Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் மனோபாலா – Touring Talkies https://touringtalkies.co Sat, 01 May 2021 11:39:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் மனோபாலா – Touring Talkies https://touringtalkies.co 32 32 படப்பிடிப்பின்போது உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த ‘தல’ அஜீத்..! https://touringtalkies.co/tala-ajith-who-could-not-even-sit-during-the-shooting/ Sat, 01 May 2021 11:35:32 +0000 https://touringtalkies.co/?p=14823 தமிழ் சினிமாவில் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜீத்குமார் ஒரு காலக்கட்டத்தில் சினிமா படப்பிடிப்புக்களில் உட்காரக்கூட முடியாத நிலையிலும் நடித்துக் கொடுத்தார் என்கிறார் நடிகர் மனோபாலா. இன்றைக்கு ‘தல’ அஜீத்தின் 50-வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிப் பேசிய மனோபாலா, “விசாகப்பட்டிணத்தில் ‘கிரீடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கே செல்வதற்கு நேரடியாக விமான சேவையில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் நாங்களெல்லாம் முன்கூட்டியே போய்விட்டோம். அஜீத் ஒரு படப்பிடிப்பில் இருந்தவர், அதை முடித்துக் கொண்டு பைக்கிலேயே விசாகப்பட்டிணத்திற்கு வந்து […]

The post படப்பிடிப்பின்போது உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த ‘தல’ அஜீத்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜீத்குமார் ஒரு காலக்கட்டத்தில் சினிமா படப்பிடிப்புக்களில் உட்காரக்கூட முடியாத நிலையிலும் நடித்துக் கொடுத்தார் என்கிறார் நடிகர் மனோபாலா.

இன்றைக்கு ‘தல’ அஜீத்தின் 50-வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிப் பேசிய மனோபாலா, “விசாகப்பட்டிணத்தில் ‘கிரீடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கே செல்வதற்கு நேரடியாக விமான சேவையில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் நாங்களெல்லாம் முன்கூட்டியே போய்விட்டோம். அஜீத் ஒரு படப்பிடிப்பில் இருந்தவர், அதை முடித்துக் கொண்டு பைக்கிலேயே விசாகப்பட்டிணத்திற்கு வந்து சேர்ந்தார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அவர் நடித்தார். நின்று கொண்டிருக்கும் கார்களின் மீது ஏறியபடியே ஓடி வர வேண்டும். அவர் அப்படி ஓடி வரும்போது ஒரு அம்பாசிடர் காரில் ஏற முடியாமல் கீழே விழுந்தார். அந்தச் சப்தம் தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்களுக்கே நன்கு கேட்டது.

நாங்கள் விழுந்தடித்து ஓடி வந்து அவரைத் தூக்க நினைத்தபோது அவர் யாரும் தன்னைத் தொடக் கூடாது என்று சொல்லிவிட்டு.. அவரே தானாகவே கஷ்டப்பட்டு எழுந்தார். உடனேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கேயிருந்த மருத்துவர்கள் அஜீத்திற்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள். ஆனால் அஜீத்தோ அதற்கு மறுத்துவிட்டார். “இன்னும் ஒரு ஏழு நாள்தான் ஷூட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டுப் பண்ணிக்கிறேன்…” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்த மருத்துவர்கள் இயக்குநர் விஜய்யையும், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியையும் திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

ஆனாலும் அஜீத்தின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியாமல் நாங்கள் திரும்பி வந்தோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்தது. மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத் ஒரு தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

நான் போய் “சேர் போட்டு உக்காரலாமே..?” என்றேன். உடனேயே இரண்டு சேர்களைக் கொண்டு வரச் சொல்லி அதில் என்னை அமரச் சொன்னார். பின்பு என்னிடம் மெதுவாக ரகசியமாக, “என்னால இப்போ உக்காரவோ, எழுந்திருக்கவோ முடியாது.. நிக்கவோ, படுக்கவோதான் முடியும். இப்போதைக்கு என் உடம்போட கண்டிஷன் இதுதான். இதை யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. இந்த ஷூட்டிங்கை முடிச்சிட்டு நான் நேரா ஆஸ்பத்திரிக்குப் போறேன்..” என்றார்.

எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்த நாட்களைக் கழித்தேன். சரியாக அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஒரு ஸ்ட்ரெச்சரில் அஜீத்தை படுக்க வைத்து விமானத்தில் அவரை அழைத்து வந்து சென்னையில் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்புதான் அவருக்கு முதுகில் மேஜர் ஆபரேஷன் நடந்தது…” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மனோபாலா.

