Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கொரோனா லாக் டவுன் – Touring Talkies https://touringtalkies.co Tue, 27 Apr 2021 13:50:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கொரோனா லாக் டவுன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஓடிடி தளங்களில் வரிசையாக வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்..! https://touringtalkies.co/movies-list-of-will-release-on-ott-platforms-at-next-month/ Tue, 27 Apr 2021 12:40:28 +0000 https://touringtalkies.co/?p=14724 கொரோனா இரண்டாவது அலையின் பரவலால் தென்னிந்திய மாநிலங்களில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன. இதனால் இந்த வாரம், அடுத்த மாதம் என்று வெளியாக வேண்டியிருந்த பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு தென்னிந்திய மொழி படங்கள் வரிசையாக அடுத்து வரக் கூடிய மாதங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகவும் உள்ளன. நடிகர் மம்மூட்டி நடித்த ‘ஒன்’ என்ற திரைப்படம் நாளை ‘நெட்பிளிக்ஸில்’ வெளியாகிறது. இதையடுத்து கார்த்தியின் […]

The post ஓடிடி தளங்களில் வரிசையாக வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
கொரோனா இரண்டாவது அலையின் பரவலால் தென்னிந்திய மாநிலங்களில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.

இதனால் இந்த வாரம், அடுத்த மாதம் என்று வெளியாக வேண்டியிருந்த பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பல்வேறு தென்னிந்திய மொழி படங்கள் வரிசையாக அடுத்து வரக் கூடிய மாதங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகவும் உள்ளன.

நடிகர் மம்மூட்டி நடித்த ‘ஒன்’ என்ற திரைப்படம் நாளை ‘நெட்பிளிக்ஸில்’ வெளியாகிறது.

இதையடுத்து கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ‘ஹாட் ஸ்டாரில்’ மே 2-ம் தேதி வெளியாகிறது. தனுஷ் நடித்த ‘கர்ணன்’ மே 7-ம் தேதி அமேஸானில் வெளியாகிறது.

தனுஷ் நடித்த ‘ஜெகமே தந்திரம்’ ஜூன் 18-ம் தேதியன்று ‘நெட் பிளிக்ஸில்’ வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் ஓடிடியில்தான் வெளியாகப் போவதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அடுத்த மாதத் துவக்கத்தில் அந்தப் படம் ‘அமேஸானில்’ வெளியாகலாம் என்று தெரிகிறது.

தெலுங்கில் அனுசுயா பரத்வாஜ் நடித்த தேங்க்யூ பிரதர்’ என்ற தெலுங்கு திரைப்படம் அடுத்த மாதம் ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

‘ஆபரேஷன் ஜாவா’ என்ற மலையாளத் திரைப்படம் மே 9-ம் தேதியன்று ‘ஜீ-5’ தளத்தில் வெளியாகிறது.

வருடா வருடம் ரம்ஜான் தினத்தன்று தனது படத்தை வெளியிட்டுவிடும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இந்தாண்டுதான் தனது படத்தை தியேட்டருக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறார். இந்த முறை ‘ஜீ பிளக்ஸ்’ தளத்தில் சல்மான்கான் நடித்த ‘ராதே மோஸ்ட் வான்ட்டட்’ திரைப்படம் மே 13-ம் தேதியன்று வெளியாகிறது.

இதே நேரம் ஓடிடி தளத்திற்கு வராமல் தியேட்டருக்கு மட்டும்தான் வருவோம் என்று கங்கணம் கட்டிய சில தெலுங்கு திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’, ‘லவ் ஸ்டோரி’, ‘விராத பர்வம்’, ‘டக் ஜெகதீஷ்’ போன்ற படங்களின் வெளியீடு நாள் குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

கன்னடத் திரையுலகத்தில் அடிவி சேஷ் மேஜர்’, ‘கே.ஜி.எஃப்.-2’, மலையாளத் திரையுலகத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘குரூப்’, மோகன்லால் நடித்த ‘அராட்டு’ ஆகிய படங்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதோடு மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘மரைக்காயர்’ என்ற மலையாளத் திரைப்படமும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் சிக்கித் தவித்து வருகிறது.

தற்போது இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 12-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குள்ளாக கொரோனா லாக் டவுன் விலக்கப்பட்டுவிடும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை..!!!

