Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கதிர் – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 18:27:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கதிர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 யூகி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/yuki-movie-review/ Tue, 22 Nov 2022 18:27:25 +0000 https://touringtalkies.co/?p=27459 வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர். இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு […]

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்.

இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வருகிறது.  

தனது உதவியாளர்களுடன் இணைந்து ஆனந்தியைத் தேடத் துவங்குகிறார் நரேன். இந்தத் தேடுதல் வேட்டையின் முடிச்சுக்கள் அவிழ.. அவிழ.. இந்தக் களத்திற்குள் நிற்கும் யாருமே உண்மையாளர்கள் இல்லை. அனைவருமே போலிகள் என்பது காட்சிக்குக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக நிரூபணமாகிறது.  

கார்த்திகா யார்? கார்த்திகாவின் கணவன் யார்? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? பிரதாப் போத்தன் கண்டு பிடிக்க சொல்லும் பெண் யார்? சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கைத் தீர்த்தது யார்? ஜான் விஜய் எதற்காக கொல்லப்பட்டார்? இந்த எல்லா கேள்விகளுக்குமான விடைதான் இந்த யூகி’ படம்.

துப்பறியும் நிபுணரான நரேனை சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதும், பார்வையாலேயே குற்றங்களை அளவெடுப்பதும், கதிரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க அவர் எடுக்கும் அவசர ஸ்டண்ட்களும், தனது சக ஊழியர்களிடையேகூட உண்மையாக நடந்ததை மறைத்துவிட்டு கதையைத் திருப்பவதுமாய் ஒரு அழுத்தமான நடிகராய் திரையில் வலம் வருகிறார் நரேன்.

சாமி சரணம் என்று சொன்னபடியே கொலை செய்யக்கூட தயங்காத நடிப்பைக் காண்பித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். இவருக்கான பின்புலக் காட்சிகள் அழுத்தமாய் இல்லாதது மட்டும்தான் ஒரேயொரு குறை. முதல் பாதியில் கதிருக்கு அதிக வேலையில்லை என்றாலும், போகப் போக அவரால்தான் கதையே நகர்கிறது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நேர் வழியில் சென்றால் நீதி கிடைக்காது என்று நினைத்து புத்திசாலித்தனமாய் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கதிர் சாலப்பொருத்தம்தான்.

எப்போதும் இறுகிய முகம்.. பதட்டப்படாத குணம்.. காரியத்தில் முனைப்பு.. செய்து காட்டுவதில் திறமை என்று தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை உணர்த்தியிருக்கிறார் கதிர். பவித்ரா லட்சுமி ஒரு பரிதாபமான கதாப்பாத்திரத்தில் உயிராய், உணர்வாய் நடித்திருக்கிறார். உண்மை தெரியும்போது நம்மால் பாவப்படத்தான் முடிகிறது.

கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்புதான் படத்தில் ரசிகர்களை கொஞ்சம் ஒன்றிப் போக வைக்கிறது. இயலாமையின் காரணமாய் வாடகைத் தாய் விஷயத்துக்கு ஒத்துக் கொண்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பை நடிப்பில் அழகாய் காட்டியிருக்கிறார் ஆனந்தி. பாராட்டுக்கள்.

ஜான் விஜய் வழக்கம்போல தெனாவெட்டு கேரக்டரை அலட்சியமாகச் செய்து பரிதாபமாய் செத்துப் போகிறார். வாடகை தாய் முறைக்கு புரோக்கர் வேலை பார்க்கும் மருத்துவராக வினோதினியும் தன் பங்குக்கு விஷம் தடவிய நடிப்பைக் காண்பித்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிரதாப் போத்தன் நடித்து வெளிவந்திருக்கும் கடைசி படம் இது. அந்த ஒரு பெருமையை மட்டுமே பிரதாப்பிற்கு இந்தப் படம் கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கேமிரா நல்லதும் செய்யவில்லை. கெடுதலும் செய்யவில்லை. படத்தையும் டிஸ்டர்ப் செய்யாமல் ரசிக்க வைத்திருக்கிறது. இது போதும் எனலாம். பாடலுக்கான ரஞ்சின் ராஜின் இசை மென்மையைக் கூட்டியிருக்கிறது. டான் வின்சென்ட்டின் பின்னணி இசை படத்தின் திகில், சஸ்பென்ஸ் உணர்வை கடக்க வைத்திருக்கிறது.

