Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சென்சார் போர்டு – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Dec 2022 10:09:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சென்சார் போர்டு – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! https://touringtalkies.co/kamal-haasan-released-devar-magan-movie-climax-secret/ Wed, 14 Dec 2022 10:08:36 +0000 https://touringtalkies.co/?p=28578 கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..! இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.  “தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக […]

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..!

இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். 

தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.

அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் https://touringtalkies.co/some-scenes-and-shots-are-cut-in-vikram-movie/ Mon, 30 May 2022 07:51:49 +0000 https://touringtalkies.co/?p=22342 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் பல இடங்களில் காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளதாம் சென்சார் போர்டு. ‘GST’ என்று குறிப்பிடும் வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ரீல் 2 – 44.35-ல் ஷாட் […]

The post ‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’.

இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் பல இடங்களில் காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளதாம் சென்சார் போர்டு. ‘GST’ என்று குறிப்பிடும் வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

ரீல் 2 – 44.35-ல் ஷாட் எண் 162-ல் இடம் பெற்றிருந்த ‘GST’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் கமல்ஹாசன் தன் நடு விரலை காட்டும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஒருவரைத் தாக்கும் காட்சியின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

லூசு’, ‘சைக்கோ’ உள்ளிட்ட இன்னும் பல தகாத வார்தைகள் படத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அவை அனைத்தும் சத்தமில்லாமல் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.

கழுத்தை வெட்டும் காட்சி, கோரமாக அதிலிருந்து ரத்தம் வழியும் காட்சி, கால்கள் துண்டாகும் காட்சி, தலை துண்டிக்கப்படும் காட்சி, வாயில் கத்தி இறங்குவது போன்ற வன்முறைகள் நிறைந்த சில காட்சிகளின் பல ஷாட்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் பாலியல் ரீதியான சில காட்சிகளிலும் கத்திரி போடப்பட்டுள்ளதாம். ஒரு பெண்ணின் பாலியல் பழக்க வழக்கத்தை விவரிக்கும் வசனம், அது தொடர்பான விசுவல்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆபாசமான முக்கல், முனகல் காட்சிகளின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளதாம்.

The post ‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் appeared first on Touring Talkies.

]]>
“எனது படத்திற்குத் தடை என்றவுடன் தயாரிப்பாளர்கள் சிலரே சந்தோஷப்பட்டார்கள்…” – ‘புளூ சட்டை’ மாறனி்ன் வருத்தம். https://touringtalkies.co/some-of-the-producers-were-happy-when-my-film-was-banned-blue-sattai-marans-regret/ Tue, 28 Sep 2021 09:48:50 +0000 https://touringtalkies.co/?p=18332 சினிமா விமர்சகரான ‘புளூ சட்டை’ மாறன் என்ற இளமாறன் தற்போது தமிழில் மிக அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் யூடியூப் தளத்தை நடத்தி வருகிறார். இவருடைய சினிமா விமர்சனத்தை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அதிகம் பேர் பார்த்தும், கேட்டும் வருகிறார்கள். இவருடைய சினிமா விமர்சனத்தால் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாறன் தற்போது ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ‘ஆன்டி இந்தியன்’ என்ற அந்தப் புதிய படத்தை மூன் […]

The post “எனது படத்திற்குத் தடை என்றவுடன் தயாரிப்பாளர்கள் சிலரே சந்தோஷப்பட்டார்கள்…” – ‘புளூ சட்டை’ மாறனி்ன் வருத்தம். appeared first on Touring Talkies.

]]>
சினிமா விமர்சகரான ‘புளூ சட்டை’ மாறன் என்ற இளமாறன் தற்போது தமிழில் மிக அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் யூடியூப் தளத்தை நடத்தி வருகிறார். இவருடைய சினிமா விமர்சனத்தை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அதிகம் பேர் பார்த்தும், கேட்டும் வருகிறார்கள்.

