Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
குத்துக்கு பத்து வெப் சீரீஸ் – Touring Talkies https://touringtalkies.co Tue, 20 Jul 2021 09:48:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png குத்துக்கு பத்து வெப் சீரீஸ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 இயக்குநர் சுசீந்திரன் துவக்கி வைத்த ‘குத்துக்கு பத்து’ வெப் சீரீஸ் https://touringtalkies.co/kuthukku-pathu-web-series-launched-by-director-suseendhiran/ Tue, 20 Jul 2021 09:46:55 +0000 https://touringtalkies.co/?p=16360 YouTube ல்  பிரபலமான  Temple Monkey சேனல், முன்னணி OTT தளத்துடன் இணைந்து  ஒரு இணைய தொடரை உருவாக்குகிறது. இந்தத் தொடருக்கு ‘குத்துக்கு பத்து’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், ‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக  ‘குத்துக்கு பத்து’ என்ற இணையத் தொடரை உருவாக்க உள்ளார்.   இந்த இணைய தொடரை   D […]

The post இயக்குநர் சுசீந்திரன் துவக்கி வைத்த ‘குத்துக்கு பத்து’ வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.

]]>
YouTube ல்  பிரபலமான  Temple Monkey சேனல், முன்னணி OTT தளத்துடன் இணைந்து  ஒரு இணைய தொடரை உருவாக்குகிறது. இந்தத் தொடருக்கு ‘குத்துக்கு பத்து’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக  ‘குத்துக்கு பத்து’ என்ற இணையத் தொடரை உருவாக்க உள்ளார்.  

இந்த இணைய தொடரை   D Company சார்பில் தயாரிப்பாளர் A.K.V.துரை தயாரிக்கிறார். இந்தத் தொடரில் ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.  

8 அத்தியாயங்கள் கொண்ட  இத்தொடரை விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார். ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலா இசையமைக்கிறார். சாந்தோஷ் செந்தில் (Shifty) படத் தொகுப்பு செய்ய, மதன் குமார் கலை இயக்கம் செய்கிறார். டேஞ்சர் மணி சண்டைப் பயிற்சிகளை செய்ய, முகமது சுபையர் ஆடை வடிவமைப்புகளை செய்கிறார், வினோத் சுகுமாரன் மேக்கப்பை கவனிக்க,  சேது ராமலிங்கம், சரத் நிவாஷ், மற்றும் KV மோத்தி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். D Company சார்பில் A.K.V.துரை இத்தொடரை  தயாரிக்கிறார்.

இத்தொடர் பற்றி இயக்குநர் விஜய் வரதராஜ் பேசும்போது, “இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர்தான் இது.

இத்தொடரில் மிகத் திறமை வாய்ந்த  நடிகர்கள் குழு பங்கேற்கிறது. எந்த ஒரு பாத்திரத்திலும் தனித்து தெரியும் திறன் பெற்ற ஆடுகளம் நரேன் சார், போஸ் வெங்கட் சார் போன்ற பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுவது  பேரின்பம் தரும் அனுபவம். இத்தொடரில் அவர்களது கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்….” என்றார்.

தயாரிப்பாளர் A.K.V.துரை பேசும்போது, “Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், கதை சொல்லலில் தனது புதுமையான அணுகுமுறையால், அனைத்து தரப்பினரையும் மகிழ்விப்பதில் தனது திறமையை  ஏற்கனவே நிரூபித்துள்ளார். அவர் இந்தக் ‘குத்துக்கு பத்து’ தொடரின் திரைக்கதையை விவரித்தபோது, நிகழ்ச்சி முழுவதும் 100% பொழுது போக்கு தன்மையுடனும், அனைவரும் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடும் வகையிலும் இருப்பதை உணர்ந்தேன். குறிப்பாக, இது இளம் பார்வையாளர்களுக்கு பெரிய  கொண்டாட்டமாக இருக்கும்…” என்றார்.

இந்த வெப் தொடரின் துவக்க விழா நேற்று காலை பூஜையுடன் துவங்கியது. இதன் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் துவக்கி வைத்தார்.

The post இயக்குநர் சுசீந்திரன் துவக்கி வைத்த ‘குத்துக்கு பத்து’ வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.

]]>