Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கண்ணதாசன் – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Oct 2022 11:56:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கண்ணதாசன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-the-context-in-which-kannadasan-wrote-the-famous-song/ Thu, 27 Oct 2022 11:43:09 +0000 https://touringtalkies.co/?p=26106 சந்திரபாபு பாடி, ஆடி நடித்த புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை.. என்ற பாடல் காலத்தால் அழியாதது. ஏவி.எம். தயாரிக்க கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்களால் உருவான அன்னை திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம் பெற்றது. சந்திரபாபு, பானுமதி, சௌகார் ஜானகி, என்.வி.ரங்காராவ் மற்றும் சந்திரபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் தோன்றினர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுதியிருந்தார். ஆர்.சுதர்சனம் இசை அமைக்க,  கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரும் பாடல்களை எழுதி இருந்தனர். அழகிய மிதிலை நகரிலே என்கிற காலத்தால் அழியாத […]

The post பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சந்திரபாபு பாடி, ஆடி நடித்த புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை.. என்ற பாடல் காலத்தால் அழியாதது.

ஏவி.எம். தயாரிக்க கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்களால் உருவான அன்னை திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம் பெற்றது.
 சந்திரபாபு, பானுமதி, சௌகார் ஜானகி, என்.வி.ரங்காராவ் மற்றும் சந்திரபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் தோன்றினர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுதியிருந்தார். ஆர்.சுதர்சனம் இசை அமைக்க,  கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரும் பாடல்களை எழுதி இருந்தனர். அழகிய மிதிலை நகரிலே என்கிற காலத்தால் அழியாத பாடல் இடம் பெற்றதும் இப்படத்தில்தான்.

இந்த படம் உருவாகிக்கொண்டு இருந்த காலத்தில்  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் கவிஞர் கண்ணதாசன். அப்போது திமுகவிலிருந்து  தமிழ் தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.   1962 தேர்தலில், அக் கட்சி சார்பில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டி இட்டார்.  தனது அறிவு திறமை அத்தனையும் பயன்படுத்தி பேசினார்,  தொகுதி முழுக்க புயல் போல் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்.

ஆனால் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

இந்த சூழலில்தான், அன்னை படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது.  படத்தில் நாயகன் விரக்தியுடன் பாட வேண்டிய காட்சி. கவிஞரும் விரக்தியில்தான் இருந்தார்.

ஆகவே இரண்டுக்கும் பொருந்தும் வகையில், ‘புத்தி உள்ள மனிதருக்கு வெற்றி கிடைப்பதில்லை..’ என்ற பாடலை எழுதினார்.

அது இன்றுகூட பலரும் நினைத்துப் பார்க்கும் பாடலாக அமைந்துவிட்டது. அதுதான் காலத்தால் அழியாக கவிஞர் கண்ணதாசனின் படைப்புத்திறன்.

 

The post பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! https://touringtalkies.co/chance-to-act-what-happened-to-kannadasan/ Mon, 24 Oct 2022 02:05:47 +0000 https://touringtalkies.co/?p=25921 கண்ணதாசன் என்றாலே கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும். ஏனென்றால் காலத்தால் அழியாத எத்தனையோ அருமையான பாடல்களை நமக்கு அளித்தவர் அவர். ஆனால் ஒரு படத்தில்  அவர் பாடல் எழுத வாய்ப்பு கேட்க.. “பாடல் வேண்டாம்.. நடிக்க வாருங்கள்” என்று கூறப்பட்டது. ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான். இப்படி பாடல் மறுக்கப்பட்டு கண்ணதாசன் நடித்த திரைப்படம், பராசக்தி. சிவாஜி நடித்த முதல் படமான பராசக்திதான். பாடல் வாய்ப்பு கேட்ட கண்ணதாசனிடம், தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், “பாடல் […]

The post நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
கண்ணதாசன் என்றாலே கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும். ஏனென்றால் காலத்தால் அழியாத எத்தனையோ அருமையான பாடல்களை நமக்கு அளித்தவர் அவர்.

ஆனால் ஒரு படத்தில்  அவர் பாடல் எழுத வாய்ப்பு கேட்க.. “பாடல் வேண்டாம்.. நடிக்க வாருங்கள்” என்று கூறப்பட்டது.

ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.

இப்படி பாடல் மறுக்கப்பட்டு கண்ணதாசன் நடித்த திரைப்படம், பராசக்தி. சிவாஜி நடித்த முதல் படமான பராசக்திதான்.

பாடல் வாய்ப்பு கேட்ட கண்ணதாசனிடம், தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், “பாடல் எழுத ஏற்கெனவே கவிஞர்களை ஒப்பந்தம் செய்துவிட்டேன். சில காட்சிகளில் நடி. நிச்சயமாக உணக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்” என்றார்.

அவரது வார்த்தையைத் தட்ட முடியாத கண்ணதாசனும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெரிய வேடம் இல்லை. சிறிய வேடம்தான்.

தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் கூறியது போல பிற்காலத்தில் முக்கிய பிரபலமாக ஒளிர்ந்தார் கண்ணதாசன்.  ஆனால் நடிகர் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு கவிதையில் உயர்ந்தார்.

அதன் பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

“அப்போதெல்லாம் பி.ஏ. பெருமாள் அன்று கூறியதை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்வேன். மூத்தோர் வாக்கு பொய்ப்பதில்லை” என்று சொல்லி இருக்கிறார் கண்ணதாசன்.

The post நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! https://touringtalkies.co/kannadasan-advance-20-paise/ Sat, 22 Oct 2022 15:36:23 +0000 https://touringtalkies.co/?p=25831 திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர். இந்த நிலையில், 1971ம் வருடம் நீலநாராயணன் என்பவர், ‘அன்புக்கு ஒரு அண்ணன்’  என்ற திரைப்படத்தை தயாரித்தார். படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். ஆதலால் கண்ணதாசனின் வீட்டிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் இருவரை அனுப்பி பேசச்சொன்னார். அவர்களும் கண்ணதாசன் வீட்டுக்கு வந்து விபரத்தைச் […]

The post 20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! appeared first on Touring Talkies.

]]>
திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர்.

இந்த நிலையில், 1971ம் வருடம் நீலநாராயணன் என்பவர், ‘அன்புக்கு ஒரு அண்ணன்’  என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். ஆதலால் கண்ணதாசனின் வீட்டிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் இருவரை அனுப்பி பேசச்சொன்னார்.

அவர்களும் கண்ணதாசன் வீட்டுக்கு வந்து விபரத்தைச் சொன்னார்கள். அவரும் பாடல் எழுத ஒப்புக்கொண்டார்.

இறுதியில், அவரிடம் அவரிடம் 20 பைசா நாணயம் ஒன்றை அளித்தார்கள்.  “இதுதான் அட்வான்ஸா” என அதிர்ந்த கண்ணதாசன், “ ஏதோ அந்த நிறுவனத்தின் சென்ட்டிமென்ட் போலும்” என நினைத்தார்.

வந்த இருவரும் அடுத்து எம்.எஸ்.வியை புக் செய்ய செல்வதாக கூறிச்சென்றனர். ஆகவே கண்ணதாசன் எம்.எஸ்.வி.க்கு போன் செய்து,  விசயத்தைக் கூறி, “அதிர்ந்துவிடாதே..” என கூறி போனை வைத்து விட்டார்.

எம்.எஸ்.வி. வீட்டுக்குச் சென்ற பட நிறுவன பிரதிந்திகள், அவரிடம் பேசிவிட்டு, ஒரு தங்க நாணயத்தை அட்வான்ஸாக அளித்தார்கள்.  ஆச்சரியப்பட்ட அவர், “கண்ணதாசனுக்கு இருபது காசுதான் கொடுத்தீர்களாமே” என கேட்டிருக்கிறார்.

சில மணி நேரத்திற்கு பின் அந்த பிரதிநிதிகள் எம்.எஸ்.வியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எம்.எஸ்.வியிடம் விவரத்தை கூறி ஒரு தங்க நாணயத்தை அவரிடம் கொடுத்தனர். உடனே எம்.எஸ்.வி. “கண்ணதாசனை ஒப்பந்தம் செய்யப்போன போது இருபது பைசா நாணயத்தை கொடுத்தீர்களாமே” என அவர்களிடம் கேட்டார்.