இவருடைய சினிமா விமர்சனத்தால் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாறன் தற்போது ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.

‘ஆன்டி இந்தியன்’ என்ற அந்தப் புதிய படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ளார்.

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய இந்தப் படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

அதே சமயம் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்குவதற்குகூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எதனால் இந்த போராட்டம்..? இதற்கு பின்னால் யாரவது அழுத்தம் கொடுத்தார்களா..? என்பது குறித்து இயக்குநர் புளூ சட்டை’ மாறனும், தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ‘புளூ சட்டை’ மாறன் பேசும்போது, “முதலில் சென்னையில் உள்ள தணிக்கைக் குழுவினருக்கு எங்களுடைய படத்தைத் திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு பாராட்ட போகிறார்கள் என நினைத்தால், எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்தோம். அதில் முக்கிய உறுப்பினராக உள்ள நடிகை கவுதமி சென்னையில் இந்தப் படத்தை பார்ப்பார் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில், அவருக்கு பதிலாக பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் ரீவைஸிங் கமிட்டியினர் எங்கள் படத்தை பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும் என்றும் அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே சான்றிதழ் தருகிறோம் என்றும் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்ட 38 இடங்களில் உள்ள வசனங்கள், காட்சிகளை வெட்டினால் கிட்டத்தட்ட 200 கட்டுகள் விழும். அப்படியே அந்தப் படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்தால் படம் நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் தயாரிப்பாளரும் நானும் அதை விரும்பவில்லை.

அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம். ஆனால் எங்களது துரதிர்ஷ்டமோ என்னமோ, எங்கள் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில்தான் அத்தனை வருடங்களாக இயங்கி வந்த அந்த அமைப்பையே கலைத்து விட்டார்கள்.

இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.

மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே இடங்களில் சிறிய கரெக்சன்களை மட்டுமே செய்ய வேண்டும் என சொல்லி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

நாடே கெட்டாலும் பரவாயில்லை.. நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில்தான் எங்களது படத்திற்கு ஆன்டி இந்தியன்’ என்கிற தலைப்பை வைத்துள்ளோம். ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், ‘கேணப் பையன் ஊருல கிறுக்குப் பையன் நாட்டாமை’ என டைட்டில் வைக்கலாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம்.

இந்தப் படம் எடுப்பதற்காக எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. ஆனால் எனது படம் வெளிவரக்கூடாது என்று திரையுலகில் இருந்தே பலரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது என்கிற செய்தியைக் கேட்டு சில தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்…” என்று கூறினார்.

The post “எனது படத்திற்குத் தடை என்றவுடன் தயாரிப்பாளர்கள் சிலரே சந்தோஷப்பட்டார்கள்…” – ‘புளூ சட்டை’ மாறனி்ன் வருத்தம். appeared first on Touring Talkies.

]]>
‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! https://touringtalkies.co/105-cuts-in-sensor-for-2000movie/ Sun, 01 Aug 2021 07:57:47 +0000 https://touringtalkies.co/?p=16656 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் […]

The post ‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! appeared first on Touring Talkies.

]]>
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்.

இதனால் இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.

இதன் பின்பு வெட்டுகள் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டதால், நீக்கப்பட வேண்டியவை 24 காட்சிகளாகக் குறைக்கப்பட்டன.

இதையடுத்து இத்திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

The post ‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! appeared first on Touring Talkies.

]]>
‘தலைவி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது https://touringtalkies.co/the-film-talaivi-has-got-u-certification-in-the-sensor/ Tue, 22 Jun 2021 13:19:28 +0000 https://touringtalkies.co/?p=15689 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள ‘தலைவி’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விப்ரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி […]

The post ‘தலைவி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள ‘தலைவி’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விப்ரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சென்சாரில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விரைவில் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளும் சென்சாருக்கு அனுப்பப்படும் என்று படக் குழு தெரிவித்துள்ளது.

The post ‘தலைவி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.

]]>