Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கேட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Jan 2021 06:14:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கேட் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! https://touringtalkies.co/gate-movie-preview-news/ Wed, 20 Jan 2021 06:13:37 +0000 https://touringtalkies.co/?p=12284 ஜி.கே. சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018-ம் ஆண்டு தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானுஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். […]

The post லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! appeared first on Touring Talkies.

]]>
ஜி.கே. சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018-ம் ஆண்டு தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானுஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம்’ படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்களாக இருப்பவர்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பியார் பிரேமா காதல்’ என்கிற ஹிட் படத்திற்கு படத் தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா இந்தப் படத்தின் படத் தொகுப்பை கவனிக்கிறார். இக்கு’, ‘கிகோரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக நடக்கும் திகில் நிகழ்வுதான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழு நீள த்ரில்லர் படமாக இது உருவாகி  இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

The post லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! appeared first on Touring Talkies.

]]>