ஆக, கொரோனா லாக் டவுனால் மற்றைய துறைகள் போலவே சினிமா துறையும் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

The post ஓடிடி தளங்களில் வரிசையாக வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
10, 22 படங்களைத் தயாரிக்கும் சூப்பர் தயாரிப்பாளர்கள்..! https://touringtalkies.co/some-producers-produced-10-22-movies-at-now-a-time-in-tamil-film-industry/ Thu, 31 Dec 2020 05:06:56 +0000 https://touringtalkies.co/?p=11604 தற்போது தமிழகத்தில் திறந்திருக்கும் தியேட்டர்களில் கூட்டமே வரவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர்தான் வருகிறார்கள். சில தியேட்டர்களில் கூட்டம் வராமல் ஷோக்கள் கேன்ஸலாகி வருகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு பக்கம் கேரவன் வேன்கள் வாடகைக்குக் கிடைக்காத சூழல். அந்த அளவுக்குத் திரும்பும் பக்கமெல்லாம் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறதாம். புரொடெக்சன்ஸ் வேன்கள்கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள். என்ன நடக்கிறது தமிழ்ச் சினிமாவில்…? உண்மையில் நம்பவே முடியாத அளவுக்கு படத் […]

The post 10, 22 படங்களைத் தயாரிக்கும் சூப்பர் தயாரிப்பாளர்கள்..! appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழகத்தில் திறந்திருக்கும் தியேட்டர்களில் கூட்டமே வரவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர்தான் வருகிறார்கள். சில தியேட்டர்களில் கூட்டம் வராமல் ஷோக்கள் கேன்ஸலாகி வருகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இன்னொரு பக்கம் கேரவன் வேன்கள் வாடகைக்குக் கிடைக்காத சூழல். அந்த அளவுக்குத் திரும்பும் பக்கமெல்லாம் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறதாம். புரொடெக்சன்ஸ் வேன்கள்கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள்.

என்ன நடக்கிறது தமிழ்ச் சினிமாவில்…? உண்மையில் நம்பவே முடியாத அளவுக்கு படத் தயாரிப்புகள் மட்டும் வேக, வேகமாக கோடம்பாக்கத்தில் நடந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

ஒரு படம், இரண்டு படங்கள் தயாரிப்பதெல்லாம் இப்போது பேஷன் இல்லையாம். அதிகப்பட்சமாக 10, 22 படங்கள் என்று அலட்சியமாகச் சொல்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். இதைக் கேள்விப்பட்டு தலை சுற்றிப் போய் கிடக்கிறார்கள் மூத்தத் தயாரிப்பாளர்கள்.

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரமேஷ் பி.பிள்ளை 2021-ம் ஆண்டில் 10 படங்களைத் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

இவருடைய தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

மோகன்லால்-திரிஷா நடிப்பில் மலையாளத்தில் ‘ராம்’ என்ற படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார்.

ரெஜினா கேஸண்ட்ரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு படத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பூஜை போட்டிருக்கிறார்.

பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து 2 படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தை ‘மஞ்சள் பை’ படத்தை இயக்கிய இயக்குநர் ராகவன் இயக்கவிருக்கிறார்.  இன்னொரு படத்தின் பெயர் ‘பிளாக் மேஜிக்’. இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான ராம் இயக்குகிறார்.

மேலும், இவருடைய தயாரிப்பில் காஜல் அகர்வால் 2 படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர் ‘ரவுடி பேபி’. இந்தப் படத்தை சுந்தர்.சியிடம் உதவியாளராகப் பணி புரிந்த சரவணன் என்னும் அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளார்.

இவர் “பத்து படங்களைத் தயாரிக்கப் போகிறேன்…” என்று சொன்னால்.. இன்னொரு தயாரிப்பாளர் “22 படங்களைத் தயாரிக்கப் போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

‘நிபுணன்’ படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம்தான் அந்தத் தயாரிப்பாளர்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் ‘பூமிகா’ என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இவர் தயாரிக்கும் அடுத்தடுத்த பல படங்களின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “எப்படி இது சாத்தியமானது…?” என்று கேட்டால்.. “முதலில் நல்ல கதை.. சிறந்த இயக்குநர்.. இரண்டும் கிடைத்துவிட்டால் அவர்களிடமே பட்ஜெட் கேட்டு.. முதல் காப்பி அடிப்படையில் அவர்களிடத்தில் பணத்தைக் கொடுத்து ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துத் தரும்படி சொல்லிவிடுவேன். இதுதான் சிறந்த வழி. எளிய வழி. இதைச் செய்தால் எந்தப் பிரச்சினையும் வராது..” என்கிறார் சுதன் சுந்தரம்.

இதேபோல், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா பிரபுதேவாவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் மூன்று படங்கள் கைவசம் இருக்கின்றன.

இடையில் சுந்தர் சி., எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கப் போவது அமிர்தா ஐயர்.

இப்படி ஒரு பக்கம் லாக் டவுன்.. தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதியில்லை என்ற சூழ்நிலை நிலவி வந்தாலும் புதிய படங்கள் தயாரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் தமிழ்ச் சினிமா ஓடிக் கொண்டிருப்பது நிச்சயமாக ஆச்சரியமான விஷயம்தான்.