தயாரிப்பு நிர்வாகிகள் அதிர்ந்துபோய்,  “கண்ணதாசனுக்கும் தங்க நாணயம் கொடுக்க வேண்டும். ஆனால்  அதே வடிவில் இருந்த 20 பைசா நாணயத்தை தவறுதலாக அளித்துவிட்டோம்” என பதறி உடனடியாக கண்ணதாசன் வீட்டுக்குச் சென்று தங்கக்காசினை அளித்தனர்.

திரைத்துறையில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான சம்பவங்கள்!

The post 20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் https://touringtalkies.co/cinema-varalaaru-78-msv-refuses-of-kannadasans-lyrics/ Mon, 17 Jan 2022 13:57:47 +0000 https://touringtalkies.co/?p=20275 தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம். கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன். அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் […]

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம்.

கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன்.

அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் பிறந்த தினம்.

1927-ம் ஆண்டு கண்ணதாசன் பிறக்க,  அதற்கு ஒரு வருடம் தள்ளி 1928-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தார்.

சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த பாலும் பழமும்’ படத்தில இடம் பெற்றிருந்த  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று தொடங்கும் பாடலை  எழுதிய கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவருமே அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். அப்படி அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த  அவர்களுடைய முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது.

அப்போது  ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில்  இசை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் . எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும்  அந்த மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி  அந்த மெட்டுக்குரிய பாடலை அவர்களிடம் எழுதி வாங்குகின்ற வேலை அவருடையதாக இருந்தது.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  கன்னியின் காதலி’ என்ற படத்திலதான்  கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய  முதல் இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடல்களை எழுதிய பிறகே  எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆகவே அவரைச்  சந்திக்கக் கூடிய வாய்ப்பு விஸ்வநாதனுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற  மூன்றாவது பாட்டுதான் அவர்களுடைய முதல் சந்திப்பிற்கு வழி வகுத்தது.

பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்துக் காண்பித்தவுடன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று அந்தப் பாடலுக்கான பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் கொடுத்தார் கண்ணதாசன்.  

எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டிய மெட்டுக்கு அந்தப்  பாடல் வரிகள் மிகச்   சரியாக பொருந்தி  இருந்தாலும் அந்தப் பல்லவியில் இடம் பெற்றிருந்த களி’, ‘கூத்து’ போன்ற வார்த்தைகள் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.

“அது என்ன ‘களி’, ‘கூத்து’? அதெல்லாம் சரியாக இல்லை. மாற்றி எழுதிக் கொடுங்கள்” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னபோது அவரைப் பார்த்து கண்ணதாசன் முறைத்த முறைப்பில் விஸ்வநாதன் எரிந்து போகாமல் இருந்தது அதிசயம்தான் . அந்த அளவு கோபத்தோடு அவரைப் பார்த்து முறைத்தார் அவர். “நீயெல்லாம்  எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்ற கேள்வியும்  அந்த முறைப்புக்குள்  இருந்தது.

அப்போது விஸ்வநாதன் இருபத்தியோரு வயது இளைஞர். ஆகவே கண்ணதாசனின் முறைப்புக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட  அசரவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார் ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி.

“என்னடா பல்லவியை எழுதிட்டானா?” என்று விஸ்வநாதனைப் பார்த்து கேட்ட அவர்  “எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்” என்றார். “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று கண்ணதாசன் எழுதியிருந்த பல்லவியை விஸ்வநாதன் படித்துக் காட்டிய உடன் “என்னடா இது களி’, ‘கூத்து’ன்னு? இந்த வார்த்தைகள் எல்லாம் இவனுக்கு ஒத்து வராதே” என்று கண்ணதாசனைப் பார்த்து சொன்ன அவர் “சரி சரி அதை மாத்தி எழுதிக் கொடுத்து விடு” என்று கண்ணதாசனிடம்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் மேல் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் கண்ணதாசனால் அதை வெளியே காட்ட முடியவில்லை. அதற்கிடையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம்  வந்த உடுமலை நாராயணகவி  “என்னடா மாத்தி எழுதி கொடுத்தானா இல்லையா?” என்று விஸ்வநாதனிடம்  கேட்டார்

“இன்னும் எழுதித் தரவில்லை” என்று அவர் பதில் சொன்னதும் “சரி இப்படி மாத்திக்கோ” என்று சொல்லி விட்டு “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்பதற்கு பதிலாக “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டுப் பார்” என்றார் அவர்.

