Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கருணாஸ் – Touring Talkies https://touringtalkies.co Sun, 27 Nov 2022 11:25:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கருணாஸ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 வில்லனையே கண் கலங்க வைத்த படக் காட்சி..! https://touringtalkies.co/the-film-made-the-villain-confused/ Sun, 27 Nov 2022 11:24:36 +0000 https://touringtalkies.co/?p=27662 கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. நடிகை சத்யா தேவி டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், வில்லனாக ‘களவாணி’ புகழ் திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் […]

The post வில்லனையே கண் கலங்க வைத்த படக் காட்சி..! appeared first on Touring Talkies.

]]>
கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

நடிகை சத்யா தேவி டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், வில்லனாக ‘களவாணி’ புகழ் திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “உண்மைக்கு நெருக்கமான இந்த நிகழ்வுகளை சினிமாவாக எடுக்க தைரியம் வேண்டும். அதை பணம் போட்டு தயாரிக்க இன்னும் அதிக தைரியம் வேண்டும். சவாலான இந்த விஷயத்தை இயக்குநர் கிட்டு, கருணாஸ் இருவரும் இணைந்து சாதித்துள்ளனர். மேதகு’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் கிட்டு நிறைய இம்ப்ரூவ் பண்ணியிருக்கிறார். இந்தப் படத்திற்கு பின்னணி இசை ரொம்பவே அழுத்தமாக அமைந்துள்ளது” என்று வாழ்த்தினார்.

‘அசுரன்’ படத்தில் ஒரு அறிமுக நடிகராக அனைவரையும் கவர்ந்த கருணாஸின் மகன் கென் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவர் பேசும்போது, “என்னுடைய நண்பர் ஈஸ்வர்தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர். நான் அவருக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றியுள்ளேன். இந்த ‘சல்லியர்கள்’ படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதை புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப் போனால் இயக்குநர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம். இந்தப் படத்தில் நடிகர் திருமுருகன் சிங்கள ராணுவ வீரனாக வில்லனாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஒரு காட்சியை அவருக்கு திரையிட்டு காட்டியதும் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டார்” என்று கூறினார்.

The post வில்லனையே கண் கலங்க வைத்த படக் காட்சி..! appeared first on Touring Talkies.

]]>
“இந்தியாவிலேயே நான்தான்…!” கருணாஸ் பெருமிதம் https://touringtalkies.co/i-am-the-only-one-in-india-karunas-pride/ Mon, 31 Oct 2022 00:37:00 +0000 https://touringtalkies.co/?p=26352 பாலா இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் கருணாஸ். தொடர்ந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவைத்தவர், நாயகனாக சில படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார். நேற்று இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் பெற்ற வாழ்த்துகளில்யே மிகப்பெரிய வாழ்த்து என இயக்குநர் சுந்தர் சி கூறியதை நினைவு கூர்ந்தார். “ஒரு முறை இயக்குநர் சுந்தர் சி அவர்களை சந்திக்க நேர்ந்தது.  அவர், ‘ஹீரோவாக, வில்லனாக முத்திரை பதிப்பது எளிது.  பல பேர் […]

The post “இந்தியாவிலேயே நான்தான்…!” கருணாஸ் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
பாலா இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் கருணாஸ். தொடர்ந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவைத்தவர், நாயகனாக சில படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார்.

நேற்று இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் பெற்ற வாழ்த்துகளில்யே மிகப்பெரிய வாழ்த்து என இயக்குநர் சுந்தர் சி கூறியதை நினைவு கூர்ந்தார்.

“ஒரு முறை இயக்குநர் சுந்தர் சி அவர்களை சந்திக்க நேர்ந்தது.  அவர், ‘ஹீரோவாக, வில்லனாக முத்திரை பதிப்பது எளிது.  பல பேர் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தது உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக.. சில – பல படங்களில் நடித்து, மெல்ல மெல்லத்தான் ரசிகர்களின் மனதைக் கவர முடியும்.

ஆனல் தமிழில்.. ஏன் இந்திய அளவிலேயே, நீதான், முதல் படத்திலேயே அதிரடியாக காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்துவிட்டாய்’ என்றார்.

காதல், அதிரடி, சென்டிமெண்ட் என அத்தனை உணர்வுகளையும் தனது படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துபவர் சுந்தர் சி. நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவர் இப்படி பாராட்டியதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என நெகிழ்ந்து கூறினார் கருணாஸ்.

The post “இந்தியாவிலேயே நான்தான்…!” கருணாஸ் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியீடு https://touringtalkies.co/aadhaar-movies-screenplay-book-was-released-by-seemaan/ Wed, 21 Sep 2022 05:06:59 +0000 https://touringtalkies.co/?p=24612 வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. ‘பாரதி’, ‘பெரியார்’, ‘களவாணி’, ‘அழகர்சாமியின் […]

The post ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.

‘பாரதி’, ‘பெரியார்’, ‘களவாணி’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘அந்த நாள்’, ‘சத்தம் போடாதே’ பாலு மகேந்திராவின் ‘சந்தியா ராகம்’, வசந்த்தின் ‘ரிதம்’, கமல்ஹாசனின் ‘ஹே ராம்’, வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’, மிஷ்கினின் ‘அஞ்சாதே’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என ஏராளமான வெற்றி பெற்ற படைப்புகளின் திரைக்கதை, நூலாக வெளியாகி, வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

திரைப்படம் என்பது காட்சி வழியாக கற்பனையை நம்பகத் தன்மையுடன் பார்வையாளர்களுக்கு சென்று சேர்ப்பிக்கும் ஊடகம் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. அதனைப் புத்தக வடிவில் வெளியிட்டாலும் அதன் சுவை குன்றாமல் வாசகர்களால் நுகரப்படும்.

அந்த வகையில் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

சர்வதேச அளவிலான வணிக அரசியலை மையப்படுத்தி இதன் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகும் முன்னரே நேர்மறையான விமர்சனங்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தின் திரைக்கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தால் நூலாக உருவாக்கப்பட்டது.

இதன் முதல் பிரதியை நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வெளியிட்டார். அதனை ‘மாநாடு’ படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

‘ஆதார்’ திரைக்கதை புத்தகம் உருவானது குறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், ”என்னுடைய 22 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் மூன்று படைப்புகளை மட்டுமே முத்தாக படைத்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலமாக ஆய்வு செய்து நான் உருவாக்கிய திரைக்கதைதான் ‘ஆதார்’.

ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திதான் இதன் திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும். இதன் திரைக்கதையை நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதனை தயாரிப்பாளரிடத்தில் தெரிவித்தவுடன் அவரும் முழு சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த நூல் தரமான வடிவில் தயாராகி இருக்கிறது.

நூலை வாசித்த பிறகும், திரைப்படத்தை பார்க்கும் போதும், இரண்டும் வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே விதமான உணர்வை அளிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

இந்த ‘ஆதார்’ படத்தில்  அருண் பாண்டியன், கருணாஸ், ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ற வகையில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, பின்னணியிசை உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் https://touringtalkies.co/aadhaar-movie-gets-censor-certificate/ Mon, 09 May 2022 08:38:46 +0000 https://touringtalkies.co/?p=21903 இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ […]

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, U / A சான்றிதழ் பெற்றிருக்கிறது.

விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>