சமீப நாட்களில் பிரபலமாகியிருக்கும் வாடகைத் தாய் விவகாரத்தில் மறைந்திருக்கும் சில விஷயங்களை இந்தப் படம் நேர்மையாகப் பேசியிருக்கிறது. பிள்ளை பெற்றுக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ள தம்பதிகள் பிள்ளைப் பேறு காலத்திலேயே பிரிந்து போனால் அந்தப் பிள்ளைக்கு யார் பொறுப்பு.. அந்த வாடகைத் தாயை யார் கவனித்துக் கொள்வது.. இது போன்ற இந்த விஷயத்தில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் எடுத்துக் காட்டியிருப்பது நல்ல விஷயம்தான்..!

கொஞ்சம் பிகசினாலும் கதை புரியாமற்போய்விடும் அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் திரைக்கதை திறமைக்கும், சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் கடைசிவரையிலும் கொண்டுபோயிருக்கும் விதத்திற்கும், நடிகர், நடிகைகளை அழுத்தமாக அந்தக் கேரக்டராகவே வாழ்வதுபோல நடிக்க வைத்திருக்கும் இயக்கத் திறமைக்காகவும் மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகள்.

சிறந்த திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புவர்களுக்கேற்ற படம் இது..!

RATING : 4.5 / 5

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வாடகை தாய் விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘யூகி’ படம் https://touringtalkies.co/yugi-movie-produced-by-surrogate-mother-matter/ Mon, 14 Nov 2022 09:21:24 +0000 https://touringtalkies.co/?p=27087 UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘யூகி’. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து […]

The post வாடகை தாய் விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘யூகி’ படம் appeared first on Touring Talkies.

]]>
UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘யூகி’. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 11:11 Productions நிறுவனத்தின் தயாரிப்பாளரான பிரபு திலக் பேசும்போது, “இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது. பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே’ போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக்கை தருகிறது.

‘பேபல்’ என்றொரு படம் வந்துள்ளது. அந்தப் படத்தில் வேறு வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஒருவரையொருவர் எப்படி பாதிக்கும் என சொல்லியிருப்பார்கள். அதே போல்தான் நம் வாழ்க்கையும் என நினைக்கிறேன். இந்தப் படமும் அது போலத்தான். மிக நல்ல திரைக்கதை. இப்படத்தை நான் வெளியிடுகிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ் பேசும்போது, “எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. எனக்கு தமிழ் பிடிக்கும். இப்போது திரைத் துறை மிகப் பெரிதாக மாறியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை இரு மொழிகளில் எடுத்துள்ளோம். இதை எப்படி வெளியிடப் போகிறோம் என பயந்து கொண்டு இருந்தோம். அப்போதுதான் பிரபு சாரை சந்தித்தோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்தில் இப்படம் நடந்தது. இப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்து தந்த அனைவருக்கும் நன்றி. தமிழ் திரையில் இப்போது நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி…” என்றார்.

இசையமைப்பாளர் ரெஞ்சின் ராஜ் பேசும்போது, “திரையரங்கில் வெளியாகும் எனது முதல் படம் இது. எப்போதும் எனது ஃபேவரைட் தமிழ் பாடல்கள்தான். இந்த யூகி’ படத்தில் வித்தியாசமான இசையில் இரண்டு பாடல்களை தந்துள்ளோம். உங்கள் ஆதரவு எனக்கு தேவை. இயக்குநர் ஜாக் ஹாரீஷ்க்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கு நன்றி..” என்றார்.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் பேசும்போது, “எழுத்தாளர் பாக்கியராஜால்தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். ஜாக் சாரிடம் வேலை பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடந்தது. நடிகர்களின் ஒத்துழைப்பால்தான் சிறப்பாக இப்படத்தை முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி பேசும்போது, “முதல்முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச்சில் நான் கலந்து கொள்கிறேன். இந்த யூகி’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இரு மொழி படத்தில் நடிப்பது மிகப் பெரிய கொடுப்பினை. இந்தப் படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. பாக்கியராஜ் சார் மிக அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் சார் அற்புதமாக எடுத்துள்ளார். இரு  மொழியில் இப்படத்தை எடுத்தது புது அனுபவம். இப்படத்தை வெளியிடும் 11:11 Productions நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு ஆதரவு உங்களுக்கு நன்றி…” என்றார்.

