ப முடியவில்லை.

கார்த்திக்கும் அவருடைய காதல் மனைவியான ராகினியும் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இது குறித்து விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலு’க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விரிவாக அவர் பேசியுள்ளார்.

அது இங்கே :

“நான் தயாரித்த ‘சோலைக்குயில்’ படத்தின் நாயகியாக ராகினியை இயக்குநர் ராஜன்தான் புக் செய்தார். ராகினியின் அண்ணன், இயக்குநர் ராஜனின் நெருங்கிய நண்பர். அந்த வகையில் ஏற்கெனவே அவருக்கு ராகினியைத் தெரியும் என்பதால் அவரை பரிந்துரை செய்தார். நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.

சோலைக்குயில்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக 10 நாட்கள் சென்னையில் தி.நகரில் உள்ள முத்துராமன் திருமண மண்டபத்தில் நடனப் பயிற்சி ராகினிக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக ராகினி சென்னை வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரம் மாஸ்டர்தான் ராகினிக்கு நடனப் பயிற்சியளித்தார்.

ரிகர்சல் துவங்கிய முதல் நாளே தம்பி கார்த்திக் கல்யாண மண்டபத்திற்கு வந்தார். என்னிடம் “சித்தப்பா ஒரு பத்து நிமிஷம்தான் இருப்பேன். பார்த்துட்டு போயிருவேன்…” என்று சொன்னார்.

இந்தக் கல்யாண மண்டபத்துலதான் ராகினியை கார்த்திக் முதன்முதலா சந்திச்சார். பார்த்தவுடனேயே இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு போலிருக்கு. பத்து நிமிஷத்துல போயிருவேன்னு சொன்ன கார்த்திக் ஒரு மணி நேரமாகியும் போகலை. சுந்தரம் மாஸ்டர் வந்து “ரிகர்சலை கண்டினியூ பண்ணப் போறேன்”னார். “கார்த்திக் போயிருவாப்புலயே.. பார்த்துக்குங்க…” என்று நான் சொன்னேன். அதுக்கு சுந்தரம், “ரிகச்ரலை தொடரச் சொன்னதே கார்த்திக்குதான்…” என்றார். அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு.. பய விழுந்துட்டான்னு.

கார்த்திக்கின் ராசி அவருக்கு காதலிகள் வரிசையாக வந்தார்கள். அவருடைய சிரிப்பு ஒன்றே போதும்.. பல நடிகைகள் அவரைக் காதலித்தார்கள். அந்தக் காதலெல்லாம் அந்த ஒரு படத்தோட முடிஞ்சிரும். அடுத்து வேற படத்துல நடிக்கப் போவார். அங்க வேற நடிகை இருப்பார். அப்புறம் அது வேற காதலாகும்.. இது இப்படியே தொடரும். இது எனக்கும் தெரியும். ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் போய் முடியும்ன்னு எனக்கே தெரியாது.

‘சோலைக்குயில்’ படம் முழுவதும் கோத்தகிரிலதான் ஷூட் செஞ்சோம். அங்க ‘ரமேஷ் லாட்ஜ்’ன்னு ஒரேயொரு லாட்ஜ்தான் இருந்தது. அங்கதான் எல்லாரும் தங்கியிருந்தோம். ஆனாலும், இடம் பத்தலை. இதுல எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் வேறொரு கெஸ்ட் ஹவுஸுக்கு போயிட்டாங்க.

கார்த்திக்கும் ‘எனக்கு இது செட்டாகுதுப்பா’ என்றான். அதுனால அவனுக்காக தொண்டமான் கெஸ்ட் ஹவுஸ்ல பேசி ஒரு ரூம் புக் பண்ணிக் கொடு்த்தேன். அங்க போன பின்னாடி கார்த்திக் என்கிட்ட.. ‘அந்தப் பொண்ணு மட்டும் தனியா அங்க இருக்குமே.. எதுக்கு அதை தனியா விட்டுட்டு.. அதையும் இங்கயே கொண்டு வந்துவிட்ருங்க..’ என்றான். சரி.. என்று ராகினிக்கும் அங்கயே ரூம் புக் பண்ணி கொண்டு வந்துவிட்டுட்டேன். இப்படி ஒரு தயாரிப்பாளரா இருந்துட்டு செய்யக் கூடாத வேலையையெல்லாம் செஞ்சிருக்கேன்..

