Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
எஸ்.பி.பாலசுப்ரமணியம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 May 2022 11:28:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png எஸ்.பி.பாலசுப்ரமணியம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு https://touringtalkies.co/the-mansion-will-be-built-for-spb-his-son-charan-announced/ Sun, 26 Sep 2021 10:22:17 +0000 https://touringtalkies.co/?p=18279 எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகத்தின் பிரபலமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்ற ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் வந்தார்கள். கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே […]

The post “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகத்தின் பிரபலமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்ற ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் வந்தார்கள். கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மட்டுமே தோட்டத்தின் உள்ளே சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்பு எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரண் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “தற்போதைய கொரோனா சூழலால் காவல் துறையினர் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் அவரது ரசிகர்களை எங்களால் உள்ளேவிட முடியவில்லை.

தெலுங்கில் 22 ஆண்டுகளாக அப்பா நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவுக்கு என்ன பண்ணப் போகிறோம் என்றால், முதலில் அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அடுத்து இங்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். அதில் ஓவியங்கள் வரைய வேண்டும். மியூசியம், திரையரங்கத்தைக்கூட  கட்ட திட்டமிட்டுள்ளேன்.

இதெல்லாம் ஓராண்டில் முடியக் கூடிய வேலையில்லை. அந்த வேலைகள் எல்லாம் எப்போது முடியும் என்று சொல்ல முடியவில்லை. கண்டிப்பாகக் கூடிய விரைவில் வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.

இதுவரை தமிழக அரசிடமிருந்து இதற்காக எந்தவொரு உதவியையும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து வேலைகளையும் ஓவியங்களாக வரைந்து கொண்டு போய் தமிழக அரசிடம் காட்டவுள்ளேன்.

எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணமும் எங்களிடம் உள்ளது…” என்றார்.

The post “SPB-க்கு மணிமண்டபம் கட்டப்படும்” – அவரது மகன் சரண் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு https://touringtalkies.co/i-have-always-been-in-the-mind-of-spb-ilayaraja-tribute-speech/ Sat, 25 Sep 2021 13:52:33 +0000 https://touringtalkies.co/?p=18265 சென்ற வருடம் இதே நாளில்தான் பிரபல பின்னணிப் பாடகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் திரைப்பட இசைக் கலைஞர்கள்  சங்க வளாகத்தில் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா, ‘இசை ஞானி’ இளையராஜா, பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து […]

The post “SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சென்ற வருடம் இதே நாளில்தான் பிரபல பின்னணிப் பாடகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

சென்னையில் திரைப்பட இசைக் கலைஞர்கள்  சங்க வளாகத்தில் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா, இசை ஞானி’ இளையராஜா, பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளையராஜா எஸ்.பி.பி.யின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இந்த விழாவில் இளையராஜா பேசும்போது, ‛‛எனக்கும், பாலுவுக்கும் இடையேயான நட்பு அனைவருக்குமே தெரியும். அவர் அனைவரிடமும் சர்வசாதாரணமாக பழகக் கூடிய ஒரு உன்னதமான மனிதர்.

எங்கள் நட்பில் எப்போதும் எந்த விரிசலும் இல்லை. தொழில் விஷயத்தில் சில பிரச்சினைகள் வந்ததுண்டு. சில நேரங்களில் “என்ன இப்படி பாடுற..?” என்று நான் பேசியிருக்கிறேன், அவரும் “இன்னிக்கு சரியாக வரலை…” என்று பேசியிருப்பார். இது மாதிரி எங்களிடையே இருந்த பழக்கத்தில் தொழில் வேற.. நட்பு வேறாகத்தான் இருந்தது.

எங்கள் நட்புக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். பாலு மருத்துவமனையில்  இருந்தபோது நான் ஒரு வீடியோவில், “பாலு சீக்கிரம் எழுந்து வா… உனக்காக காத்திருக்கிறேன்…” என பேசியிருந்தேன். இந்த வீடியோவை பாலுவுக்கு நினைவு திரும்பிய சமயத்தில் அவரிடம் காண்பித்துள்ளார் அவரது மகன் சரண்.

அதைப் பார்த்ததும் கண் கலங்கி என் வீடியோவிற்கு முத்தமிட்டுள்ளார் பாலு. “யாரையாவது பார்க்கணுமா..?” என அவரிடம் கேட்டபோது “ராஜா வந்தா வர சொல்லுன்னு…” பாலு சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு வார்த்தை போதாதா..? அவருடைய மனசுல எனக்கு எந்த இடம் கொடுத்துள்ளார் என்று…! அந்த மாதிரியான நட்பு எனக்கும், அவருக்கும் உண்டு.

நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் அவரும் இருக்கிறார், நானும் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. இது என்றும் மாறாது. அவர் மறைந்து ஓராண்டு என்பது ஒரு நிமிடம் போல் நடந்துவிட்டது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நடக்க வேண்டிய நேரத்தில், நடப்பவைகள் நடந்து கொண்டேதான் இருக்கும்…”  என்றார் இசைஞானி இளையராஜா.

The post “SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“அப்பாவின் சொத்தை நான் அழித்தேனா..?” – எஸ்.பி.பி.சரணின் விளக்கம்..! https://touringtalkies.co/did-i-destroy-my-fathers-property-description-of-sbp-saran/ Wed, 04 Aug 2021 07:25:35 +0000 https://touringtalkies.co/?p=16738 மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றிய பல வதந்திகள் கடந்த காலங்களில் பரவி வந்தன. எஸ்.பி.பி. கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த மொத்தப் பணத்தையும் சரண் அழித்துவிட்டார். சரணால்தான் எஸ்.பி.பி. தன்னுடைய கோதண்டபாணி ஸ்டூடியோவையே விற்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. எஸ்.பி.பியின் கடைசிக் காலக் கடன் தொலைக்களுக்கு முழு காரணம் எஸ்.பி.பி.சரண் தயாரித்த படங்கள்தான். அவர்தான் படமெடுக்கத் தெரியாமல் எடுத்து பணத்தை நஷ்டமாக்கிவிட்டார் என்றெல்லாம் சரண் மீது குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இது குறித்து இத்தனை நாட்கள் […]

The post “அப்பாவின் சொத்தை நான் அழித்தேனா..?” – எஸ்.பி.பி.சரணின் விளக்கம்..! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றிய பல வதந்திகள் கடந்த காலங்களில் பரவி வந்தன.

எஸ்.பி.பி. கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த மொத்தப் பணத்தையும் சரண் அழித்துவிட்டார். சரணால்தான் எஸ்.பி.பி. தன்னுடைய கோதண்டபாணி ஸ்டூடியோவையே விற்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன.

எஸ்.பி.பியின் கடைசிக் காலக் கடன் தொலைக்களுக்கு முழு காரணம் எஸ்.பி.பி.சரண் தயாரித்த படங்கள்தான். அவர்தான் படமெடுக்கத் தெரியாமல் எடுத்து பணத்தை நஷ்டமாக்கிவிட்டார் என்றெல்லாம் சரண் மீது குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.

இது குறித்து இத்தனை நாட்கள் கழித்து எஸ்.பி.பி.சரண் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “சினிமா மீது எனக்கிருந்த பாசத்தின் காரணமாகத்தான் நான் சினிமா தயாரிக்க முடிவு செய்து அதில் இறங்கினேன்.

நான் முதலில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உன்னை சரணடைந்தேன்’ படத்தைத் தயாரித்தேன். அதற்கு மாநில அரசின் விருதும் கிடைத்தது. ஆனால், படத்தின் மூலம் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.  

அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற  வர்ஷம்’ என்ற படத்தை தமிழில் மழை’ என்ற பெயரில் ரீமேக் செய்தேன். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இல்லையென்று சொல்லவில்லை. அப்போது “இந்த சினிமா தொழிலில் நஷ்டமெல்லாம் சகஜமானது…” என்று அப்பா எனக்கு ஆறுதல் சொன்னார்.

அதன் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் ‘சென்னை-28’ படத்தை எடுத்தேன். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், படத்தின் விற்பனை விவகாரத்தினால்  எனக்கு எதிர்பார்த்த பணம் வரவில்லை.

இதையடுத்துதான் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம் தேசிய விருதுகளை எனக்குப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுவும் வசூல் ரீதியாக எனக்குத் தோல்வியைத்தான் தந்தது.

“நாம் நல்ல படங்கள்தானே எடுத்தோம்.. அப்புறமும் ஏன் நமக்கு மட்டும் நஷ்டம் ஏற்படுகிறது…?” என்று எனக்கு மன உளைச்சல் அதிகமானது.

அந்த நேரம் எங்களின் கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் பல்வேறு காரணங்களினால் பணிகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதுவும் நஷ்டத்தில்தான் இயங்கி வந்தது. அதனால்தான் வேறு வழியில்லாமல் அந்த ஸ்டூடியோவை விற்க வேண்டியதாயிற்று.

