Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
காந்தாரா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 27 Nov 2022 11:59:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png காந்தாரா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘காந்தாரா’ படத்தின் பாடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..! https://touringtalkies.co/the-ban-imposed-on-the-song-of-the-film-kandhara-has-been-lifted/ Sun, 27 Nov 2022 11:58:55 +0000 https://touringtalkies.co/?p=27674 ‘காந்தாரா’ படத்தில் இருக்கும் புகழ் பெற்ற பாடலான ‘வராஹ ரூபம்’ பாடலை ஒளி, ஒலிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை கோழிக்கோடு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வராஹ ரூபம்’  என்ற பாடல், கேரளாவை சேர்ந்த […]

The post ‘காந்தாரா’ படத்தின் பாடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா’ படத்தில் இருக்கும் புகழ் பெற்ற பாடலான ‘வராஹ ரூபம்’ பாடலை ஒளி, ஒலிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை கோழிக்கோடு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வராஹ ரூபம்’  என்ற பாடல், கேரளாவை சேர்ந்த பிரபல ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் ‘நவரசம்’ என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கோழிக்கோடு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனால் அந்தப் பாடலை ‘காந்தாரா’ படத்தில் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து படத்திலும் அந்த இசை நீக்கப்பட்டு வேறொரு இசையுடன் பாடல் ஒலித்தது.

இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த வராஹ ரூபம்’ பாடல் காப்பி அடிக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தய்க்குடம் பிரிட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்பதால் அந்தப் பாடலுக்கு விதிக்கப்பட்ட தடையை கோழிக்கோடு நீதிமன்றம் நீக்கியுள்ளதாம்.

The post ‘காந்தாரா’ படத்தின் பாடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..! appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! https://touringtalkies.co/ganthara-movie-that-has-sidelined-ponniyin-selvan-and-vikram/ Sun, 30 Oct 2022 18:44:39 +0000 https://touringtalkies.co/?p=26285 ‘காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து […]

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ‘காந்தாரா’வின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனமே திகைப்பில் உள்ளது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் ஆகியுள்ளது. இது ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களின் தெலுங்கு வெர்ஷன் வசூலைவிட அதிகமாகும்.

கர்நாடகத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படமாக ‘காந்தாரா’ மாறியுள்ளது. அந்த வகையில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் ‘காந்தாரா’ படம் திரையிடப்பட்டிருந்தது.பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘காந்தாரா’ படத்திற்குக் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் காந்தாரா படம் தற்போது தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக திரையரங்குகளில் ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய 3 படங்கள்தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! https://touringtalkies.co/varaha-roopam-song-from-kantara-banned/ Sat, 29 Oct 2022 14:16:12 +0000 https://touringtalkies.co/?p=26216 கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் ஒட்டு மொத்த வசூல் தற்போது 150 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது என்று திரைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ‘காந்தாரா’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம் […]

The post ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! appeared first on Touring Talkies.

]]>
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் ஒட்டு மொத்த வசூல் தற்போது 150 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது என்று திரைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த ‘காந்தாரா’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் கேரளாவை சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நவரசம்’ என்ற பாடலுடன் ஒத்துப் போவதாகவும், இரண்டு பாடல்களுக்கும் தவிர்க்க முடியாத பல ஒற்றுமைகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ‘வராஹ ரூபம்’ பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் காந்தாரா படக் குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, “காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும்…” என்று கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ‘தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு’ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோன்று Amazon, Youtube, Spotify, Wynk Music, JioSaavn போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தப் பாடலைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

The post ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! appeared first on Touring Talkies.

]]>
“இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! https://touringtalkies.co/kantara-is-a-masterpiece-in-indian-cinema-rajini-praises/ Wed, 26 Oct 2022 15:56:14 +0000 https://touringtalkies.co/?p=26027 “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ‘கே.ஜி.எஃப்.’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் ‘பஞ்சுருளி’ எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை […]

The post “இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

‘கே.ஜி.எஃப்.’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி’ எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக் குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம்.  

