Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – Touring Talkies https://touringtalkies.co Sat, 05 Nov 2022 17:59:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது https://touringtalkies.co/aishwarya-rajinis-laal-salaam-movie-begins-today/ Sat, 05 Nov 2022 17:58:43 +0000 https://touringtalkies.co/?p=26642 கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். […]

The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ் மற்றும் படத் தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் N.சுப்ரமணியன், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் லைகா  நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் லைகா நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.

The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு https://touringtalkies.co/dhanush-aishwarya-announced-seprerated/ Mon, 17 Jan 2022 18:26:33 +0000 https://touringtalkies.co/?p=20280 நடிகர் தனுஷ் தானும் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக இன்றைக்கு அறிவித்துள்ளனர். இது […]

The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் தானும் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக இன்றைக்கு அறிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.  இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.  ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

இந்தத் தம்பதிகள் பற்றிய எந்தவொரு நெகட்டிவ் செய்தியும் எப்போதும் வெளிவந்திருக்காத நிலையில் இந்தத் திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தமிழ்த் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>