அவர் சொன்ன வார்த்தைகளை அந்த மெட்டுக்குள் பொருத்திப் பார்த்த விஸ்வநாதன் “ரொம்ப சரியாக  இருக்கு” என்றார். உடுமலை நாராயண கவி எந்த அளவிற்கு பண்பாளர் என்பதற்கு அடையாளம்  அடுத்து  அவர் கண்ணதாசனைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தான். 

“காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்ற வார்த்தைகள்தான் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள் என்பதெல்லாம் இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் அவன்” என்று கண்ணதாசனிடம் கூறினார் அவர்.

அதற்குப் பிறகு பல படங்களில் இணைந்து கண்ணதாசனும், விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினாலும் அவர்களது நட்பிலே நெருக்கம் உண்டானது மகாதேவி’ படத்தில பணியாற்றியபோதுதான்.

அந்தப் படத்திற்குப் பிறகுதான்  கண்ணதாசனை கவிஞரே’ என்று விஸ்வநாதனும் ‘விசு’ என்று விஸ்வநாதனை கண்ணதாசனும் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனி புத்தகமாகவே எழுதலாம்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு ஒரு பாடலாசிரியர்-இசையமைப்பாளர் என்பதை தாண்டிய ஒரு உறவு. அப்படி கண்ணதாசன்  மீது நேசம் கொண்டிருந்த  விஸ்வநாதன்தான் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது நட்பு,தொழில் ஆகிய இரண்டையும் எவ்வளவு அழகாக அவர் கையாண்டிருக்கிறார் என்று  வியப்பு கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.

கண்ணதாசன்  அறிமுகமானதில் இருந்தே பல படங்களில் பாட்டு எழுத அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் எல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதும் சூழ்நிலையே இருந்தது.  தனது பாட்டுச் சுதந்திரத்தை அந்த மெட்டுகள் பறிப்பதாக  எண்ணினார் கவிஞர்.

ஒரு நாள் திடீரென்று விஸ்வநாதனை அழைத்த அவர் “டேய் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதில் மொத்தம் பத்துப் பாட்டுக்கள். அந்த பத்துப் பாடல்களையும் நான் முதலில் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்த வரிகளுக்குத்தான் நீ மெட்டுப் போட வேண்டும் என்ன சரியா? இடையில இந்த பாட்டுக்கு மட்டும்நான் முதல்ல மெட்டுப் போட்டு விடுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது…” என்றார் கண்ணதாசன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும்  அதற்கு ஒப்புக் கொண்டனர். அப்படி உருவாகிய படம்தான் மாலையிட்ட மங்கை’. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு மறு வாழ்வு தந்த அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே அவ்வளவு இனிமையாக அமைந்திருந்தன. “அந்தப் படம் வந்த பிறகுதான் என்னுடைய தொழிலில் இருந்த மந்த நிலைமை மாறி வெகு வேகமான முன்னேற்றம் பிறந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

‘மாலையிட்ட மங்கை’ படம் வெளியான அன்று  பயத்துடன்தான் நான் ‘பாரகன்’ தியேட்டருக்குப் போனேன். டைட்டில் காட்டும்போதே மகாலிங்கத்தின் கம்பீரமான குரல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்று முழங்கியது.படத்தைப் பார்க்க   பெருவாரியாக வந்திருந்த கழகத் தோழர்கள் அனைவரும் பலமாக கை தட்டினார்கள். மகாலிங்கத்திடம் அவர்களுக்குப் பிரியம் வந்துவிட்டது. படத்தையும் பிரமாதமாக அவர்கள் ரசித்தார்கள் படமும் நன்றாக ஓடியது…” என்று குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனும், விஸ்வநாதனும் பாடல் ஒத்திகைக்காக அமர்ந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். ஒருவரையொருவர் அந்த அளவிற்கு கிண்டல் செய்து கொள்வார்கள்.

கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக அமைந்ததை விஸ்வநாதன் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? எந்த பாடலாசிரியராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்பதானே எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூழ்நிலை என்றால் படத்தின் சூழ்நிலை அல்ல – பாடல் எழுதும்போது கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இருந்தாரோ அது அவரது பல பாடல்களில் எதிரொலித்திருக்கிறது.

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-71 – கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல் https://touringtalkies.co/cinema-varalaaru-71-a-war-between-sivan-and-kannadaasan/ Fri, 29 Oct 2021 14:26:31 +0000 https://touringtalkies.co/?p=19130 1956-ம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய கடும் புயலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் புயல் நிவாரணத்திற்கு நிதி வசூல் செய்து தாருங்கள் என்று அண்ணா அறிக்கை விட்டார். அப்போது சிவாஜி கணேசன் திராவிட முன்னேற்றக் கழகத்திலே உறுப்பினர் இல்லை என்றாலும் அறிஞர் அண்ணா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். ஆகவே அண்ணாவின் அறிக்கையைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு விருதுநகர் வீதிகளிலே தெருத்தெருவாக அலைந்து ‘பராசக்தி’ பட வசனங்களை எல்லாம் […]

The post சினிமா வரலாறு-71 – கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல் appeared first on Touring Talkies.

]]>
1956-ம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய கடும் புயலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் புயல் நிவாரணத்திற்கு நிதி வசூல் செய்து தாருங்கள் என்று அண்ணா அறிக்கை விட்டார்.

அப்போது சிவாஜி கணேசன் திராவிட முன்னேற்றக் கழகத்திலே உறுப்பினர் இல்லை என்றாலும் அறிஞர் அண்ணா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். ஆகவே அண்ணாவின் அறிக்கையைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு விருதுநகர் வீதிகளிலே தெருத்தெருவாக அலைந்து ‘பராசக்தி’ பட வசனங்களை எல்லாம் பேசி நிதி சேர்த்தார்.

பின்னர் அந்தத் தொகையை அறிஞர் அண்ணாவிடம் சேர்க்கச் சொல்லி அனுப்பி விட்டு  சேலத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த  படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சிவாஜி சேலத்திற்கு போய்விட்டார்.

அவர் அங்கே படப்பிடிப்பில் இருந்தபோது புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி வசூலித்துத் தந்தவர்களுக்கு சென்னையில்  ஒரு பாராட்டு விழாவை அறிஞர் அண்ணா நடத்த இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

உண்மையில் அந்த புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி சேர்த்துத் தந்தவர் சிவாஜிதான் என்பதால் அந்த விழாவிலே கலந்து கொள்ள நிச்சயம் தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து சேலத்திலே  காத்துக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் விழா நாள் அன்று காலைவரை அவருக்கு அழைப்பு வரவில்லை.

ஒரு வேளை  அழைப்பிதழை சென்னையில் உள்ள தனது வீட்டில் கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தனது தாயாரைத் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு “இன்று மாலை நடைபெறும் விழாவுக்கு யாராவது  அழைப்பிதழைக் கொண்டு  கொடுத்தார்களா?” என்று கேட்டார் சிவாஜி. “யாரும் எதுவும் கொண்டு வந்து கொடுக்கவில்லையே..” என்றார் அவருடைய தாயார்.

மதியத்துக்கு மேல் சென்னையில் உள்ள வீட்டுக்கு நேரடியாக  வந்து விழாவிலே கலந்து கொள்ள அழைத்தார்கள் என்றால்  சேலத்திலிருந்து அப்போது கிளம்பிப் போய் எப்படி அந்த பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள முடியும் என்று எண்ணிய சிவாஜி  காலையில் சேலத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு மதியம் நான்கு மணிக்கு  சென்னை வந்து சேர்ந்தார்.

அப்படி அவர் புறப்பட்டு வந்ததற்கு முக்கியமான  காரணம் தன்னை அழைக்காமல் அந்த விழாவை நடத்த மாட்டார்கள் என்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கை.

