Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சிங்கிள் ஷாட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 21 Aug 2021 07:16:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சிங்கிள் ஷாட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஹன்ஷிகா நடிக்கும் One not Five Minutes சிங்கிள் ஷாட் திரைப்படம்..! https://touringtalkies.co/hansika-acting-one-not-five-minutes-single-shot-movie/ Sat, 21 Aug 2021 07:13:20 +0000 https://touringtalkies.co/?p=17211 நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் நடிப்பில் உருவாகியிருக்கிறது One not Five Minutes என்ற திரைப்படம். இந்தப் படத்தினை Bommak Shiva  மற்றும் Rudransh Celluloid  இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். சாம் C.S. இசையமைக்க, Kishore Boyipadu ஒளிப்பதிவு செய்துள்ளார். Raja Dussa இப்படத்தினை இயக்கியுள்ளார். இந்திய திரை வரலாற்றில், மூன்றாவது முறையாக,  ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், […]

The post ஹன்ஷிகா நடிக்கும் One not Five Minutes சிங்கிள் ஷாட் திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் நடிப்பில் உருவாகியிருக்கிறது One not Five Minutes என்ற திரைப்படம்.

இந்தப் படத்தினை Bommak Shiva  மற்றும் Rudransh Celluloid  இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சாம் C.S. இசையமைக்க, Kishore Boyipadu ஒளிப்பதிவு செய்துள்ளார். Raja Dussa இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இந்திய திரை வரலாற்றில், மூன்றாவது முறையாக,  ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், அந்த ஒரேயொரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப் படமும் ஒரே ஷாட்டில் வரும்படியான முதல் படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

இத்திரைப்படத்தில் மிகச் சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் மொத்தமாக 5-லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில்  20 நிமிடங்கள்வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு,  வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை சைனீஸ், கொரியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர்.

The post ஹன்ஷிகா நடிக்கும் One not Five Minutes சிங்கிள் ஷாட் திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
சிங்கிள் ஷாட்டில் உருவான ‘யுத்த காண்டம்’ திரைப்படம் https://touringtalkies.co/single-shot-movie-yudhaa-gaandam-preview-news/ Fri, 13 Nov 2020 16:03:07 +0000 https://touringtalkies.co/?p=10016 தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டேதான் இருக்கும். அந்த வரிசையில், இதோ மற்றுமொரு புதுமையுடன் ரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்த வரவிருக்கிறது ‘யுத்த காண்டம்’. இப்படத்தில், ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும், ‘கோலி சோடா-2’ படத்தின் க்ருஷா குரூப் நாயகியாகவும் நடிக்கின்றனர். யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய வில்லனாக சுரேஷ் மேனனும், திருப்புமுனை கதாபாத்திரமாக போஸ் வெங்கட்டும் நடித்துள்ளனர். னந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் […]

The post சிங்கிள் ஷாட்டில் உருவான ‘யுத்த காண்டம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டேதான் இருக்கும்.

அந்த வரிசையில், இதோ மற்றுமொரு புதுமையுடன் ரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்த வரவிருக்கிறது யுத்த காண்டம்’.

இப்படத்தில், ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும், ‘கோலி சோடா-2’ படத்தின் க்ருஷா குரூப் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய வில்லனாக சுரேஷ் மேனனும், திருப்புமுனை கதாபாத்திரமாக போஸ் வெங்கட்டும் நடித்துள்ளனர்.

னந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். படத்துக்கு கன்னி மாடம்’ பட இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைத்திருக்கிறார். ‘கன்னி மாடம்’ படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் இந்தப் படத்திலும் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூஸ் வடிவமைத்துள்ளார். கலை இயக்கம் – ராம்ஜி. பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார். இணை இயக்குநராக சுரேஷ் குமார் பணியாற்றுகிறார்.  இயக்குநர் ஆனந்த்ராஜன், இயக்குநர் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தை பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆனந்த் ராஜன் பேசும்போது, “யதார்த்த சினிமா என்றால் அது பெயரளவில் இல்லாமல் திரையில் வெளிப்பட வேண்டும். அப்போதுதான் ஏன் சிங்கிள் ஷாட்’டில் ஒரு படத்தை இயக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையின் விளைவாக உருவானதுதான் இத்திரைப்படம்.

‘சிங்கிள் ஷாட்’ என்றவுடன் இந்தக் கதையில் சிறப்பாக நடிக்க தியேட்டர் ஆர்டிஸ்ட்களால் மட்டுமே எளிதில் சாத்தியப்படும் எனவும் தோன்றியது. அந்த நோக்கத்துடன் நடிகர்கள் குழுவை தேர்வு செய்தோம்.