The post படப்பிடிப்பின்போது உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த ‘தல’ அஜீத்..! appeared first on Touring Talkies.

]]>
விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! https://touringtalkies.co/actor-kamalhasan-worked-as-assistant-director-in-tik-tik-tik-shooting-spot/ Thu, 03 Dec 2020 12:30:47 +0000 https://touringtalkies.co/?p=10660 “உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதால் வெறுமனே நடிகராக மட்டுமே நின்று கொள்வார் என்பதெல்லாம் இல்லவே இல்லை. கடைசி உதவி இயக்குநராகக்கூட அவர் வேலை செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் என் படங்களில் அந்த வேலையைப் பார்த்திருக்கிறார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். “பாரதிராஜா சொன்னது உண்மைதான்” என்கிறார்கள் ‘இயக்குநர் இமய’த்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இயக்குநர்கள் மனோபாலாவும், கே.ரங்கராஜூம். ‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது ‘இயக்குநர் […]

The post விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
“உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதால் வெறுமனே நடிகராக மட்டுமே நின்று கொள்வார் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

கடைசி உதவி இயக்குநராகக்கூட அவர் வேலை செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் என் படங்களில் அந்த வேலையைப் பார்த்திருக்கிறார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

“பாரதிராஜா சொன்னது உண்மைதான்” என்கிறார்கள் ‘இயக்குநர் இமய’த்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இயக்குநர்கள் மனோபாலாவும், கே.ரங்கராஜூம்.

‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக இருந்த நால்வர் சித்ரா லட்சுமணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. கொஞ்சம்கூட ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால் மிகவும் களைத்துப் போன நிலைமையில் மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன் மூவரும் இருந்துள்ளனர்.

ஒரு நாள் இரவு ஷூட்டிங்கின்போது மனோபாலா கே.ரங்கராஜிடம் “என் வேலையையும் நீயே பார்த்துக்க.. கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு…” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கே.ரங்கராஜ், மணிவண்ணனிடம் இதையே சொல்லிவிட்டு அவரும் தூங்கப் போயிருக்கிறார். மணிவண்ணன் அடுத்து இருந்த கடைசி அஸிஸ்டெண்ட்டான சித்ரா லட்சுமணனிடம் “கொஞ்சம் நீ பார்த்துக்க” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

மிகுந்த களைப்பில் இருந்த இந்த மூவரும் ஒரே காருக்குள் தஞ்சம் புகுந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்போது விடிய விடிய நடந்த அந்த ஷூட்டிங்கின்போது நடிகர் கமல்ஹாசனே கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கிளாப் அடித்திருக்கிறார்.

விடியற்காலை பொழுதில் இந்த மூவர் கூட்டணி மெல்ல, மெல்ல ஸ்பாட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்றைக்கு நல்ல மூடில் இருந்ததால் திட்டு வாங்காமல் தப்பித்தார்களாம்..!

இது எல்லாவற்றையும்விட படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டே கிளாப்பும் அடித்து உதவியிருக்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு ஒரு ‘ஜே‘ போடலாம் என்றுதான் தோன்றுகிறது.

The post விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
காமெடி சீனைக் கேட்டுவிட்டு தெறித்து ஓடிய ரஜினியும், ராதிகாவும்..! https://touringtalkies.co/director-manobala-describes-comedy-scenes-in-oorkavalan-movie/ Wed, 02 Dec 2020 09:11:36 +0000 https://touringtalkies.co/?p=10612 ரஜினி ரசிகர்களால் மட்டுமல்ல.. பொதுவான தமிழ்ச் சினிமா ரசிகர்களால்கூட மறக்க முடியாத ஒரு திரைப்படம் ‘ஊர்க்காவலன்’. தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கியிருந்தவர் இயக்குநர் மனோபாலா. ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது அத்திரைப்படம். அந்தப் படத்தில் இருக்கும் ஒரு காமெடி காட்சி இன்றளவும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக உள்ளது. ரஜினி தூங்கிக் கொண்டிருக்கும்போது, ராதிகா […]

The post காமெடி சீனைக் கேட்டுவிட்டு தெறித்து ஓடிய ரஜினியும், ராதிகாவும்..! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி ரசிகர்களால் மட்டுமல்ல.. பொதுவான தமிழ்ச் சினிமா ரசிகர்களால்கூட மறக்க முடியாத ஒரு திரைப்படம் ‘ஊர்க்காவலன்’.

தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கியிருந்தவர் இயக்குநர் மனோபாலா.

ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது அத்திரைப்படம்.

அந்தப் படத்தில் இருக்கும் ஒரு காமெடி காட்சி இன்றளவும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக உள்ளது.

ரஜினி தூங்கிக் கொண்டிருக்கும்போது, ராதிகா அவரை எழுப்பி, குளிப்பாட்டி, இட்லி சுட்டு வைத்து சாப்பிடச் சொல்லும் அந்தக் காட்சி உம்மணாம் மூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும். ‘ஸ்டைல் மன்னன்’ என்று புகழப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்குள் இருக்கும் இன்னொரு நகைச்சுவை நடிகனை கச்சிதமாக வெளிக்கொணர்ந்த காட்சி இது.

இந்தக் காட்சி உருவானவிதம் குறித்து நடிகர் மனோபாலா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “ஊர்க்காவலன்’ படத்தில் அந்தக் காட்சியை முதலில் ரஜினியை மனதில் வைத்தே திட்டமிட்டிருந்தேன். ஏன்னா ரஜினிக்கு காமெடி  நன்றாக வரும். அதேபோல் ராதிகாவும் ஒரு இன்னசென்ட் கேரக்டர் என்றால் வெளுத்து வாங்கிவிடுவார். அதுவும் எனக்கு நன்கு தெரியும். அதனாலேயே இப்படியொரு காட்சியை நான் கிரியேட் செய்திருந்தேன்.

முதலில் அவர்கள் இருவரிடமும் இந்தக் காட்சியை விளக்கியபோது ஆளுக்கொரு பக்கமாக தெறித்து ஓடிவிட்டார்கள். அப்படி விழுந்து, விழுந்து சிரித்தார்கள் இருவரும். அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது இந்தக் காட்சி நிச்சயமாக ஜெயிக்கும் என்று..!

நான் நினைத்ததுபோலவே ராதிகாவும், ரஜினியும் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் காட்சியில் நடித்திருந்தார்கள். அந்தக் காட்சியில் அவர்கள் இருவரின் நடிப்பும் ஒரு இயக்குநராக எனக்கு ஒரு முழுமையான திருப்தியைக் கொடுத்தது..!

ஆனால் முதலில் அந்தக் காட்சி படத்தின் இடைவேளைக்கு முன்புதான் வைப்பதாக இருந்தது. அப்படித்தான் வைத்திருந்தேன். ஆனால் முழு படத்தையும் பார்த்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், இடைவேளைக்கு பின்பு படம் கொஞ்சம் டிரை ஆக இருப்பது போல உணர்ந்தார். அதனால், அந்தக் காமெடி காட்சியை மட்டும் இடைவேளைக்கு பின்பு வைக்கும்படி சொன்னார்.

அவர்தான் படத்தின் தயாரிப்பாளர். அதோடு என்னைவிடவும் அனுபவம் வாய்ந்த மூத்தவர். அதனால் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து அந்தக் காட்சியை இடைவேளைக்குப் பின்பு பொருத்தமான இடத்தில் பிக்ஸ் செய்தோம்.

இன்றுவரையிலும் ‘ஊர்க்காவலன்’ படம் பற்றிப் பேசுபவர்கள் அந்தக் காட்சியைக் குறிப்பிட்டே பேசுவார்கள். இது அந்தப் படத்திற்குக் கிடைத்த பெருமை..” என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் மனோபாலா.

The post காமெடி சீனைக் கேட்டுவிட்டு தெறித்து ஓடிய ரஜினியும், ராதிகாவும்..! appeared first on Touring Talkies.

]]>
நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! https://touringtalkies.co/ponnu-pidichirukku-producer-leaves-a-director-in-hotel/ Thu, 26 Nov 2020 08:39:42 +0000 https://touringtalkies.co/?p=10392 இப்படியெல்லாம் ஒரு இயக்குநரை அவமானப்படுத்த முடியுமா என்பதுபோல தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானத்தைச் சந்தித்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா. இது பற்றி அவருடைய யு டியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “இது நடந்தது 1983-ம் வருஷம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த திரைப்படம் ‘பொண்ணு புடிச்சிருக்கு’. இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தது நான்தான். மொத்த யூனிட்டும் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருந்தோம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ‘தேஜாஸ்ரீ’ என்ற […]

The post நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.