The post 10, 22 படங்களைத் தயாரிக்கும் சூப்பர் தயாரிப்பாளர்கள்..! appeared first on Touring Talkies.

]]>
‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..! https://touringtalkies.co/indian-2-movie-will-restart-very-soon/ Thu, 05 Nov 2020 05:19:48 +0000 https://touringtalkies.co/?p=9698 இயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் படத்தின் உருவாக்கத்தின்போதே பலவித பேச்சுக்களையும், சர்ச்சைகளையும் எழுப்பும். காரணம், படத்தின் பட்ஜெட்டும், நடிகர், நடிகையரின் அன்றாட அலுவல்களும்தான். ‘இந்தியன்-2’ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வந்த நேரத்தில்தான் திருஷ்டி பட்டதுபோல் ஒரு விபத்து நடந்து 3 பேர் இறந்து போனார்கள். அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் நிலைக்கு வரும்போது கொரோனா வைரஸினால் இந்தியா முழுவதும் லாக் டவுன் ஆகிவிட.. மொத்தத் திரையுலகமும் அடங்கிப் போனது. இப்போது ஷூட்டிங்கிற்கு […]

The post ‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் படத்தின் உருவாக்கத்தின்போதே பலவித பேச்சுக்களையும், சர்ச்சைகளையும் எழுப்பும். காரணம், படத்தின் பட்ஜெட்டும், நடிகர், நடிகையரின் அன்றாட அலுவல்களும்தான்.

‘இந்தியன்-2’ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வந்த நேரத்தில்தான் திருஷ்டி பட்டதுபோல் ஒரு விபத்து நடந்து 3 பேர் இறந்து போனார்கள். அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் நிலைக்கு வரும்போது கொரோனா வைரஸினால் இந்தியா முழுவதும் லாக் டவுன் ஆகிவிட.. மொத்தத் திரையுலகமும் அடங்கிப் போனது.

இப்போது ஷூட்டிங்கிற்கு மறுபடியும் அனுமதி கிடைத்து பல படப்பிடிப்புகள் நடந்து வரும் வேளையில் ‘இந்தியன்-2’ மட்டும் துவக்கப்படவே இல்லை. காரணம், அது மிகப் பெரிய பட்ஜெட் என்பதாலும், கதைப்படி அந்தப் படம் மக்கள் போராட்டத்தை முன்னிறுத்திய படமாகவும் இருப்பதும்தான்.

அரசு அறிவுறுத்தலின்படி ஒரு படப்பிடிப்பின்போது படக் குழுவினர் 100 பேருக்குள்தான் இருந்தாக வேண்டும். ஆனால், ‘இந்தியன்-2’ படத்திற்கு குறைந்தபட்சமே 200 பேர் தேவைப்படுகிறார்கள். இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் சிறப்பு விதிவிலக்கெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், இது கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் அரசியலில் போய் முடியும். இதனால் கொரோனா முழுமையாக முடியட்டும் என்று அந்தப் படக் குழு காத்திருக்கிறது.

இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனத்திற்கு ‘இந்தியன்-2’ தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும், அதையொட்டி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து ‘இந்தியன்-2’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப்பான நிலையில் இருப்பதாகவும் வதந்திகள் தீயாய் பரவின.

இதற்கடுத்து ஷங்கர் தனியே சென்று ஐந்து மொழி நாயகர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தைத் துவக்கப் போவதாகவும், அதில் தமிழின் சார்பில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மின்னல் வேக வதந்திகள் பரவி.. இயக்குநர் ஷங்கரை டென்ஷனாக்கியிருக்கிறது.

இது பற்றி லைகா வட்டாரத்தில் பேசியபோது, “இதில் எதுவுமே உண்மையில்லை. ‘இந்தியன்-2’ நிச்சயமாக மீண்டும் துவக்கப்படும். ஷங்கர் வேறு படங்களுக்கு போகவில்லை. அவருடைய முழு கவனமும் ‘இந்தியன்-2’ படத்தில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா லாக் டவுன் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும்.

கமல்ஹாசனும் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இப்போது அவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வேறு கெட்டப்பில் இருந்தாலும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு துவக்கப்பட்டால் சட்டென்று அதற்கு மாறிவிட்டு.. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வேறு கெட்டப்பில் வந்துவிடுவதாக திட்டவட்டமாக லைகா நிறுவனத்திடமும், ஷங்கரிடமும் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக ‘இந்தியன்-2’ விரைவில் துவங்கும்..” என்கிறது லைகா வட்டாரம்.

The post ‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..! appeared first on Touring Talkies.

]]>