‘கன்னி மாடம்’ நடிகர் ஸ்ரீராம் கார்த்தி இதில் அழகாகப் பொருந்துவார் எனத் தேர்வு செய்தோம். அவரைப் போலவே க்ருஷாவும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். யோக் ஜே.பி. சார் ஒரு நடிப்புப் பள்ளியே நடத்துகிறார். அதனால் அவரும் இப்படத்தில் இயல்பாகப் பொருந்தினார். போஸ் வெங்கட் சார் சிறந்த நடிகர். சுரேஷ் மேனன் சாரை அவருடைய தோற்றத்துக்காகவே தேர்வு செய்தோம். வசனங்களை போஸ் வெங்கட் எழுதியுள்ளார்.

மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்சினை என்றால் காவல் நிலையம் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே.

அப்படித்தான், ஒரு விபத்தில் சிக்கும் நாயகனும், நாயகியும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்று நினைத்தோம். இந்தப் படத்தின் கதைதான் சிங்கிள் ஷாட்டில் படமாக்க தூண்டியது. இதற்காக, 50 நாட்கள் நாங்கள் ஒத்திகை செய்தோம். கிட்டத்தட்ட முழுப் படப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்தது.

படத்தில் பாடல், 2 சண்டைக் காட்சிகள் எல்லாம் உள்ளன.  ஒரு முழு நீளப் படத்திற்கான பாடல், சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான வசனங்கள், காட்சிகள் என எல்லா அம்சங்களுமே இதில் இருக்கிறது.

சிங்கிள் ஷாட்’ படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப ரீதியாக கவனம் செலுத்தப்பட்ட படமென்பதால் கதையின் என்டர்டெய்ன்மென்ட்டில் எந்த சமரசமும் இருக்காது. அந்த அளவுக்கு நேர்த்தியாக ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் ‘நான் மகான் அல்ல’ படம் போல் கமர்ஷியல் படமாக இருக்கும். பல இடங்களில் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ள விதம் நிச்சயமாக ஆச்சர்யப்பட வைக்கும்.

படம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் ரசிகர்கள் இதை சிங்கிள் ஷாட் படமென்பதை மறக்கும் அளவுக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது…” என்றார் இயக்குநர்.

The post சிங்கிள் ஷாட்டில் உருவான ‘யுத்த காண்டம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
பார்த்திபனின் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம் தள்ளிப் போகிறது.. https://touringtalkies.co/parthibans-single-shot-movie-postponed-to-janueary-2021/ Thu, 12 Nov 2020 13:03:43 +0000 https://touringtalkies.co/?p=9999 நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தையடுத்து, ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வந்தார். ‘இந்த மாதமே ஷூட்டிங் போகலாம்’ என்ற திட்டத்தில் இருந்தவர் இப்போது அதனை ஒத்தி வைத்திருக்கிறார். காரணம், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் 35 நாட்கள் ஒத்திகை நடைபெறப் போகிறது. இதில் 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் வரும் நடிகர்களுக்குக்கூட அதே 35 நாட்கள் ஒத்திகைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களை […]

The post பார்த்திபனின் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம் தள்ளிப் போகிறது.. appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தையடுத்து, ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வந்தார்.

‘இந்த மாதமே ஷூட்டிங் போகலாம்’ என்ற திட்டத்தில் இருந்தவர் இப்போது அதனை ஒத்தி வைத்திருக்கிறார்.

காரணம், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் 35 நாட்கள் ஒத்திகை நடைபெறப் போகிறது. இதில் 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் வரும் நடிகர்களுக்குக்கூட அதே 35 நாட்கள் ஒத்திகைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைப்பது பார்த்திபனுக்கு சிரமமாக இருக்கிறதாம்.

இதற்கிடையில் மழை வேறு வந்துவிட.. பார்த்திபன் நடிப்பதற்காக ஒத்துக் கொண்ட வெளிப்படங்களும் தங்களது படப்பிடிப்பைத் துவக்கியதால் பார்த்திபன், இந்தப் படங்களுக்கு போக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

எழில் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திலும் பார்த்திபன் நடிக்கிறார். மேலும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக தற்போது ஹைதராபாத்தில் செட் போட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் பார்த்திபன் தொடர்ச்சியாக நடிக்க வேண்டியிருப்பதால்..

இந்த நடிப்பு வேலையையெல்லாம் முடித்துவிட்டு பின்பு இயக்குநர் வேலையைக் கையில் எடுக்கலாம் என்று நினைத்து தற்போதைக்கு படத்தை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் பார்த்திபன் என்பது புதிய தகவல்.

The post பார்த்திபனின் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம் தள்ளிப் போகிறது.. appeared first on Touring Talkies.