நான்கு மணி முதல் விழாவிற்கு கூப்பிட யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்து வாயிலைப் பார்த்தபடியே  வீட்டில் காத்துக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் மாலை ஆறு மணிவரையிலே அவருக்கு அழைப்பும் வரவில்லை. அவரை விழாவிற்கு அழைத்துப் போக ஆட்களும் வரவில்லை  அதற்குப் பிறகு நடந்தது என்ன எனபதைப் பற்றி தனது சுயசரிதை நூலில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் சிவாஜி.

“மாலை ஆறு  மணிக்கு பாராட்டுக் கூட்டம் நடக்கிறது. அப்போதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்த கூட்டத்திலே மேடையேற்றி கவுரவிக்கிறார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை அந்த கூட்டத்திலே மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.

“எங்கே கணேசன் வரவில்லையா?” என்று அண்ணா கேட்டபோது “இல்லை.. வர முடியவில்லை என்று சொல்லி விட்டார்” என்று அண்ணாவிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அண்ணாவைச் சுற்றியிருந்த சிலர் அண்ணாவிடமிருந்து என்னைப் பிரித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார்கள்.

அன்று நடந்த அந்தச் சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. நான் எல்லா அவமதிப்பையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. அந்த நிகழ்ச்சியால் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். ஏனென்றால் சின்னப் பிள்ளையிலிருந்து அந்த இயக்கத்திலே ஒட்டிக் கொண்டிருந்தவன் நான்.  என்னைத் தூக்கிப் போட்டுவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆரைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்று நடந்த அந்த சம்பவத்துக்கு அண்ணன் எம்.ஜி.ஆர். காரணமில்லை.“ என்று அந்த நூலிலே  தனது மன வேதனையைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார் சிவாஜி.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பைத்தியம் பிடித்தவர் போல சிவாஜி  உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த இயக்குநர் ஏ.பீம்சிங் “கணேசா… ஏன் இப்படி நிலை குலைந்து போய் இருக்கிறாய்?  வா.. திருப்பதி போய் வரலாம்” என்று சிவாஜியை அழைத்தார்.

“நான் சாமி கும்பிடும் மன நிலையில் இப்போது இல்லை” என்று சிவாஜி திரும்பத் திரும்பச் சொன்ன போதும் அவரை விடாமல் வற்புறுத்தி திருப்பதிக்கு அழைத்துச் சென்று விட்டார் பீம்சிங். அவர்கள் திருப்பதிக்கு கிளம்பிய அன்று கடும் மழை காரணமாக வழியெங்கும் வெள்ளக் காடாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர்களால் மறு நாள் காலை நான்கு மணிக்குத்தான் திருப்பதியை அடைய முடிந்தது.

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே பதினாறு மணி நேரம் பயணம் செய்து சிவாஜி மேற்கொண்ட அந்த திருப்பதிப்  பயணம் அவ்வளவு பெரிய திருப்பங்களை தனது வாழ்க்கையில் உண்டு பண்ணப் போகிறது என்று சிவாஜி உட்பட யாருமே கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

திருப்பதி கோவில் வாசலில் சிவாஜியைப் பார்த்த ஒரு  பத்திரிக்கை நிருபர் தனது பத்திரிகைக்கு அந்தச் செய்தியைத் தெரிவிக்க சிவாஜி திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பியபோது “நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்” என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக சிவாஜி திருப்பதி சென்றதைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.

அப்போது சிவாஜிக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்ற போதிலும் சிவாஜி திருப்பதிக்கு சென்றதைப் பற்றி அமிலம் போன்று எரித்து விடக் கூடிய வார்த்தைகளால் சிவாஜியை மனம் போனபடி தன்னுடைய “தென்றல்” பத்திரிகையில் தாக்கி எழுதினார் கண்ணதாசன்.