]]>
இப்படியெல்லாம் ஒரு இயக்குநரை அவமானப்படுத்த முடியுமா என்பதுபோல தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானத்தைச் சந்தித்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.

இது பற்றி அவருடைய யு டியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “இது நடந்தது 1983-ம் வருஷம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த திரைப்படம் ‘பொண்ணு புடிச்சிருக்கு’. இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தது நான்தான். மொத்த யூனிட்டும் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருந்தோம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ‘தேஜாஸ்ரீ’ என்ற பெண்ணை ஆந்திராவில் இருந்து நான் அழைத்து வந்திருந்தேன். அந்தப் பெண்ணிற்கு சரியாக நடிப்பு வரவில்லை. கூச்சம், வெட்கம் இதெல்லாம் சுத்தமாக வரவில்லை. இதை ஒரு நாள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பின்பு, அடுத்த நாள் ஷூட்டிங்கை தொடரலாம் என்று சொல்லியிருந்தேன்.

அன்றிரவு ஹோட்டலில் தூங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்தபோது என்னையும், கேமிராமேனையும் தவிர மொத்த யூனிட்டும் காணவில்லை. அனைவரையும் அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார்.

நாங்கள் காரணம் புரியாமல் கீழே வந்து பார்த்தபோது ரிசப்ஷனில் எங்கள் இருவருக்கும் சேர்த்து 600 ரூபாயைக் கொடுத்து வைத்திருக்கிறார் தயாரிப்பாளர். “அவங்களை மெட்ராஸுக்குக் கிளம்பிப் போகச் சொல்லுங்க” என்று சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். எனக்கு டைரக்சன் சரியா வரலைன்னு தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொன்னாராம்.

எனக்கு மிகப் பெரிய அவமானமாக இருந்தது. அந்த அவமானத்துடனேயே பஸ்ஸில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். அன்றைக்கே நினைத்தேன். நான் ஒரு நல்ல இயக்குநராக வந்து காட்ட வேண்டும் என்று உறுதியெடுத்தேன்.

அடுத்து 8 மாதங்கள் எந்தப் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் ஒதுங்கியிருந்தேன். கதைகளை எழுதினேன். வாய்ப்பு தேடி அலைந்தேன். கடைசியாக ‘பிள்ளை நிலா’ படத்தை இயக்கும் வாய்ப்பு என் குருநாதர்களில் ஒருவரான கலைமணி மூலமாக எனக்குக் கிடைத்தது.

அதன் பின் வரிசையாக பல படங்களை இயக்கினேன். நானும் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவனாக வளர்ந்த பின்பு.. ஒரு நாள் பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் “டைரக்டரே…” என்று அழைத்தார். யார் அழைத்தது என்று தேடி அவரருகில் போய் பார்த்தேன்.

அது தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. “என்னங்க ஸார்…?” என்றேன். “நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்களேன்…” என்றார். இந்த ஒரு நாளுக்காகத்தான் இத்தனை ஆண்டுகளாக நான் காத்திருந்தேன் போலும். “ஸார்.. உங்க பார்வையில நான் இயக்குநரே இல்லை. உங்களுக்கு இயக்குநரா இங்க பல பேர் இருக்காங்க.. அவங்களை வைச்சே நீங்க படம் பண்ணுங்க.. நான் உங்களுக்குப் படம் பண்ண மாட்டேன்..” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் என்னால் மறக்க முடியாத ஒரு அவமானச் சம்பவம் இதுதான்..” என்றார் இயக்குநர் மனோபாலா.

The post நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.

]]>
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு https://touringtalkies.co/actor-manobala-select-as-president-of-tamilnadu-chinnathirai-actors-union/ Sat, 03 Oct 2020 06:44:23 +0000 https://touringtalkies.co/?p=8306 சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குநருமான மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த நடிகர் ரவிவர்மா பல்வேறு குற்றச்சாட்டுக்களால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்தச் சங்கத்தில் இதுவரையிலும் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நேற்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு appeared first on Touring Talkies.

]]>

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குநருமான மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த நடிகர் ரவிவர்மா பல்வேறு குற்றச்சாட்டுக்களால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அந்தச் சங்கத்தில் இதுவரையிலும் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நேற்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு appeared first on Touring Talkies.

]]>