இதை பார்த்தவர்களெல்லாம் “பாருங்கப்பா.. எஸ்.பி.பி. இத்தனை வருஷமா சம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் அவர் பையன் வந்து அழித்து அவரை திவாலாக்கிட்டான். அவருடைய மொத்த சொத்தும் அவருடைய பையனால் கரைந்துவிட்டது. இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவுதான்…” என்று எங்களது காது படவே பேசினார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் அப்பா, அம்மா இருவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். மேடை கச்சேரிகள்தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின. அதே நேரத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப் பெரிய சோதனைகள் நடந்தது. டைவர்ஸ் என்று முடிவாகி என் மனைவி, குழந்தையைவிட்டுப் பிரிந்தேன். என் குழந்தையை நான் பார்த்தே இப்போது 10 வருடமாகிவிட்டது.

கடைசியாக இப்போது கொரோனாவால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது. தற்போது தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க என்னை அழைத்து உள்ளனர்.  நானும் ஒத்துக் கொண்டுள்ளேன். இனிமேல் எனது தந்தையின் குரலில் கச்சேரிகளில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்.

ஆனாலும் தயாரிப்புத் தொழிலையும் கைவிடுவதாகவும் இல்லை. நான் விட்டாலும் அது என்னைக் கைவிடாது போலிருக்கிறது. தற்போது முன்னணி ஓடிடி தளத்திற்காக ஒரு வெப் சீரிஸை தயாரித்து, இயக்கி வருகிறேன். விரைவில் படத் தயாரிப்பிலும் இறங்குவேன்..” என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.சரண்.

The post “அப்பாவின் சொத்தை நான் அழித்தேனா..?” – எஸ்.பி.பி.சரணின் விளக்கம்..! appeared first on Touring Talkies.

]]>
“எஸ்.பி.பி.யை பாரதிராஜா எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவர் மாத்திப் பேசுறாரு..” – இளையராஜாவின் வருத்தம்..! https://touringtalkies.co/ilayaraja-spb-bharathiraja-news/ Fri, 12 Feb 2021 05:54:09 +0000 https://touringtalkies.co/?p=12977 “பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நான்தான் இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்…” என்று பல பேட்டிகளில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா கூறியிருக்கிறார். அதேபோல் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இதை ஆமோதித்து, “பாரதிராஜாதான் இளையராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்…” என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார். ஆனால், “இது பொய்யான தகவல்..” என்கிறார் இசைஞானி இளையராஜா. இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “பாலுவை, பாரதிராஜா என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை…” என்று உறுதியாகச் சொல்கிறார். இளையராஜா இது குறித்துப் பேசுகையில், “வெங்கட்ராவ் என்ற ஆந்திரப் […]

The post “எஸ்.பி.பி.யை பாரதிராஜா எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவர் மாத்திப் பேசுறாரு..” – இளையராஜாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
“பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நான்தான் இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்…” என்று பல பேட்டிகளில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா கூறியிருக்கிறார்.

அதேபோல் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இதை ஆமோதித்து, “பாரதிராஜாதான் இளையராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்…” என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

ஆனால், “இது பொய்யான தகவல்..” என்கிறார் இசைஞானி இளையராஜா. இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “பாலுவை, பாரதிராஜா என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை…” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இளையராஜா இது குறித்துப் பேசுகையில், “வெங்கட்ராவ் என்ற ஆந்திரப் பத்திரிகை நிருபரின் மனைவி நடத்தி வந்த நர்சரி பள்ளியின் விழாவிலதான் எஸ்.பி.பி. எனக்கு அறிமுகமானார். அப்போது, ‘பள்ளியில் இசை நிகழ்ச்சி நடத்த பாலு வருகிறார். அதற்குப் பக்க வாத்தியம் வாசிப்பீங்களா..?’ன்னு என்னிடம் கேட்டார்கள். ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து பாலு, ‘என்னோடு நிரந்தர இசைக் குழு அமைத்துப் பணியாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். ஆர்க்கெஸ்ட்ரா துணையோடு அவருக்கு இசைக் குழுவை அமைத்து நடத்தினோம். எங்கள் இருவரது ரசனையும் நெருங்கி வந்ததால், நெருங்கிய நண்பர்களானோம்.

உண்மை இப்படியிருக்க… எல்லா மேடைகளிலும் பாரதிராஜாவும், பாலுவும் ‘பாரதிராஜாதான் பாலுவை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார்’ என ஏன் சொன்னார்கள் என எனக்குத் தெரியவில்லை…” என்று சொல்லியிருக்கிறார்.

The post “எஸ்.பி.பி.யை பாரதிராஜா எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவர் மாத்திப் பேசுறாரு..” – இளையராஜாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>