Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஜென்டில்மேன்-2 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 23 Mar 2022 07:52:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஜென்டில்மேன்-2 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் நாயகி நயன்தாரா சக்கரவர்த்தி..! https://touringtalkies.co/nayanthara-chakravarthy-will-act-as-heroine-of-gentleman-2-movie/ Wed, 23 Mar 2022 07:51:19 +0000 https://touringtalkies.co/?p=21382 மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் தயாரிப்பில் உருவாகும் ‘ஜென்டில்மேன்-2‘ படத்தின் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் நடிக்கவிருக்கிறார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், தற்போது ‘ஜென்டில்மேன்-2‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்திருந்தார் குஞ்சுமோன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும் செய்திகள் பரவின. தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹீரோயினின் பெயரை […]

The post ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் நாயகி நயன்தாரா சக்கரவர்த்தி..! appeared first on Touring Talkies.

]]>
மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் தயாரிப்பில் உருவாகும் ‘ஜென்டில்மேன்-2‘ படத்தின் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் நடிக்கவிருக்கிறார்.

ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், தற்போது ‘ஜென்டில்மேன்-2‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்திருந்தார் குஞ்சுமோன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.

தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹீரோயினின் பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன்.

சூப்பர் ஸ்டார்களான ரஜனி, மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் 30-க்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்திதான் அந்த அறிமுக கதாநாயகி.

“இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளார். அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்…” என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அந்த ஹீரோயின் யார் அறிந்து கொள்ள என்று ஆவலோடு காத்திருக்கிறது திரை உலகம்.

மேலும் படத்தின் இயக்குநர், ஹீரோ, மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவருமாம்.

The post ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் நாயகி நயன்தாரா சக்கரவர்த்தி..! appeared first on Touring Talkies.

]]>
‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார் https://touringtalkies.co/m-m-keeravaani-to-be-music-director-in-gentleman-2-movie/ Sun, 23 Jan 2022 16:12:03 +0000 https://touringtalkies.co/?p=20380 தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரம்மாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன்‘ K.T.குஞ்சுமோன்.  சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர்வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரம்மாண்டமான படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் மெகா பட்ஜெட் இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை கே.டி.குஞ்சுமோன் அடுத்துத் தயாரிக்கவுள்ளார். இந்த ‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு  இசை […]

The post ‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரம்மாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன்‘ K.T.குஞ்சுமோன். 

சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர்வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரம்மாண்டமான படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

இவர் தயாரிப்பில் மெகா பட்ஜெட் இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை கே.டி.குஞ்சுமோன் அடுத்துத் தயாரிக்கவுள்ளார்.

இந்த ‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு  இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி நேற்றைக்கு சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

உலகமே கொண்டாடிய  ‘பாகுபலி’ போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் M.M.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இப்பொழுது, இந்தியாவே பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் S.S.ராஜ்மௌலியின் RRR’ படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலை பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கபடும். இதையடுத்து, இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் விரைவில் வெளியாகுமாம்.

The post ‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார் appeared first on Touring Talkies.

]]>