Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சிவராஜ்குமார் – Touring Talkies https://touringtalkies.co Thu, 19 Nov 2020 17:33:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சிவராஜ்குமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் https://touringtalkies.co/director-vijay-milton-directs-a-kannada-movie-with-sivarajkumar/ Fri, 20 Nov 2020 05:00:00 +0000 https://touringtalkies.co/?p=10205 ‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் […]

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>
‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார்.

இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் மில்டன்.

இப்படத்தில் சிவராஜ் குமாருக்கு  ஜோடியாக  அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய் மில்டன். படத்துக்கு ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நேற்று நடந்தது. வரும் நவம்பர் 23-ம் தேதி முதல்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள இசைக் கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>