கதாசிரியர் பாக்கியராஜ் பேசும்போது, “குஷன் பிரதர், ஜாக் பிரதர் மற்றும் 11:11 Productions  நிறுவனத்தின் பிரபு திலக் ஆகியோருக்கு நன்றி. ஜாக் எந்த ஒரு சின்ன விசயத்திலும் என்னை ஆலோசனை கேட்பார். அவரது அன்புக்கு நன்றி.

‘யசோதா’ படமும் வாடகை தாய் கதையில் உருவானது என்பது தெரிந்தவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் நிம்மதியே வந்தது. ஏனெனில், அது முழுக்க வேற கதை. இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன்ஸ் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது. அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

நட்டி எனும் நட்ராஜ் பேசும்போது, “பிரபு திலக் என்னுடைய ஃபேமிலியில் ஒருத்தர் மாதிரி. அவர் வெளியிடும் படங்களை பார்த்து பெருமையாக இருக்கும். அவர் இந்தப் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்தப் படம் கோவிட் காலத்தில் நடந்தது. எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி. ஜாக் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார். நீங்கள் நினைப்பது போல் இந்தப் படம் இருக்காது. உங்களை நிறைய ஆச்சரியப்படுத்தும்..” என்றார்.

நடிகை ஆத்மிகா பேசும்போது, “நீண்ட காலம் கழித்து தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் எடுத்தது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதையான இந்தப் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம். முதலில் கடினமாக இருந்தது. பின்பு சவாலாக முயன்று செய்துள்ளேன். இப்படத்தில் ஆதரவு தந்த அனைவருக்கும் உடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் நரேன் பேசும்போது, “கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம் இந்தக் கதையும் அந்த மாதிரிதான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்றுதான் கதை கேட்டேன் ஆனால் கதையை இயக்குநர் சொன்னவிதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப் படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்கள். ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்த போதும், இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டு வந்துள்ளார்கள். இப்படம் நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு தரும். கதிர் நட்டி இருவருடன் நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியிடுவதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும். படத்தை வெளியிடும் 11:11 Productions பிரபு திலக் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

நடிகை கயல் ஆனந்தி பேசும்போது, “கயல் படம் வந்து 8 வருடம் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. இந்த யூகி’ படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இப்படம் பண்ணும்போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக, மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகர் கதிர் பேசும்போது, “சுழல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கதை வந்தது. போலீஸ் வேடம் திரும்பவும் பண்ணக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக் கூடிய கதை இது. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப் படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்கியராஜ் அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் குழந்தை மாதிரி பேசி வேலை வாங்கி விடுவார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

The post வாடகை தாய் விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘யூகி’ படம் appeared first on Touring Talkies.

]]>
கதிர், நரேன், ஆனந்தி நடித்திருக்கும் ‘யூகி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது https://touringtalkies.co/yuki-movie-will-release-next-month/ Thu, 27 Oct 2022 17:35:10 +0000 https://touringtalkies.co/?p=26163 ‘Forensic’ மற்றும் ‘Kala’ போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘யூகி’. இந்த ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் […]

The post கதிர், நரேன், ஆனந்தி நடித்திருக்கும் ‘யூகி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
‘Forensic’ மற்றும் ‘Kala’ போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘யூகி’.

இந்த ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பாக்யராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார். அறிமுக இயக்குநரான ஜாக் ஹாரிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படம் திரைக்கு வரத் தயாராகவுள்ளது. அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை 11:11 பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிடுகிறார்.

The post கதிர், நரேன், ஆனந்தி நடித்திருக்கும் ‘யூகி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>