இந்நிலையில் இப்படத்தினைக் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய ட்வீட்டரில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது. என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின்
இந்த ‘காந்தாரா’ படம் உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களைவிட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தப் படம் தமிழகத்தில் இன்றும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

The post “இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kantara-movie-review/ Sun, 16 Oct 2022 13:11:07 +0000 https://touringtalkies.co/?p=25513 ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் ‘காந்தாரா’. கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தப் படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த தனுஷ் முதல் கார்த்திவரை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இப்படத்தில்? பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மலைக்கிராம பழங்குடி மக்களின் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கை, குல தெய்வ வழிபாடு, வனத்துறையினர் அவர்களை விரட்ட நினைக்கும் […]

The post காந்தாரா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் ‘காந்தாரா’. கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தப் படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்த்த தனுஷ் முதல் கார்த்திவரை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இப்படத்தில்? பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மலைக்கிராம பழங்குடி மக்களின் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது வாழ்க்கை, குல தெய்வ வழிபாடு, வனத்துறையினர் அவர்களை விரட்ட நினைக்கும் அதிகாரத்துவம், நில அரசியல், நிலச்சுவான்தார்களின் அதிகாரத் திமிர் என சகலத்தையும் இப்படம் பேசுகிறது.

முன்னொரு காலத்தில் ராஜா ஒருவர் ஆண்டு வருகிறார். எல்லாம் இருந்தும் அவருக்கு நிம்மதியே இல்லாததால் நிம்மதியை தேடி ஊர் ஊராக செல்கிறார். அப்படி செல்கையில் ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் கடவுளை தனக்கும் வேண்டும் என்று கேட்க அந்த மக்களின் கடவுளோ, “நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இந்த நிலத்தை இவர்களுக்கு கொடுத்து விடு” என்கிறது. அதன்படியே ராஜாவும் செய்கிறார்.

காலங்கள் உருண்டோட அரசரின் வாரிசுகள் அந்த இடத்தை அம்மக்களிடம் இருந்து கைப்பற்ற நினைக்கின்றனர். மேலும் வனத்துறையும் இவர்களது இடத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களை அப்புறப்படுத்த துடிக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் காந்தாரா’.

இயக்குனர் ரிஷப் ஷெட்டிதான் நாயகனாகவும் நடித்துள்ளார். மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த காட்சியில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் முகபாவனையும் அற்புதம்.

வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள கிஷோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ரிஷப்பின் அம்மாவாக நடித்தவரின் கோப நடிப்பும், காதலியாக நடித்தவரின் காதல் கலந்த நடிப்பும் படத்திற்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

அதேபோன்று இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு மணி மகுடமாக உள்ளன. கலை இயக்குநரை கட்டிப் பிடித்துப் பாராட்ட வேண்டும். ஒரு கிராமத்தை அப்படியே ஸ்தாபித்திருக்கிறார். ஒப்பனை கலைஞர்கள் சாமியாடி வேடத்திற்காக பாராட்டினை பெறுகிறார்கள்.

நமது ஊரில் எப்படி ஐய்யனார், கருப்புசாமி போன்ற காவல் தெய்வங்கள் உள்ளதோ அதே போல் அங்குள்ள காவல் தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்கும் பழங்குடி மக்கள் பற்றிய கதையை தாம் சிறு வயதில் பார்த்து கேட்ட கதையை சிறப்பாக படமாக்கியுள்ளார்.

காடு எல்லோருக்கும் பொதுவானது. பல நூறு ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தவர்களை ஆக்கிரப்பு செய்துவிட்டதாக அவர்களை துன்புறுத்தும் அரசு அதிகாரிகள், முன்னோர்கள் தானமாக கொடுத்த நிலத்தை அவர்களின் வாரிசுகள் எப்படி வஞ்சகம் செய்து அபகரிக்க நினைக்கின்றனர்.

பழங்குடி மக்களின் காவலராக இருக்கும் அரச குடும்பத்து வாரிசு, அப்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது.. அவர்களை நன்றாக வேலை வாங்கிவிட்டு அடிமை போல் ஆட்டுவிப்பது என அத்தனை அரசியலையும் லாவகமாக படத்தில் இணைத்துள்ளார்.

குல தெய்வ வழிபாடு, கடவுள் நம்பிக்கை, பழங்குடி மக்களின் நம்பிக்கை, அரசின் அத்துமீறல், நிலச்சுவான்களின் காட்டுமிராண்டித்தனம் என அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் நுழைத்து ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்துள்ள இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நமது வாழ்த்துகள்.

‘கே.ஜி.எப்.’ படத்திற்கு பிறகு கன்னட சினிமாவிற்கும், இந்திய சினிமா உலகிற்கும் இந்த ‘காந்தாரா’ ஒரு மைல் கல்.

RATING : 4.5 / 5

The post காந்தாரா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>