கோத்தகிரில திடீர்ன்னு மழை போட்டுத் தள்ளிருச்சு.. ஷூட்டிங் நின்னு போச்சு.. அங்க பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. ‘அந்தக் கோவில்ல பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டீங்கன்னா மழை நிச்சயம் நிக்கும்’ன்னு அங்க இருந்தவங்க சொன்னாங்க.

சரி.. இதையும் செஞ்சிருவோமேன்னுட்டு.. பொங்கல் வைக்க எல்லா வேலையையும் செஞ்சோம். அப்போ அந்த அம்மனுக்காக பூவெல்லாம் கட்டி கொண்டு வந்தோம். அந்தப் பூவையெல்லாம் ராகினியும் கேட்டுவிட்டுச்சு. கொடுத்துவிட்டோம்.

அதோட அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சில ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குற மாதிரி சீன்ஸ் இருக்கு. இதுக்காக பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, சேலையெல்லாம் ஏற்கெனவே வாங்கி வைச்சிருந்தோம். அதை எனக்குத் தெரியாமல் கார்த்திக் எப்படியோ வாங்கியிருக்கான்.

அன்னிக்கு அந்த பொங்கல் வைக்குற சமயத்துல கார்த்திக்கும், ராகினியும் பட்டு வேட்டி, பட்டு சட்டை, கல்யாண சேலையெல்லாம் கட்டிக்கிட்டு வந்தாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இன்னிக்கு ஷூட்டிங் இல்லையே.. இது கிளைமாக்ஸ்ல போட வேண்டிய காஸ்ட்யூம்ஸ் ஆச்சேன்னு யோசிச்சேன்.

வந்தவங்க கைல கொண்டு வந்த மல்லிகைப் பூ மாலையை அப்படியே அம்மன் காலடில வைக்கச் சொன்னாங்க.. நம்ம காந்திமதி அம்மாதான் அதை வாங்கி அம்மன் காலடில வைச்சாங்க.. வைச்சிட்டு கார்த்திக்கைப் பார்த்து ‘மருமவனோ போற போக்கு சரியாயில்லை.. அந்தத் திருச்சி வெக்காலியம்மன்தான் உன்னைக் காப்பாத்தணும்’னு சொன்னாங்க.

அப்புறம் படையலெல்லாம் வைச்ச பின்னாடி அந்தப் பூவை எடுத்துப் பிய்ச்சு எல்லாருக்கும் கொடுக்கலாம்ன்னு காந்திமதியக்கா நினைச்சாங்க. அப்போ அந்தப் பொண்ணு ராகினி ‘அந்தப் பூவையெல்லாம் கொடுங்க.. எங்க கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு சாமி சிலையிருக்கு. அதுக்குப் போட்டுவிடுறேன்’னு சொல்லுச்சு. சரின்னு அந்த மாலையைக் கொடுத்துட்டோம். அப்புறம் நாங்க எல்லோரும் லாட்ஜூக்கு திரும்பிட்டோம்.. இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

இதுக்கப்புறமா எங்களுக்கே தெரியாமல் அவங்க ரெண்டு பேருக்கும் அதே இடத்துல கல்யாணம் நடந்திருக்கு.. அந்தப் பூவுக்குள்ள தாலியை ஒளிச்சு வைச்சிருந்திருக்கான் கார்த்திக். இதெல்லாம் பின்னாடிதான் எனக்குத் தெரியும்.

மழையெல்லாம் நின்ன பின்னாடி.. பாட்டு சீன் சூட்டிங் நடந்துச்சு.. கலா மாஸ்டர்தான் டான்ஸ் சொல்லிக் கொடுக்க வந்திருந்தார். அப்போ ராகினி தாலியைக் கழட்டி தன்னோட இடுப்புல மறைவா கட்டியிருந்தாங்க. ஆனால், இதை கலா பார்த்துட்டாங்க. ‘இதென்ன..?’ என்று கேட்டதற்கு ‘ச்சும்மா.. மந்திரிச்ச கயிறு’ என்று சொல்லி ராகினி சமாளிச்சிட்டாங்க.