அத்தோடு கண்ணதாசன் நின்றிருந்தால்கூட சிவாஜி பெரிதாக அவர் மீது ஆத்திரப்பட்டிருக்கமாட்டார். சிவாஜி படுகுழியில் புதைந்திருப்பதைப் போன்ற ‘தெனாலிராமன்’ படத்தின் புகைப்படத்தைப் பத்திரிகையிலே வெளியிட்டு அதற்குப் பக்கத்திலே “கணேசா இதுதான் உன்னுடைய எதிர்காலமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதைப் பார்த்த சிவாஜி அளவில்லாத ஆத்திரம் அடைந்தார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிவாஜி, வாகினி ஸ்டுடியோவில்  படப்பிடிப்பில் இருந்தது  தெரியாமல் அந்த ஸ்டுடியோவிற்குள்ளே அடி எடுத்து வைத்தார் கண்ணதாசன். அவர்  ஸ்டுடியோவிற்குள்ளே வந்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன் ஆத்திரத்தோடு  தன்னுடைய படப்பிடிப்பு தளத்திலிருந்து சிவாஜி வெளியே ஓடி வர அவர் அப்படி வருவதைப் பார்த்த கண்ணதாசன் அவருடைய கையில் சிக்கினால் நிச்சயம் பிரச்னைதான் என்ற பயத்தில் அருகில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குள் ஓடிவிட்டார்.

அங்கேயும் அவரை விடாமல்  துரத்திய சிவாஜி “அவனை  ஒரு அடியாவது அடிக்காமல் என் மனம் ஆறாது” என்று குமுற அவரைத் தடுத்து நிறுத்திய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் “அவனை அடிச்சிட்டா எல்லாம் சரியாகிவிடுமா? ஆத்திரத்தில் அறிவில்லாமல் எதையாவது செய்யாதே.. உனக்கும், அவனுக்கும் என்ன பிரச்னை..? அதை முதலில் அதை என்னிடம் சொல்” என்றார்.

‘தெனாலி ராமன்’ படத்தின் புகைப்படத்தைப் போட்டு கண்ணதாசன் தன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் பற்றி எல்லாம் அவரிடம் விளக்கமாக சிவாஜி சொல்ல “இவன் எழுதிட்டான்னா அது அப்படியே நடந்துடுமா..? அதையெல்லாம் போய் பெரிசாக எடுத்துக்கிட்டு” என்று சிவாஜியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த  கலைவாணர்,  “உனக்கு சிவாஜியின் கொள்கை பிடிக்கலேன்னா நீ ஒதுங்கிக்க. அதை விட்டுட்டு அவனை எதுக்காக பத்திரிகையிலே திட்டறே..? நீ வெறும் பத்திரிகைக்காரனாக மட்டும் இருந்தா பரவாயில்லை. சினிமால கதை, வசனம், பாட்டு எல்லாம் எழுதிக்கிட்டிருக்கே. அப்படி இருக்கும்போது  தேவையில்லாமல் எல்லோருடைய விரோதத்தையும் தேடிக் கொள்ளாதே” என்று கண்ணதாசனுக்கு புத்திமதி கூறினார். 

சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் இடையே நடந்தது வெறும் வாக்குவாதம்தான் என்ற போதிலும் மறுநாள் எல்லா பத்திரிகைகளிலும் சிவாஜி, கண்ணதாசன் ஆகிய இருவரும் செருப்பால் அடித்துக் கொண்டு சண்டை போட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

சிவாஜியை மிகவும் கடுமையாகத்  தாக்கி கண்ணதாசன் விமர்சித்திருந்த போதிலும் தன்னுடைய படங்களுக்கு  பாட்டெழுத கண்ணதாசனை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சிவாஜி தன்னுடைய தயாரிப்பாளர்கள் எவரிடமும் கூறவில்லை.

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் கடுமையான மோதல் நடந்ததாகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்த சிவாஜி படத் தயாரிப்பாளர்கள் கண்ணதாசனை  தங்களது படங்களில் தவிர்க்கத் தொடங்கினார்கள்.

1957-ம் ஆண்டிலும் 1958-ம் ஆண்டிலும் சிவாஜி நடித்த படங்களில் ‘அம்பிகாபதி’ படம் தவிர சிவாஜி நடித்த வேறு எந்த படத்திலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெறவில்லை.

ஏறக்குறைய மூன்றாண்டுகள் பிரிந்திருந்த அவர்களை மீண்டும் சேர்த்து வைத்தவர் அந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு வகையில் காரணமான ‘அந்த’ இயக்குநர்தான்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-71 – கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல் appeared first on Touring Talkies.

]]>