Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சிபிராஜ் – Touring Talkies https://touringtalkies.co Mon, 05 Sep 2022 16:51:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சிபிராஜ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! https://touringtalkies.co/sibi-sathyaraj-acting-in-3-charaters-in-a-new-movie/ Mon, 05 Sep 2022 16:51:28 +0000 https://touringtalkies.co/?p=24333 Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில் இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் சிபி சத்யராஜூடன் திலீபன் (‘வத்திக்குச்சி’ புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (‘வலிமை’), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். கார்த்திக் வெங்கட்ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS […]

The post 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில் இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் சிபி சத்யராஜூடன் திலீபன் (வத்திக்குச்சி’ புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (‘வலிமை’), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

கார்த்திக் வெங்கட்ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS (இசை), அருண் சங்கர் துரை (கலை இயக்கம்), சக்தி சரவணன் (சண்டை பயிற்சி இயக்கம்), லாரன்ஸ் கிஷோர் (படத் தொகுப்பு), ராஜ் (புகைப்படங்கள்), பாரதிராஜா (எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்), ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிகின்றனர்.

இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இதற்கு முன் இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் 3 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக  எந்தப் பெண் முக்கிய கதாப்பாத்திரமும் இருக்காது. ஆனால். இப்படம் 25  முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.

சென்னையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரேகட்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் 5 இன்று காலை  படக் குழுவினர் கலந்து கொள்ள,  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

The post 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! https://touringtalkies.co/a-r-rahman-release-kabadathaari-movie-teaser/ Thu, 12 Nov 2020 07:36:17 +0000 https://touringtalkies.co/?p=9984 கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G.தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் […]

The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’.

G.தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார்.

திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G.தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

டிசம்பர் மாதம் ‘கபடதாரி’ திரைக்கு வரவிருக்கிறது.

The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>