ஒரு வழியா அங்க ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்குத் திரும்பலாம்ன்னு பிளான் பண்ணினோம். அப்போ படத்தோட புரொடெக்சன் மேனேஜர் என்னோட மச்சினன்தான். அவன்கிட்ட தனக்கும், ராகினிக்கும் டிரெயின்ல பர்ஸ்ட் கிளாஸ்ல சீட் புக் பண்ணச் சொல்லியிருக்கான் கார்த்திக். இது எனக்குத் தெரியாது.

ராகினி அதே ஊர்க்கார பெண்தானே. இங்க இருந்திட்டுதான் பின்னாடி சென்னைக்கு வரும்ன்னு நினைச்சேன். ஏன்னா சென்னைல இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கியிருந்துச்சு. ஆனால் அந்தப் பொண்ணு என்கிட்ட ‘உங்க காரை கொடுங்க ஸார். என்னை கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கிவிட்ர சொல்லுங்க’ன்னு சொல்லுச்சு.. நானும் ‘சரி’ன்னு சொல்லி என் காரை அவங்ககிட்ட கொடுத்திட்டேன்.

நானும், என் மேனேஜரும் கோத்தகிரில இருந்து பஸ்ல வர்றோம். மழை கொட்டுது. அந்தப் பஸ்ஸும் ஒழுகுது. பஸ்ஸுக்குள்ளேயே நிறைய பேர் குடையை பிடிச்சிருக்காங்க. அப்படியிருக்கு நிலைமை.

அப்போ எங்க பஸ்ஸை ஒட்டியே என்னோட காரும் வருது. காரை கார்த்திக் ஓட்டிக்கிட்டு வர்றான்.. ராகினி பக்கத்துல உக்காந்திருக்கு. இதைப் பார்த்தவுடனேயே எனக்குப் புரிஞ்சு போச்சு.. சரி.. பய என்னமோ பண்ணிட்டான்ன்னு நினைச்சேன்.

நான் கோத்தகிரில வந்து சென்னைக்கு வர்றதுக்குள்ள அவன் சென்னைக்கு வந்து ராகினியை கொண்டு வந்து என் வீட்ல விட்டுட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டான். நான் வீட்டுக்கு வந்து பார்த்தால் ராகினி என் வீட்டில் உக்காந்திருக்கு. எனக்கும் அதிர்ச்சியாயிருந்துச்சு. சரி.. இன்னும் 4 நாள் ஷூட்டிங் இருக்கே.. அதுல நடிச்சிட்டுப் போகட்டும்ன்னு விட்டுட்டேன்.

ஆனால் என் வீட்டுக்காரம்மா ‘என்ன விஷயம்’ன்னு கேட்டப்போ ராகினி தனக்கும், கார்த்திக்கும் கல்யாணம் ஆனா விஷயத்தையெல்லாம் சொல்லிருச்சு. அப்புறம்தான் எங்களுக்கே அவங்களுக்கு கல்யாணம் நடந்த விஷயம் தெரியும். சரி.. என்ன செய்றது.. இவன் மத்த ஹீரோக்கள் மாதிரியில்லையே.. அண்ணன் மவனா வேற போயிட்டான். அதனால விட்ருவோம்ன்னு ஏத்துக்கிட்டேன்.

அப்படியே என் வீட்ல அந்தப் பொண்ணுகூட 30 நாள் இருந்துட்டான் கார்த்திக். அங்க போட்ட வித்துல பிறந்தவன்தான் இன்னிக்கு நடிகனா இருக்குற கவுதம் கார்த்திக்..” என்று நீட்டமாக ஒரு வரலாறையே சொல்லி முடித்தார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

The post “நடிகர் கார்த்திக்கின் காதல் திருமணம் எப்படி நடந்தது..?” – தயாரிப்பாளரின் வாக்குமூலம்.. appeared first on Touring Talkies.

]]>