]]>
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’ https://touringtalkies.co/single-shot-tamil-movie-drama/ Thu, 22 Oct 2020 09:42:54 +0000 https://touringtalkies.co/?p=9118 ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உலக சினிமாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் உத்தி. இதுபோன்ற பல திரைப்படங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது.. இந்தியாவில்.. அதுவும் தமிழகத்தில்.. தமிழ்ச் சினிமாவில்.. கமர்ஷியல் நோக்கில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் டிராமா. இந்தப் படத்தில் நடிகர்கள் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா, வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா, மாஸ்டர் பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை, இயக்கம் – அஜு கிலுமுலா, […]

The post ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’ appeared first on Touring Talkies.

]]>

ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உலக சினிமாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் உத்தி. இதுபோன்ற பல திரைப்படங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது.. இந்தியாவில்.. அதுவும் தமிழகத்தில்.. தமிழ்ச் சினிமாவில்.. கமர்ஷியல் நோக்கில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் டிராமா.

இந்தப் படத்தில் நடிகர்கள் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா, வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா, மாஸ்டர் பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, இயக்கம் – அஜு கிலுமுலா, ஒளிப்பதிவு – சினோஸ் சம்ஸூதின், இசை – பிஜிபால், ஜெயா கே.ஜோஸ், ஜெசின் ஜார்ஜ், படத் தொகுப்பு – அகில் அலியாஸ், பின்னணி இசை – பிஜிபால், பாடல்கள் – ஏகாதசி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – சேது, ஒலிப்பதிவு – ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஷ்வரன், நடன இயக்கம் – கே.கார்த்திக், ஒப்பனை – பினு அஜய், பாடகர்கள் – சூரஜ் சந்தோஷ், வேல்முருகன், எம்.கே.பாலாஜி.

இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில் நுட்ப ரிகர்சல் செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் அஜூ பேசும்போது, “கிஷோர், சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததினால்தான் இந்தப் படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது.

ஒரே  ஷாட்டில் முழு படத்தையும் படமாக்குவது எளிதல்ல…  அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவினரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அர்ப்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இதுவொரு புது அனுபவத்தைத் தரும்…” என்கிறார்.

The post ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’ appeared first on Touring Talkies.

]]>
1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..! https://touringtalkies.co/parthibans-single-shot-movie-news/ Mon, 19 Oct 2020 19:33:25 +0000 https://touringtalkies.co/?p=9034 ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்தைத் தொடர்ந்து, நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது அடுத்த படத்திலும் வித்தியாசமான முயற்சி ஒன்றைச் செய்யவுள்ளார். ‘ஒத்த செருப்பு’ படம் முழுவதும் ‘மாசிலாமணி’ என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து இந்தப் படத்தைத் தேர்வு செய்து அனுப்பாத காரணத்தால், தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் […]

The post 1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..! appeared first on Touring Talkies.

]]>

‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்தைத் தொடர்ந்து, நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது அடுத்த படத்திலும் வித்தியாசமான முயற்சி ஒன்றைச் செய்யவுள்ளார்.

ஒத்த செருப்பு’ படம் முழுவதும் ‘மாசிலாமணி’ என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.

ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து இந்தப் படத்தைத் தேர்வு செய்து அனுப்பாத காரணத்தால், தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது, ஆஸ்கர் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ படத்தை நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார்.

இதனிடையே தனது அடுத்தப் படத்தையும் வித்தியாசமான ஒரு படமாக உருவாக்கப் போவதாக தற்போது அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

இந்தப் புதிய படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளாராம். ‘இரவின் நிழல்’ என்று தனது புதியப் படத்திற்குப் பெயரிட்டுள்ளார் பார்த்திபன்.  

ஒத்த செருப்பு’ படத்தில் ஒரேயொரு ஆளாக ஷோ காட்டிய பார்த்திபன், இந்தப் புதிய படத்தில் ஒரே ஷாட்டில் 100 கதாபாத்திரங்களை நடிக்க வைக்கப் போகிறாராம்.

இதற்காக இந்த கொரோனா லாக் டவுன் பீரியரை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் புதிய படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ஒத்திகைப் பயிற்சியை அளித்து வருகிறார். தொடர்ச்சியாக 35 நாட்கள் இந்தப் பயிற்சி நடக்கிறதாம்.

வெறுமனே 10 நிமிடம் வரக் கூடிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகருக்கு 20 நாட்கள் தொடர் பயிற்சியளித்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக இருக்கும் இந்தப் படம் மொத்தத்தையும் தனது தோளில் தூக்கிச் சுமக்க இருப்பவர் ஒளிப்பதிவாளர் சந்தானகிருஷ்ணன்.

படத்தின் கதையைப் பற்றி மூச்சுவிட மறுக்கும் இயக்குநர் பார்த்திபன், “இதுவொரு திரில்லர் டைப் கதை…” என்று மட்டுமே சொல்கிறார்..!

The post 1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..! appeared first on Touring Talkies.

]]>